(இந்தப் பாடல் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று நினைக்கிறேன். நான் பள்ளி சிறுமியாக இருந்த காலத்தில் தமிழ்ப் பாட நூலில் இடம் பெற்றிருந்த பாடல் உங்கள் ரசனைக்காக )
பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
பானை ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியொரு சுண்டெலியும் அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா.
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று
வயிறூதிப் புடைத்துப் பருத்ததடா
மெல்ல வெளியில் வருவதற்கும் ஓட்டை
மெத்தச் சிறியதாய்ப் போச்சுதடா
பானையைக் காலைத் திறந்தவுடன் - அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்தவொரு
பூனை எலியினைக் கண்டதடா - அதை
ஓடிப் போய்க் கவ்வியே சென்றதடா
கள்ள வழியினில் செல்பவரை எமன்
காலடிப் பற்றித் தொடர்வானடா
நல்ல வழியினில் நடப்பவர்க்கு தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா !!
No comments:
Post a Comment