Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 02, 2017

ஹாய் குட்டீஸ் , குறுக்கெழுத்து புதிர் - 01

சென்ற வார புதிர் எண் - 28 ன் விடை: A WORD DOES NOT END WITH "BECAUSE". BECAUSE,  BECAUSE IS A CONJUNCTION.
( ஒரு  வாக்கியமானது  "BECAUSE" என்ற சொல்லில் முடிவடையாது. ஏனென்றால் "BECAUSE" என்பது ஒரு வார்த்தையுடன் மற்றொரு வார்த்தையை இணைக்கும்  இணைப்பு சொல்லாகும். )

 குறுக்கெழுத்து புதிர்  - 01 
ஹாய் குட்டீஸ், இதோ உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர். இந்தப் புதிருக்கான அனைத்து விடைகளும் "அ" என்ற எழுத்தில்தான் தொடங்கும்.
இனி நாம பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். எதையும் விளையாட்டாகவே படிக்கலாம். இதை நீங்கள்  ON LINE ல்   SOLVE  பண்ற மாதிரி அமைத்து தர பகீரத பிரயத்தனம் பண்றேன். எத்தனையோ பேரிடம் கேட்டும் பார்த்துட்டேன். யாரும் செஞ்சு தர்ற வழி தெரியலே. அதனாலே இதை நீங்க பிரிண்ட் பண்ணிதான் விடை எழுத முயற்சி செய்யணும். உங்களில் யாருக்காவது இதை செய்ய தெரியும்னா எனக்கு சொல்லுங்களேன். https://arunasshanmugam.blogspot.com ல் வெளியாகியுள்ள ஆங்கில புதிர்களை நீங்கள்  ON LINE ல்   SOLVE பண்ண முடியும். அதே மாதிரி இந்த தமிழ் புதிர்களை வெளியிட எவ்வளவோ முயற்சி பண்றேன். ஊஹூம் .... ஒண்ணும் நடக்கலே. அதனால் ஸாரி .. நீங்கள் இதை எழுதியோ பிரிண்ட் எடுத்தோ விடை எழுதுங்கள். இந்த புதிருக்கான விடை அடுத்த வாரம் வரும். 
                           குறுக்கெழுத்து புதிர்     - 1
                              
  1

  

  

  

  
  8
  

  

  
   2
  9
  

  

  
  3

  
 13
 14

  

  
 12

  
 10

  
 4
  5

  
  6

  
 7

  

  

   
 11

இடமிருந்து வலம்
1  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தொகுத்தவர்              ( 6 )
2  மிகக் குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்ட நாடு  ( 4 )
3  பாலையும் நீரையும் பிரிக்கும் திறன் உள்ள பறவை          ( 4 )
4  கிறிஸ்துவப் பாதிரியார்களின் மேலாடை                             ( 3 )
5  மின்வாரிய ஊர்திகளில் காணப்படும் வாசகம்                     ( 5 )
6  ஒருநாள் டெஸ்ட் மாட்ச்சில் அதிக விக்கெட்எடுத்த இந்தியர் ( 7 )
7  உலகின் முதல் கணக்கு இயந்திரம்                                        ( 5 )

வலமிருந்து இடம்
 6  இல்லை என்பதைக் குறிக்கும் மற்றொரு சொல்         ( 3 )
 8  எழுத, படிக்கத் தெரியாத இந்திய முகலாய மன்னர்   ( 4 ) 
 9  மூத்த சகோதரி                                                                      ( 3 )
10  ஆத்திச்சூடி தந்த தமிழ் மூதாட்டி                                      ( 3 )
11  சமாதான சின்னமாகக் கருதப்படும்  இலை  (புத்தமதம் )       ( 5 )

மேலிருந்து கீழ்
 1  கொஞ்சி பேசும் கிளியின் வேறு பெயர்                          ( 5 )
 2 புரத சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருள்             ( 3 )
 3 இரட்டைகுடியுரிமை நிலவும் நாடு                                ( 5 )
 8  கொடூரமான செயலைக் குறிக்கும் சொல்                    ( 8 )
12  நெருப்பு                                                                                ( 4 )
13  உப்பு உவர்ப்பு கார்ப்பு கைப்பு இனிப்பு புளிப்பு               ( 4 )
14  உயர்ந்த ரகக் குதிரைகளுக்கு பெயர் பெற்ற நாடு       ( 3 )

கீழிருந்து மேல்
4  அரசர்கள் செய்யும் ( குதிரை ) யாகம்                             ( 8 )
6  வாலி (இராமாயணம் ) மைந்தன்                                    ( 5 )
7  திரிவேணி சங்கமம்                                                           ( 5 )
10 முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர்                         ( 5 )
11 இந்தியாவில் உப்பு கிடைகாத ஒரேஒரு மாநிலம்    ( 10 )
12 ராசி மண்டலத்திலுள்ள முதல் நட்ச்சத்திரம்             ( 4 ) 

No comments:

Post a Comment