Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, August 07, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 07 )

சென்ற வார புதிர் எண் - 6 ன் விடை : 
பொதுவாக ஆடிப் பெருக்கன்று அதாவது ஆடி மாதம் பதினெட்டாம் தேதியில் விதைத்த நெல்லை புரட்டாசிமாதத்தில் அறுவடை செய்யமுடியாது.நெல் பயிராகி அறுவடை செய்ய மூன்று /ஆறு மாதங்களாகும் அதாவது மூன்று மாதத்திலேயே விளையக் கூடிய நெல் வகையும் உண்டுவளர  ஆறு மாதம் தேவைப்படக்கூடிய நெல் வகையும் உண்டு. அப்படியிருக்க ஆடிமாதம் பதினெட்டாம் தேதியில் விதைத்த நெல்லை புரட்டாசி மாத முதல் வாரத்திலேயே அறுவடை செய்து விட்டதாக வேலன் சொன்னது பொய் என்பது தாத்தாவுக்குத் தெரிந்து விட்டது.இனி  இந்த வாரப் புதிருக்குப் போகலாமா ? 


புதிர் எண் - 7  
தாத்தாவிடமிருந்து புதிரை எதிர்பார்த்து வெகு ஆவலாக அவரருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்
சற்றுநேர யோசனைக்குப்பிறகு"சரிஇந்தக்கேள்விக்குசரியானவிடையையார் சொல்றீங்கன்னு பார்ப்போம் " என்ற பீடிகையுடன் புதிரை சொல்ல 
ஆரம்பித்தார்.
ஒரு ஆள் வேகமாக ஓடிவந்துஓடிக்கொண்டிருந்த  பஸ்ஸில் ஏறினான். அவன் கண்டக்டருக்கு நன்கு தெரிந்த ஆள்தான் . அவன் சித்தாள் வேலை செய்பவன்அவன் தலையில் ரத்தக்காயத்துடன் கட்டுகட்டப்பட்டிருப்பதைகண்ட மனிதாபிமானம் மிக்க அந்த  கண்டக்டர் " ஏம்ப்பாஏற்கனவே தலையில் கட்டு போட்டிருக்கேஇப்போ ஓடற பஸ்ஸில் ஓடி வந்து ஏறுறே. இருக்கிற காயம் போதாதா ? இன்னும் கீழே  விழுந்து வாரணுமா ? ஆமாம் தலையில் காயம் எப்படிப்பட்டுச்சு ? நீ எங்கே போகணும் ? " என்று கேட்க, பணத்தை எடுத்து நீட்டிஅவன் போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் வாங்கினான் அந்த ஆள். " காயம் எப்படிப் பட்டதுன்னு சொல்லவே இல்லையே கண்டக்டர் கேட்க, "அதை சொல்லித்தானே  நான் டிக்கெட் வாங்கினேன் "  என்றான் அவன்ஆக மொத்தம் அவன் எந்த ஊர் பெயரை  சொல்லி டிக்கெட் வாங்கினானோ அந்த பெயரில்தான்  காயத்துக்கான காரணமும் இருக்கிறதென்பதை புரிந்து கொண்ட கண்டக்டர் "வேலை பார்க்கும் போதுகவனமாக இருக்க வேண்டாமா? " என்று உரிமையோடு கண்டித்தார்.
இப்போது கேள்வி என்னவென்றால் :
 1. அவன் எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கினான் ?
 2. காயம் எப்படி ஏற்பட்டது ?
தாத்தா நிறைய க்ளு கொடுத்துதான் புதிரை சொல்லியிருக்கிறார்கொஞ்சம் யோசனைபண்ணிப் பார்த்தால் விடையை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.

No comments:

Post a Comment