Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 12, 2013

திரைக்கவிஞர்கள் பார்வையில் மனிதன் !


.




யாரடா மனிதன் இங்கே
கூட்டி வா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மிஞ்சும் இங்கே !


 மனிதனெல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான்-இருந்தபோதும் மனிதனுக்குஒன்று மட்டும் தெரியவில்லை !  ( என்ன அது என்கிறீர்களா ? ) மனிதனாக வாழ மட்டும்மனிதனுக்கே தெரியவில்லை !!.


 மனிதன் இருக்கின்றானா ?
இறைவன் கேட்கின்றான் - அவன்
இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான் ?


மனிதன் நினைப்பதுண்டு - 
வாழ்வு நிலைக்குமென்று !
இறைவன் நினைப்பதுண்டு - 
பாவம் மனிதனென்று !!


பொருள் வேண்டி திருடச் செல்வாய் !பெண்ணைப் பெற வேண்டி விலையைச் சொல்வாய் !!
துணிவோடு உயிரைக் கொல்வாய் எதற்கும் துணையாக மதுவைக் கொள்வாய் !!!!
கேட்டால், நான்தானே மனிதன் என்பாய்  ( ? )

தோல்வி நிலையென்று நினைத்தால் - மனிதன் 
வாழ்வை நினைக்கலாமா ?

மனிதன் என்பவன் தெய்வம்   ஆகலாம் - வாரி வாரி வழங்கும் போது வள்ளல்  ஆகலாம்.வாழை போல தன்னைத்தந்து தியாகியாக லாம்.உருகியோடும் மெழுகுபோல ஒளியை  வீசலாம் !


பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒருநாளிலேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே !!


மானிடம் என்பதே கலைந்திடும் வேடம் = அதில்வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம். வருமுன் காப்பவன்தான் - புயல் வருமுன் காப்பவன்தான் அறிவாளி - அது
வந்தபின்னே தவிப்பவன்தான்  ஏமாளி .


பஞ்சைப் போட்டு நெருப்பை அணைப்பவன் பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இரைப்பவன் பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை மறைத்தே வாழ்பவன்நிச்சயம் குருடனடா - தன் உழைப்பினிலும் நல்ல நினைப்பினிலும் தினம் வாழ்பவன் மனிதனடா !!

.

No comments:

Post a Comment