கடந்த கால நினைவலைகளில் மூழ்கியிருந்த பிரபு, மரத்தின் மீதிருந்து தன் மீது ஏதோ விழுந்ததை உணர்ந்து தன்னைத்தானே செக் பண்ண ஆரம்பித்தான். காக்கை எச்சம் ஷர்ட்டில் படிந்திருந்ததைக் கண்டு, மரத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் நினைத்தது சரிதான். காக்கையின் கைங்கர்யத்தான் ..
கீழே கிடந்த குச்சியொன்றை எடுத்து அதைத் தட்டி விட்டான். இருந்தாலும் ஈரக்கரை ஷர்ட்டின் மீது பரவி இருந்தது.
செக்யூரிட்டி இருந்த இடத்துக்கு வந்து கரை பட்ட ஷர்ட்டைக் காட்டி, "இதை க்ளீன் பண்ணிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவனது அனுமதிக்காக காத்திராமல் தோட்டத்தில் குழாய் இருக்கும் இடத்துக்கு வந்தான்.
அவன் போவதை ஜன்னல் வழியாக கவனித்த ராம்குமார், "பிரபு" என்று பெரிதான குரலில் அழைத்தார்.
ஹாலில் கூடியிருந்தவர்களிடம், "ஒரு நிமிஷம் " என்று மன்னிப்பு கேட்பது போன்ற பாவனையில் சொல்லிவிட்டு ஹாலைவிட்டு வெளியில் வந்தார்.
அவரைக் கண்டதும் செக்யூரிட்டி எழுந்து ஓடிவந்து, "நான் பதில் சொல்றதுக்கு முன்னமேயே உள்ளே வந்துட்டார். இதோ இப்போ வெளியே அனுப்பிடறேன் " என்றான்.
"இடியட்" என்று இரைந்த ராம்குமார், "அவர் எப்போ வந்தார் ?"
".மீட்டிங் ஆரம்பிக்கிறப்பவே வந்துட்டார். நான்தான் வெளியில் நிறுத்தி வச்சிருந்தேன். இப்போ அவரே உள்ளே நுழைஞ்சிட்டார் "
"வெளியே நிறுத்தி வச்சிருந்தியா? முட்டாள்.. முட்டாள்.. செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியாத முட்டாள். அவர் என் தம்பிடா. அவர் எப்ப வந்தாலும் உள்ளே அனுப்பணும்" என்று கடுப்பான குரலில் சொன்னார் ராம்குமார்.
அதற்க்குள் அங்கே வந்த பிரபு, "ஒரு காக்கா ஷர்ட்டில் எச்சம் போட்டுட்டுது. அதை க்ளீன் பண்ண போனேன்" என்றான்.
"பழைய செக்யூரிட்டி அவர் வொய்ப்புக்கு டெலிவரி டைம்னு ரெண்டு நாள் முன்னமே லீவில் போயிட்டார் . இவர் புதுசு. ஸாரி பிரபு. நீ வருவேங்கிறதை நானாவது இவரிடம் சொல்லி வச்சிருக்கணும். ஏதோ டென்ஷனில் சொல்ல மறந்துட்டேன். வீட்டு ஆளுங்க யார் .. வெளியாட்கள் யாருங்கிறது இன்னும் இவருக்கு தெரியலே .. ஸாரி .."
"எதுக்கு அண்ணா இத்தனை ஸாரி.. மர நிழலில் ரிலாக்ஸ்ட்டா நின்னுட்டு இருந்தேன். மரத்தடியில் நின்னாலே ஸ்கூல், காலேஜ் டேஸ் நினைவுக்கு வருது. அண்ணி எப்படி இருக்கிறாங்க ? மது எப்படி இருக்கிறான் ?"
