Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 16, 2017

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation

முதல்லயே சொல்லிடுதேன் - எனக்கு பொது அறிவு / உலக ஞானம் பூஜ்யம். இதை ஏன் எடுத்த எடுப்பிலேயே சொல்றேன்னா - இங்கே இருக்கிறதை படிச்சு புட்டு "இப்பிடி ஒரு ஞான சூன்யமா /"னு நீங்க மூட் அவுட் ஆயிடக்கூடாது. அதான் ஒரு முன்னெச்சரிக்கை.
என் டவுட் என்னனு சொல்லிப்புடுதேன் . மெத்தப் படிச்சவக, விஷய ஞானம் உள்ளவங்க பதில் சொல்லுங்க. அட... இதை எனக்காக மட்டும் நான் கேட்கலே. எல்லாருக்கும் சேர்த்துதான் கேட்கிறேன். 
உலகின் நீர்ப்பரப்பில் 75 சதவிகிதத்துக்கும் மேல் கடல் என்றும் மீதமுள்ளது மட்டுமே நிலப்பரப்பு என்றும் எங்கோ எப்பவோ படிச்ச ஞாபகம்.
எந்தவொரு கண்டத்தையும் விட்டு வைக்காமே எல்லா இடத்திலும் கடல் தண்ணி சுத்தி நிக்குது ... அப்படித்தானே நாம அர்த்தம் எடுத்துக்கணும்.
ஆதி மனுஷங்களைப் பத்தி படிக்கிறப்ப, அவங்களைப்பத்தி கேள்விப்படறப்ப நான் ரொம்பவும் ஆச்சரியப்பட்டுப் போவேன். எந்த சூழ்நிலையிலும் வாழத் தெரிஞ்சு வச்சிருந்தான். ( நாம் மட்டும் லேசுப்பட்டவங்களா ? நாட்டிலே / நம்மள சுத்தி எது நடந்தாலும் கண்டுக்காமே எருமைமாடு மாதிரி பொறுமையா இருக்க தெரிஞ்சு வச்சிருக்கோமே .. இது எப்பேர்ப்பட்ட ஞானம் !)
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் ஆஹா
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் 
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆள போகிறான்
என்ற சினிமா பாடல் வரிகள் மறக்க முடியாத ஒன்று !

சூழ்நிலைக்குத் தக்கவாறு வாழ அன்றைய மனிதனுக்குத் தெரிந்திருந்தது. கடல் தண்ணீர் தவிர நல்ல தண்ணீரே கிடைக்காத சூழ்நிலையில் - அதை குடிக்கவும் / சமைக்கவும் / எதையாவது பயிராக்கவும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பான். ஒருவேளை அது இன்றுவரையிலும் கூட எங்கோ நடக்கிற மறைபொருளாகக் கூட இருக்கலாம். 
கடல் நீரில் மீன்கள் தவிர வேறு எதுவுமே விளையாதா ? விளைய வைக்க முடியும்னா அது - எந்த வகையில் ? என்ன விதமான பொருள் ? எதுவுமே இல்லாத நிலையில் கடல் நீரைப் பருகியே வாழக் கற்றுக்கொண்டிருந்தால் அது அவனுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா ? - இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் யாரிடம் இருக்கிறது. பதில் அறிந்த புண்ணியவான்கள் அதை எல்லோருக்கும் சொல்லுங்களேன்.
(கொஞ்ச காலத்துக்கு முன் சன் டீவியின் நிஜம் நிகழ்ச்சியில், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தை காட்டினார்கள். (அந்த இடத்தின் பெயர் நினைவில் இல்லை )  அங்கு ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் மழை வருமாம். ஏதோ ஒரு இடத்துக்கு சென்று ஒரு குடம் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அது நிறத்திலும் அடர்த்தியிலும் நம்ம ஊர் சாக்கடைத் தண்ணீரைக் காட்டிலும் படு மோசமாக இருந்தது. இதைத்தான் குடித்து உயிர் வாழ்கிறோம் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
நல்ல தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாத அவர்களுக்கு, குழந்தைப் பருவம் முதல்லே இந்த தண்ணீர் பழக்கப்பட்டு விட்டதால் அதை அவர்கள் சர்வ சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அது மாதிரி நாமும் சில விஷயங்களுக்கு மாறிக் கொண்டால் நல்லதுதானே. குழந்தைப் பருவத்தில் பழக்கப்படுத்தி விட்டால் அது பின் விளைவுகளை உண்டாக்காதுதானே ?!
( பெர்த் டே கேக் என்று சிலர் ஆசையாக என்னிடம் அதை நீட்டும்போது, "ஸாரி.. அதில் முட்டை சேர்ந்திருக்கும். நான் சாப்பிட மாட்டேன். எனக்கு வேண்டாம் " என்பேன்.
"சாப்பிட்டால் என்ன ஆகும் ?" என்பார்கள்.
"எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டில்  நாங்க சின்னவங்களா இருக்கிறப்பவே அதை எங்களுக்கு   கொடுக்கலே. அதனால் எது என்னனு எங்களுக்கு தெரியாது. எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுத்துப் பழக்கலே. இப்போ  எங்கள் வீட்டுக் குழந்தைகள் ஐ.டி  கம்பெனியில் ஒர்க் பண்ணறாங்க. அவங்க அங்கே எதை வேணும்னா சாப்பிடலாம். அதை நாங்க தடுக்கலே " என்பேன் )
எதுவுமே குழந்தைப்பருவத்தில் பழக்கமாகி விட்டால் எந்தவொரு கேடும் இல்லை என்பார்கள். 
உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ - கடல் நீரை பயன்படுத்தி வித்தியாசமான விளைச்சல்களை  (மீன் தவிர ) உண்டாக்குபவர்களைத் தெரியுமென்றால், அந்த விவரத்தை அறிந்து வந்து அதை எல்லோருக்கும் சொல்லுங்களேன்.!! உங்களுக்குத் புண்ணியமாய் போகும்.!

No comments:

Post a Comment