Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 07, 2017

ஹாய் குட்டீஸ் , குறுக்கெழுத்து புதிர் - 06

இந்தப் பகுதியில் வெளியாகும் புதிர்களை ஆன்-லைனில் சால்வ் பண்ண முடியாது. நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆன்-லைனில் கொண்டு வருவதற்கு. முடியவில்லை. அதனால் இதை பிரிண்ட் பண்ணிதான் நீங்கள் விடை எழுத முடியும். முந்தைய புதிருக்கான விடை வேறொரு பகுதியில் வெளியாகி உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாய்   குட்டீஸ், இதோ உங்களுக்கான    குறுக்கெழுத்து புதிர். இந்தப் 
புதிருக்கான அனைத்து விடைகளும்  "ம" என்ற எழுத்தில்தான் தொடங்கும். இனி நாம் பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். எதையும் விளையாட்டாவே படிக்கலாம்.

         குறுக்கெழுத்து புதிர்     - 6
                              
 1 


  


  

 


  6

   
  8
  

 7

 


  



  
 9

 13

  

   


  2

  

  


  
 3


  

 


  

10

  

  

  


 11
  

  


 
14

 



  
 12
  15
  
  4

 




  
 5

  


 


   

  

  
 13

இடமிருந்து வலம் 
  1  மனதுக்குள் நினைக்கும் பொருளின் வாசனையை தரும் மலர்   ( 7 )  
  2  ஆடுமாடுகள் கூட்டம்  ( 3 ) 
  3  இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பாயும் நதி   ( 4 ) 
  4  மெல்லிய காற்று / தென்றல்  ( 7 ) 
  5  பொது ஆளாக நின்று சமரசம் செய்தல்  ( 7 ) 

வலமிருந்து இடம் 
    2  செம்பருத்தி  ( 5  )
   6   சபை / பொது இடம்  ( 4 ) 
   7   மலர்க்கொத்து   ( 4 ) 
   8   பெண்கள்  ( 4 ) 
   9  தோலினால் ஆன வாத்தியக் கருவி  ( 5 ) 
 10  வம்சம்  ( 3 )  
 11  அரண்மனையின் பாதுகாப்பு சுவர் ( 6 ) 
 12  பெருமை  ( 6 )
 13  துறவிகள் தங்குமிடம்  ( 3 )  

மேலிருந்து கீழ் 
   1  பல்லவர்கள் கல்லிலே கலைவண்ணம் கண்ட ஊர்  ( 7 ) 
   6  ஆண்யானை  ( 4 ) 
   7  அகந்தை  ( 3 ) 
   8  தீபாவளி கொண்டாட்டம்  ( 5 ) 
11  மாசி மாதம் கொண்டாடப்படும் நட்சத்திரம்  ( 3 ) 
12  குழந்தைப் பேச்சு ( 3 ) 
13  சுறுசுறுப்பற்ற தன்மை  ( 5 )  

கீழிருந்து மேல் 
 2  மீன்  ( 4 ) 
 4  கப்பல்  ( 6 ) 
 5  இனிமை / தித்திப்பு  ( 4 ) 
11  குரங்கு  ( 3 )
12  கிரீடம்  ( 4 ) 
14  புரியாத புதிர்  ( 4 ) 
15  வேண்டிக் கேட்டல்  ( 6 ) 

No comments:

Post a Comment