" எல்லாரும் நல்லா இருக்கிறோம் " என்று சொல்லி அவன் கைகளை பிடித்து உள்ளே அழைத்து வந்த ராம்குமார், "ஷோபா" என்று குரல் கொடுக்க, அடுத்த நொடியே அங்கு ஓடி வந்த ஷோபா, பிரபுவைக்கண்டதும், " வாங்க தம்பி. நீங்க வருவீங்கன்னு இவர் சொல்லி இருந்தார். காலையிலேயே எதிர் பார்த்தேன் .. ஏன் லேட் ?" என்றாள்.
"தம்பி காலையிலேயே வந்தாச்சு .. அந்த புது செக்யூரிட்டி .. மட ராஸ்கல் .. பிரபுவை வெளியில் நிறுத்தி வச்சிருக்கிறார். உடனே அவன் ஆபீஸ்க்கு போன் பண்ணி வேறொரு ஆளை போட சொல்லு ..சாப்பாட்டை எடுத்து வை. நான் மீட்டிங்கை முடிச்சிட்டு இதோ ஐந்தே ஐந்து நிமிஷத்தில் வந்துடறேன்"
"அண்ணா.. ஒண்ணும் அவசரம் இல்லே. இன்னிக்கு லீவுதானே. எனக்கு அர்ஜென்ட் ஒர்க் எதுவும் கிடையாது. நீங்க உங்க ஷெட்யூலை முடிச்சிட்டு நிதானமா வாங்க. நான் அண்ணியோட பேசிட்டு இருக்கிறேன். டேக் யுவர் ஓன் டைம். அண்ணி மது எங்கே?" என்று கேட்டு பிரபு வாய் மூடும் முன்பாகவே "அங்கிள்" என்றபடி ஓடிவந்து பிரபுவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் மது. அவன் வாயிலிருந்து சாக்லேட் கலந்த எச்சில் நீர் வடிந்து கொண்டிருந்தது.

"டேய்.. அங்கிள் ஷர்ட்டை நாசம் பண்ணாதே" என்று கண்டித்த ஷோபா. "தம்பி சாப்பாடு ரெடி. அவர் வந்ததும் சாப்பிடலாம். இப்போ லைட்டா ட்ரிங்க்ஸ் ஏதாவது .. ?" என்று கேட்டாள்.
"வேண்டாம் அண்ணி.. இப்போ எதுவும் வேண்டாம். அண்ணா வரட்டும். சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை நான் மதுவோட அரட்டை அடிக்கிறேன் "
"சரிப்பா.. முதல்லே இவனை க்ளீன் பண்ணி அழைச்சிட்டு வர்றேன் "
"வேண்டாம் அண்ணி. குழந்தைதானே.. சாக்லேட் சாப்பிட்டு முடிச்சதும் நானே சுத்தம் பண்ணிடறேன்."
பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள் ஷோபா.
அறைக்குள் ஓடி சென்ற மது, கைகளை பின்பக்கமாக காட்டியபடி, "அங்கிள் .. என் கையில் என்ன இருக்கு சொல்லுங்க பார்க்கலாம் " என்றான்.
"சாக்லெட்டா ?"
"இல்லை"
"டாய்ஸ்"
"யெஸ் அங்கிள்.. இதோ பாருங்க டாடி எனக்கு வாங்கிட்டு வந்திருக்கிற மங்கி பொம்மை. போனமாசம் சிங்கப்பூர் போனார்தானே. அங்கே வாங்கிட்டு வந்த பொம்மை .. இந்த மங்கி பேசும்.. இப்போ இது முன்னாடி நின்னு 'உன் பேர் என்ன'னு கேளுங்க "
"உன் பேர் என்ன ?" என்று கேட்டான் மங்கியை தனக்கு நேராகப் பிடித்தபடி.
"உன் பேர் என்ன ?" என்று மங்கி கீச்சு குரலில் கேட்டது.
அதைக் கேட்டு கலகலவென்று சிரித்தான் மது. அவனது உற்சாகம் பிரபுவை யும் தொற்றிக் கொண்டது. அவனும் ஒரு குழந்தையாக மாறி விளையாட ஆரம்பித்தான்.
