Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, August 01, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (29)

Image result for cartoon of a young man in conversation over phone
ஒரு வாளித்தண்ணீரை முகத்தில் வீசியடிச்சா கூட அதை போர்வையாலேயே துடைத்தெரிஞ்சிட்டு தூங்குகிற இந்த ராஸ்கல் இவ்வளவு காலங்கார்த்தாலே யாரோட பேசிட்டு இருக்கிறான் என்ற யோசனையுடன் காதுகளை மட்டும் கூர்  தீட்டிக்கொண்டு மகனின் அறை வாசலில் மறைவாக நின்றுகொண்டு அவன் பேசுவதைக் கேட்கலானார் வாசுதேவன்.
"டேய் .. சொன்னா கேளுங்கடா..   எங்க வீட்டில் ஆணியே பிடுங்க முடியாது. நான் பிடிங்கி காட்டினா அதை என் கையிலிருந்து பிடிங்கி திரும்பவும் அது இருந்த இடத்திலேயே எங்க வீட்டு பெரிசு அதை நட்டு வச்சுடும். டேய்.. அதைக் கூட தாங்கிக்கலாம்டா. ஆ.. வூ..ன்னா ... ஒரு டயலாக்.. "எனக்குன்னு வந்து பிறந்ததே"னு .. அதைத்தான் தாங்க முடியலடா..  ஏன்டா .. வேறே வேலைவெட்டி இல்லாமே இவங்க நம்மள உற்பத்தி பண்ணி விட்டுட்டு என்னவோ நாம்தான் அடம்பிடிச்சு வந்து பிறந்தமாதிரி டயலாக் விடறாங்க பாரு.. அதை என்னாலே டைஜஸ்ட் பண்ணவே முடியலடா..என்னை எதிர் பார்க்காதீங்க.. நீங்க கிளம்பி போங்க. நாளைக்கு உங்களை காலேஜில் மீட் பண்றேன்.. பை .."
இதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவராக அங்கிருந்து நகர்ந்தார் வாசுதேவன்.

No comments:

Post a Comment