உங்களுக்கு சில நாட்கள் முன்பு "ஒரு மாதிரிக் கதை " ஒன்றை பதிவு செய்துவிட்டு அதேபோல வேறு கதை சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தேன். இதே கதையை என்னுடைய FACE BOOK லேயும் பதிவு செய்துவிட்டு, நான் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்வார்களா என்று காத்திருந்தேன். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பரிசு தரவும் நினைத்திருந்தேன். ஆனால் யாருமே சொல்லவில்லை. ஒருவர் மட்டும் (Muthulakshmi Dhanvinakshpearl) தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். அந்தக் கருத்துக்கு நன்றி. ஆனால் நான் எதிர்பார்த்த பதில் அது அல்ல. . மற்றவர்களுக்கு கண்டுபிடிக்கும் ஆர்வம் இல்லையா அல்லது முடிய வில்லையா என்பது தெரியவில்லை. அதனால் நான் போட்ட முடிச்சை நானே அவிழ்க்கிறேன்.
அந்தக் கதையில் கவனிக்க வேண்டிய சில வார்த்தைகள் : இந்த வார்த்தைகள் அனைத்தும் இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே வார்த்தையாகத் தானிருக்கும்.
தாத்தா தத்தை தைத்த
பாப்பா
தேரு வருதே
தா ராதா
மாமா
டீ ரெடீ .
பாரூ, ரூபா ( நோட்டை )
வா ரவா ( தோசை )
விசா சாவி
மா பலா லாபமா
மோரு போருமோ
காக்கா
குடகு
மேயுமே
தேயுதே.
RADAR
இதேபோல மாளுமா, மாயுமா, தா கீதா என்ற வார்த்தைகளை இணைக்க லாம். கதையில் வந்த 16 தமிழ் வார்த்தைகள் தவிர்த்து வேறு வார்த்தைகள் / சொற்கள் உண்டா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கிருந்தது . மற்றவர்களுக்குத் தெரியுமா தெரிந்தால் அதை நம்மோடு பகிர்ந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்தான் அந்தக் கதையை முகநூலிலும் பதிவு செய்தேன். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பரிசு தரவும் நினைத்திருந்தேன். ஆனால் யாருமே சொல்லவில்லை. " உங்க பரிசு எங்களுக்குத் தேவையில்லை" என்று நீங்கள் எல்லோரும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
No comments:
Post a Comment