"டேய்.. அங்கிளை பெண்ட் நிமிர்த்திறியா?" என்ற ராம்குமாரின் குரலைக் கேட்டதும், "அதெல்லாம் ஒண்ணுமில்லே அண்ணா..ஐ எஞ்சாய் " என்றான்.
"ஷோபா"
"எல்லாம் ரெடிங்க.. டைனிங் டேபிளில் எடுத்து வச்சிட்டேன். நீங்க வந்து உட்கார வேண்டியதுதான் பாக்கி."
"கணவனின் குறிப்பறிந்து நடக்கிற மனவினு சொல்வாங்களே.. அது உங்க அண்ணிதான். அவ பெயரை சொன்னேன். அவ்வளவுதான். உடனேயே நான் சொல்ல நினைக்கிறதை புரிஞ்சுகிட்டு பதில் சொல்றா பாரு.. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று பிரபுவிடம் சொல்லிய ராம்குமார் மனைவியின் பக்கம் திரும்பி கண்களை சிமிட்டினார்.
"பிரபு .. உங்க அண்ணன் வெறும் டைரக்டர், ப்ரொடியூஸர் மட்டும் இல்லே. செவாலியே சிவாஜி ..நடிச்சே என்னை மட்டும் அசத்திட்டு இருந்தார். இன்னிக்கு உன் முன்னாலே ஸீன் போடறார். அவர் எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தா " மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"னு பாடுவார். ஒரு சின்ன தப்பு நடந்திட்டா எப்படி ரியாக்ட் பண்ணுவார் தெரியுமா ?"
"தெரியாதே!" என்ற பாவனையில் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தான் பிரபு.
"நீதானே புதிர் போட்டே. நீயே அதை சால்வ் பண்ணு "
"அவ்வளவுதானே.. சால்வ் பண்றேன். "உன்னைச்சொல்லி குத்தமில்லை.. என்னை சொல்லி குத்தமில்லை.. காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குத்தமடி"னு உங்க அண்ணன் பாட ஆரம்பிச்சிடுவார்" என்ற ஷோபா குறும்பு சிரிப்பொன்றை அவர்மீது வீசினாள்.
"வா .. சாப்பிடலாம்.. ஷோபா நீயும் உட்கார். சேர்ந்து சாப்பிடலாம். மது சாப்பாடு முடிஞ்சுதா ?"
"முடிஞ்சுது.. அவன் ஒருத்தனை சாப்பிட வைக்கிறதுக்குப் பதிலா ஒரு விஷேச வீட்டுக்கு சமைச்சு கொடுத்திடலாம். அந்த வேலை அவ்வளவு ஈஸி "
"இதுக்கெல்லாம் சலிச்சுக்காதே.. குழந்தைங்கன்னா அப்படிதான்.. ரசிக்க தெரிஞ்சுக்கோ. எதுவும் கஷ்டமா தெரியாது."
"சரி... சரி.. சாப்பிடுங்க.."
சாப்பாட்டை ருசிப்பதில் சிறிது நேரப்பொழுது அமைதியாக நகர்ந்தது.
"பிரபு உன்னை நம்பி ஒரு பொறுப்பை விடலாம்னு இருக்கிறேன் " என்றார் ராம்குமார் ரசத்தை உறிஞ்சிக் குடித்தபடியே.
"சொல்லுங்கண்ணா.. செய்றேன்."
"அடுத்த படத்துக்கு கதை எழுதற வேலையை உன்கிட்டே கொடுக்கப் போறேன்"
இதைக் கேட்டு பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்த பிரபு, வாயிலிருந்த சாப்பாடு புரை ஏறியதால் இரும ஆரம்பித்தான். எழுந்து வந்து அவன் தலையைத் தட்டி ஆசுவாசப்படுத்தி அருகிலிருந்த தண்ணீர் டம்ப்ளரை எடுத்து அவன் வாயில் மெதுவாக ஊற்றினார் ராம்குமார்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிரபு, "ஜோக் சொல்றீங்களா அண்ணா ?" என்றான்.
