Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, June 08, 2013

மனிதன் Vs பறவை மிருகம்

பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே 

ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில் - அதை 
அன்பாக மேய்ப்பார்கள் வயற்காட்டில் 
விருந்தென்று உறவொன்று வரும்போது - அந்த 
வெள்ளாடு விருந்தாகும் அப்போது !

பெட்டைக் கோழிக்கு கட்டுச்சேவலை கட்டி வைத்தவன் யாரடா - அது 
எட்டு குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா 
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா 
மனித ஜாதியில் துன்பம் யாவுமே மனதினால் வந்த நோயடா !

நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா - தம்பி 
நன்றி கேட்ட மகனைவிட நாய்கள் மேலடா !!

யானையின் பலமெதிலே - தும்பிக்கையிலே 
மனிதரோட பலமெதிலே - நம்பிக்கையிலே !

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா 
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே 

திக்கு வாயைப் பூட்டி வைத்தாலும் 
திருடும் கையை கட்டி வைத்தாலும் 
குரங்கு கையில் மாலையைத் தந்து
கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும் 
மாறாதய்யா  மாறாது - மனமும் குணமும் மாறாது.

எச்சிலைதனிலே எறியும் சோற்றுக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே 
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை மதச்சண்டை எத்தனையோ 
இந்த நாட்டிலே 
படிக்காத நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க 
பக்குவமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க பழக்கத்தை மாத்தாதீங்க 
பாடுங்க கா கா கா 

யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே 
இறைவன் படைப்பில் குரங்குதான் மிஞ்சும் இங்கே 

காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் 
நம்மையும் பாரு நாடே சிரிக்கும் 


No comments:

Post a Comment