Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, May 09, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 01


"எனக்கு ஒண்ணுமில்லே. நீ ஆபீசுக்குக் கிளம்பிப் போ. நம்ம சிவசங்கர் என்னைப் பார்க்க வர்றேனு சொல்லியிருக்கார். அம்மாதான் இருக்கிறாளே. நீ தைரியமா கிளம்பிப் போ" முருகன் சொல்ல,  என் பயமே உங்கம்மா இருக்கிறத நினைச்சுதான். ஏடா கூடமா எதாது செய்யாமே இருந்தா சரிதான்" என்றாள் சாவித்திரி ..
உடல்நலம் சரியில்லாத தனது நண்பரைப் பார்க்க வந்த டாக்டர், முருகனின் தாயாரைப் பார்த்து விட்டு, ’என்ன பெரியம்மா! எப்போ வந்தீங்க?" என்று கேட்டார்.
" நான் போன வாரம் வந்தேன். நீ எப்படி இருக்கிறேப்பா?" என்றாள் பாட்டி: .
"வழக்கமா நாந்தான் எல்லாரையும் எப்படி இருக்கீங்கனு கேட்பேன். நான் எப்படி இருக்கிறேனு விசாரிக்கிற  ஒரே ஒரு ஆள் நீங்க மட்டுந்தான். ரொம்ப  சந்தோஷமா  இருக்குது!" என்றார் டாக்டர்:
"என் புள்ளே இப்படிக் கண்ணைத் திறக்காமே படுத்திருக்கானே?"
"இப்போ எல்லா இடத்திலுமே ஜுரம் இருக்குது. பயப்படும்படி ஒண்ணும் இருக்காது. வீட்டில் மேடம் இல்லையா? கொஞ்சம் வார்ம் வாட்டர் வேணுமே!"  என்றார்  டாக்டர்.
"நான் கொண்டாந்து தர்றேன்ப்பா. ஊரிலிருந்து வரும்போதே கையோடு கொண்டாந்தேன்’ என்று சொல்லியபடி ஒரு பாட்டிலை  பாட்டி நீட்ட திகைத்து போன டாக்டர் ’என்ன இது?’ என்றார்.
"நீ கேட்டியேப்பா.. ஓம வாட்டர். அதுதான் இது".
"பெரியம்மா.. நான் கேட்டது வாம் வாட்டர். சுடு தண்ணீ.. ஓம வாட்டர் இல்லே ’
"அப்படியா? நான் கூட நினைச்சேன்.. என்ன டாக்டர் இவன்!  காய்ச்சல் காரனுக்குக் குடுக்க ஓமவாட்டர்  கேக்கிறானேனு. அதை பேதியானாத்தானே குடுப்பாங்கனு நினைச்சேன். எங்க ஊர்லே வெந்நீ இல்லாட்டா  சுடுதண்ணினு சொல்லுவோம். அதைப்போய்  நீ ஓமவாட்டர்னு சொல்லுதியே ?"
தனது நண்பரிடம், "வீட்டிலே இப்படியொரு சூப்பர்  டாக்டரை வச்சுகிட்டு, எனக்கு பேதி மருந்து குடுக்கிறியேடா!" என்று அழாக்குறையாக சொன்னார் டாக்டர்.
(படத்துக்கும் மேட்டருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ச்சும்மா ....பார்க்க ... ரசிக்க ...)

No comments:

Post a Comment