"இல்லேப்பா.. நிஜமா சொல்றேன். யார் மேலே ப்ரோமிஸ் பண்ணனும். ஷோபா மேலேயா இல்லே மது மேலேயா ... "
"அண்ணா ... வேண்டாம்னா .. நீங்க ப்ரோமிஸ் எதுவும் பண்ண வேண்டாம். நீங்க சொல்றதை நம்பறேன்.. சினிமாவுக்கு கதை எழுதறவங்க எல்லாரும் ஏதாவது ஸ்ட்ரைக்கில் இருக்கிறீங்களா அண்ணா ?"
"ஏன் அப்படி கேட்கிறே ?"
"என்னை எழுத சொல்றீங்களே.. அதான்.. எனக்கு என்ன தெரியும்னு இவ்வளவு பெரிய பொறுப்பை எங்கிட்டே கொடுக்கறீங்க ?"
"அனுமாரோட பலம் அவருக்கே தெரியாதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி உன் திறமையை நீ இன்னும் சரியாய் புரிஞ்சுக்கலே. நீ எழுதிய சிறுகதை ஒண்ணு பரிசுக்கதைங்கிற தலைப்பில் விகடன் பத்திரிகையில் வெளியாகி இருந்ததே. அதை படிச்சதில் இருந்தே என் மனசுக்குள் இப்படியொரு ஐடியா இருக்குது"
".................."
"என்ன பிரபு.. பேசாமே இருக்கிறே ! நான் சீரியஸா சொல்றேன். என்னோட அடுத்த படம் வில்லேஜ் சப்ஜெக்ட் .. "
"குருவி தலையில் பனங்காயை வைக்கிறமாதிரி எனக்கு தோணுது."
"உன்னைப்பத்தி நீயே ஏன் தாழ்வா நினைச்சுக்கிறே ?"
"அண்ணா ... நான் கிராமத்தை பார்த்ததே கிடையாது. சினிமாவில் மட்டுமே நான் கிராமத்தை பார்த்திருக்கிறேன்.. ஒரு ஆலமரம்.. ஒரு பித்தளை செம்பு. கையில் கம்போட அடியாள் மாதிரி ரெண்டு ஆட்கள்.. ஆட்டுமந்தை மாதிரி எதுக்கும் தலையாட்டுற அப்பாவி ஜனங்க.. இவங்களை ஏமாத்தற ஒரு நாட்டாமை .. இல்லாட்டா ஒரு பெரும்புள்ளி ... கிராமத்தைப்பத்தி எனக்கு தெரிஞ்சது இதுதான்ண்ணா. படிக்கிற காலத்தில் சைக்கிளில் போவேன். காலேஜ் போற வழியில் ஒரு சில கிராமம் வரும். ஆனா உள்ளே போய் பார்த்ததில்லே.. நான் அடிபட்டு கிடந்ததுகூட ஒரு கிராமத்து எல்லையில் தான். அதுகூட சோஷியல் ஸர்வீஸ் பண்றதுக்காக ஒரு வில்லேஜுக்கு போறதா இருந்துது. அங்கே போற வழியில்தான் நான் ஆக்சிடெண்டில் மாட்டி கிட்டேன். அதுகூட நல்லதுக்குதான்னு தோணுது. இல்லாட்டா நாடறிந்த ஒரு டைரக்டரின் வீட்டின் நடுக்கூடத்தில் ஒரு சாமானியன் உட்கார்ந்து பேச பழக முடியுமா?"
"பிரபு என்னோட கிராமத்து வீட்டுக்கு நீ போ. அங்கே போய் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தங்கி இரு. அந்த கிராமத்து மக்களோட நீ பேசிப்பழகு . அவங்க வாழ்க்கையை ஸ்டடி பண்ணு.. உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்"
- இதை ராம்குமார் சொன்னதும், "ஓஹோ ... கதை அப்படிப் போகுதா ? சரிதான்.. சரிதான்.."என்றாள் குறும்புச்சிரிப்புடன்.
"என்ன அண்ணி ?"
