Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 05, 2013

வாழ்ந்து பார்ப்போம் ! வாழ்க்கையது சுலபம் சுலபம் !!



யாராவது உங்களை ஏமாற்றினால் அது அவர்களின் அயோக்கியதனம். அதே விசயத்தில் நீங்கள் மீண்டும்  ஏமாந்தால்   அது  உங்களின் முட்டாள்தனம் 


 மனிதர்களின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர் : 1 தன்னம்பிக்கை 2  நேர்மை 3 உழைப்பு. இந்த மூன்று பேரிடம் இருந்தும் நீங்கள் விலகிசெல்லாத வரை உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது.



ஒருவனுடைய உண்மைத் தன்மையை அறிய வேண்டும்  என்றால்  அவன் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்துப்  பாருங்கள் !


அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்! அது இஷ்டப்பட்டு வரும்போது வரட்டும். உழைப்பை நம்புங்கள் . உண்மையாக உழையுங்கள். ஒருபடி மேலே ஏறி விடுவீர்கள் !


புராணங்கள் வேதங்கள் எல்லாமே நல்லவர்கள், நல்லபடி வாழ்வார்கள் ;தீயவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று சொல்கிறது. ஆனால் நடை முறை வாழ்க்கையில் இது எதிர் மாறாக இருக்கிறதே ! அது ஏன் ?
நமக்கு " வரவு " ரயில் பெட்டியில் வந்தால்  " செலவு " இஞ்சினில்  வந்து விடுகிறதே என்று தளர்ச்சி யடையாதீர்கள். செலவை நீங்கள்  சமாளிக்க   ஒரு வரவை கடவுள் அனுப்பி வைக்கிறார் என்று எண்ணி சந்தோசப்படுங்கள்.




விஞ்ஞானம்  ஒரு நல்ல வேலையாள் ; ஆனால் மோசமான எஜமான் !


கத்தியை கையில் வைத்துள்ளவன் கைகளை வெட்டிக் கொள்வானா அல்லது பழத்தை வெட்டுவானா என்பது  கத்தியைப் பிடித்திருக் கும் விதத்திலிருந்தே தெரிந்து விடும். எந்த ஒரு " கண்டுபிடிப்பு " ம் கையாள்கிற விதத்தில் கையாண்டால் யாருக்கும்  எந்த பாதிப்பும் வந்து விடாது.


வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை கடமையுணர்ச்சி உள்ளவர்களாக வளருங்கள். கடமையுணர்ச்சி அற்ற மகள், எதிர்காலத்தில் சமாளி க்க  முடியாத மனைவியாகத்தான் இருப்பாள் 


முதுமை என்பது உணர்வுகளை, எண்ணங்களைப் பொறுத்தது. வெறும் வயதினால், வருடங்களால் வருவது அல்ல !

.

No comments:

Post a Comment