Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 05, 2016

DEAR VIEWERS,

.கேள்வி கீழே வருது. படிச்சிட்டு பதிலை சொல்லணும்.

இந்த மாதிரி தலையைத் தொங்கப் போட்டுட்டு நிற்க கூடாது.
                        சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!.
சமையல் / சமைக்கிறதுங்கிறது ஆம்பிளைங்களும் சம்பந்தப்பட்ட விஷயமா இல்லாட்டா அது  பொம்பளைங்களுக்கு மட்டுமேயான வேலையா?  
(அவனவன் காணாம போன விமானத்தைத் தேடுறதுலயும், ‘தண்ணி’ப் பிரச்னையை வச்சு  எப்படி விளையாடலாம்னு (அட. நான் சொல்றது விவசாயத்துக்கான தண்ணி பத்திதான். நம்புங்க!) அல்லாடிட்டு இருக்கிறான். சமையலைப் பத்தி கேக்க வந்துட்டியா.. ஏன்...? ஐ.நா. சபைக்கு எடுத்துட்டுப் போறதுதானேனு கேக்கிறவங்க யாராவது இருந்தா, அவங்க காதுல முதல்லயே ஒரு சங்கதியப் போட்டு வச்சிடறேன்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே இந்த கேள்வி என் காதுல விழுந்துட்டே இருக்கு. இதக் கேட்டுக்கேட்டேதான்  நான் வளந்தேன்னு சொன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு தோணுது.
‘காய் வாங்கிட்டு வந்துடறேன். அடுப்பில் இருக்கிறது தீஞ்சு போகாமே பார்த்துக்கோ. அஞ்சு நிமிஷம் கழிச்சு ஸ்டவ்வைஆஃப் பண்ணிடு’னு சொன்னா போதும்.உடனே, ‘இதப்பாரு. இதெல்லாம் எங்க வேலையே இல்லே. ஒண்ணு இருந்து அடுப்பு வேலையை முடிச்சிட்டு வெளியே போ. இல்லாட்டா காயே வாங்க வேண்டாம். அப்பளம் போதும்’னு சொன்னாங்க வீட்ல இருந்த, தலைக்கு மேலே வளர்ந்த ஆம்பளப் புள்ளைங்க. இதே டயலாக்கைத்தான் இப்போ அவங்க புள்ளைங்க சொல்லுதுங்க.
புள்ளைங்க என்னை ரொம்பவே கலாய்க்கிறாங்க. இந்த வார்த்தை கூட அவங்க கிட்டே யிருந்து படிச்சுக் கிட்டதுதான்.(எல்லா வீட்டுலயும் இதே லட்சணந்தான்னு யாரோ ஒரு சில அனுபவசாலிகளின் முணு முணுப்பு எனக்குக் கேட்கத்தான் செய்யுது. நமக்குப் படிப்பறி வெல்லாம் ரொம்பக் கிடையாது . அந்தக்கால பட்டதாரி. அம்புட்டு  தான்.
வீட்டில பேரன்பேத்திக எதையாவது தப்பா சொல்லும் போது நாம திருத்தினா, ’உனக்கு என்ன தெரியும்?’னு கொக்கி போடுதுங்க. ‘நானும் உங்க வயசில பள்ளிக்கூடம், காலேஜெல்லாம் போயிருக்கிறேனு சொன்னா ’நீ படிச்சப்ப கம்ப்யூட்டர் இருந்துச்சா?’னு கேக்குதுங்க. கம்ப்யூட்டர் முன்னால பொழுதுக்கும் இதுங்க உக்காந்து உக்காந்து எழுந்திரிக்கிறாதாலே இவங்கதான் உலக விஷயம் எல்லாத்தயும் கரைச்சிக் குடிச்ச மாதிரியும், வீட்டுல இருக்கிற பெருசுங்க எல்லாரும் அடி முட்டாளுங்க மாதிரியும் நினைக்குதுங்க.  அதுங்க கூடப் பேசிப் பிரயோஜனமும் இல்லே. அதுங்க கூட மல்லுக்கு நிக்க தெம்பும் இல்லே. ஆனா இந்த மண்ணுல என் தலை சாயறதுக் குள்ளே இதுக்கு விடை தெரிஞ்சிட்டுத்தான் போகணுங்கிற வீராப்பு இருக்குது. அதான் கேக்கிறேன்.
(ஆதி காலந்தொட்டு இன்று வரையிலும் தலைமைப் பொறுப்பு என்பது ஆண்கள் வசந்தான் இருந்து வந்திருக்கிறது. (எதற்குமே சில விதிவிலக்கு இருப்பது போல, இதிலும் ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம்).
எல்லா வகையிலும் ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் பெண்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.
காலப்போக்கில், தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு சில பெண்கள் வேலைக்குச் செல்ல பிற்காலத்தில் அதுவே கட்டாய மாக்கப்பட்டு விட்டது. அதனால் ஆண்களும் அடுப்படியில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (இன்றைக்கும் பல வீடுகள் மதுரையாகவும், சில வீடுகள் சிதம்பரமாகவும், வெகுசில வீடுகள் திருச்செங்கோடாகவும் இருக்கத்தான் செய்கின்றன. அது என்ன மதுரை, சிதம்பரம், திருச்செங்கோடுனு கேக்கறீங்களா? மதுரையில் அம்பாளின் ஆட்சி, சிதம்பரத்தில் நடராஜரின் ஆட்சி, திருச்செங்கோட்டில் அர்த்தநாரிஸ்வரர் ஆட்சி. இப்போ யோசனை பண்ணிப் பாருங்க... உங்க வீடு மதுரையா, சிதம்பரமா, திருச்செங்கோடானு!)
ஒரு கணவன் தன்னுடைய வீட்டு வேலையை செய்வதை குறிப்பாக சமைப்பதை அடிப்படையாகக் கொன்டு பத்திரிக்கைகளில் வந்த ஜோக்குகள் ஏராளம். அதைப் படித்து விட்டு சிரிப்பவர்கள்மீது எனக்கு அனுதாபம்தான் வரும்.
ஏன்னா.... அப்ப இருந்து இப்ப வரை எந்த விசேஷமாகட்டும் ஆம்பிளைங்கதான் சமையல் பொறுப்பை ஏத்து நடத்தித் தர்றாங்க. உதவிக்காக ஒரு சில இடங்கள்ல ஒரு சில பொம்பளைங்க இருக்கிறாங்க. அவ்வளவுதான்.
அட. அந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்க. இப்பவும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போனால் கூட அங்கே சீஃப் செஃப் ஒரு ஆணாகத்தானே இருக்கிறார் (நான் பார்த்த வரையிலும்).
சரி. இதைக் கூட விட்டுத் தள்ளிடலாம். சமையல் கலையில் சிறந்தவன்னு நளனைச் சொல்றாங்க. நல்லா இருக்கிற சாப்பாட்டை நளபாகம்னு சொல்றாங்க. அந்த இடத்தை எந்தப் பொண்ணோட பேரும் சூபர்சேட் பண்ணலே.
அப்படியிருக்க, வீட்டில் சமையல் வேலையில் ஆண்கள் ஒத்தாசை பண்ணினால் அது ஜோக்கான விஷயம்னு வீட்டிலுள்ள பிள்ளைங்களும் மத்தவங்களும் ஜோதிடம் சொல்வது ஏன்?
சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!.
-  கேட்பது விடை தெரியாமே ரொம்பவும் நொந்து போன ஜென்மம்.

No comments:

Post a Comment