"அட.. அவளை விடு .. நான் சொல்றதை கேளு.. உன்னால் போக முடியுந்தானே . லீவ் கிடைக்கிறதில் ப்ராப்ளம்னா சொல்லு. நான் வந்து பேசிப் பார்க்கிறேன். அதுக்கும் சரிப்பட்டு வரலேன்னா வேலையை ரிஸைன் பண்ணிட்டு வந்திடு . எங்க ஊரில்.. அதாவது வயல்வெளி கிராமத்தில் இருந்து நீ திரும்பினதும் உனக்கு பிடிச்சமாதிரியான வேலைக்கு நான் ஏற்பாடு பண்றேன்."
".............."
"என்ன யோசிக்கிறே ?"
"அம்மா சம்மதிக்க மாட்டா ..."
"அம்மாவையும் கூட அழைச்சிட்டு போ ..."
"அண்ணா.. இப்பல்லாம் அம்மா எங்க வீட்டு நடையைக்கூட தாண்டறதில்லே. நான் பலதடவை கேட்டு பார்த்திட்டேன். பதில் சொல்லலே.. அன்னிக்கு ரொம்ப முடியாமே இருந்தாங்க.. டாக்டர் வீட்டுக்கு வாங்கனு காலில் விழாத குறையா கெஞ்சினேன். மறுத்திட்டாங்க. அவங்களைப்பத்தி அக்கம் பக்கத்தில் யாராவது ஏதாவது சொல்லி இருக்கணும்.. அதை மனசில் வச்சுக்கிட்டு தன்னைத்தானே தண்டிச்சுக்கிறாங்க.. 'அப்படியாவது கடவுளுக்கு என்மேலே இரக்கம் வந்து என்னை சீக்கிரம் கொண்டு போகட்டும்'னு ஒரு கம்ப்யூட்டரைஸ்ட் பதிலை சொல்றாங்க."
"வீட்டுக்கு ஒரு மருமகள் வந்திட்டா எல்லாம் சரியாயிடும்.. பொண்ணு ஏதாவது பார்க்கிறார்களா?"
"என்னோட இருபத்தேழாவது வயசில்தான் எனக்கு கல்யாணம் பண்ணணும். அப்பத்தான் நல்லா இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்கிறாராம். இப்ப எனக்கு இருபத்தாறு வயசு.. அடுத்த வருஷம் பெண் பார்க்க ஆரம்பிச்சிடு வாங்க.."
"நல்லது. நான் சொல்றதை கேளு. நீ இந்த வாரமே எங்க ஊருக்கு அதாவது வயல்வெளி கிராமத்துக்குப் போறே. அதுக்கான ஏற்பாட்டை நான் செய்ய ஆரம்பிச்சிடுவேன். அம்மா பிடிவாதம் பிடிச்சா அவங்ககிட்டே ஷோபா வந்து பேசுவா.. அதிலே உனக்கு அப்ஜெக்சன் இல்லேதானே "
"அம்மா பச்சைக்கொடி காட்டினா இன்னிக்கே கூட நான் கிளம்பிடுவேன்"
"இதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்"
"நீங்க ரெண்டுபேரும் கை அலம்பிட்டு சோபாவில் உட்கார்ந்து மீதி கதையை முடியுங்க" என்றாள் ஷோபா.
"எனக்கு வீட்டிலேயே ஒரு சென்ஸார் போர்ட்" என்று சிரித்தபடி ராம்குமார் சொல்ல அந்த சிரிப்பில் பிரபுவும் கலந்து கொண்டான்.
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் அங்கிருந்து விடைபெற்ற பிரபுவின் மனதில் அம்மாவை சம்மதிக்க வைக்க வேண்டுமே என்ற பெருங்கவலை எழுந்தது.
அம்மாவைப் பற்றி கவலைப்பட்டானே தவிர, அங்கு ... வயல்வெளியில் அவன் வருங்காலம் சின்னாபின்னமாகப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்து வைத்திருக்கவில்லை.
.............. தொடரும் ...............

No comments:
Post a Comment