Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, October 16, 2012

மொழியோடு விளையாடிப் பார்க்கலாம் ! No.2


போன வாரம் வெளியாகியிருந்த வார்த்தைகளில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் . அந்த வார்த்தைகளை  இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே வார்த்தைதான் வரும் என்பதை நீங்க கண்டு பிடிச்சிருப்பீங்கனு எனக்கு  நல்லாவே தெரியும்.
அந்த வார்த்தைகளை வாக்கியமாக அமைக்கப் பழகிக்  கொண்டால், அது  தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் உங்களது திறமையை மேலும் வளர்க்கும். 

உதாரணமாக  :

இது யார் தைத்த சட்டை ?  இது தத்தை தைத்த சட்டை!

தண்ணீர்க் குழாய் என்று  கருதித் திருக வெறும் காற்றுதான் வந்தது .

அவனுடைய காரியம் ஆக வேண்டுமென்றால் நண்பனாக குலவி விலகுதல்  அவனுக்கு கை வந்த கலை

போன வாரம் வெளியான வார்த்தைகள் தவிர வேறு என்னென்ன கண்டு பிடித்தீர்கள் ?  இல்லையா ?  இந்த நிலை மாறுமா  ?

இப்போது   MADAM என்ற வார்த்தையைப் பாருங்கள்  . இதையே வலமிருந்து இடமாக படித்துப் பாருங்கள்.  அதே MADAM தான் !

EWE
EVE
RADAR
MALAYALAM  

இதேபோல மேலும் சில வார்த்தைகளை கண்டு பிடிக்க நீங்க முயற்சி பண்ணலாமே !

வேறொரு முயற்சி :

  1 -  NOTABLE

இந்த வார்த்தையை  NO TABLE,  NOT ABLE பிரிக்க முடியும் .

இதையே வாக்கியமாக மாற்றிப் பாருங்கள் :   A NOTABLE DOCTOR WAS NOT ABLE TO ATTEND AN OPERATION, BECAUSE HE HAS NO TABLE.

 2 - TOGETHER  என்பதை TO GET HER என்று பிரிக்க முடியும் 

THEY WENT TOGETHER , TO GET HER FROM THE SICK BED

 3 - AWAY, ASSURE,  APART இதை மாற்றி அமைக்க முயற்சி பண்ணுங்க. திரும்பவும் அடுத்த வாரம் சந்திப்போம்.

இந்த வார புதிர் என்னவென்று பார்க்கலாமா ?


யாராவது உங்களிடம், A B C  என்ற மூன்று எழுத்துமே இடம் பெறாத நூறு வார்த்தைகளை " கடகட " " மடமட " ன்னு சொல்லுங்கன்னு கேட்டால் அதை  உங்களால் சொல்ல முடியுமா ?

 யோசனை பண்ணி யோசனை பண்ணி அதிக பட்சம் ஒரு பத்து வார்த்தைகள் சொல்ல முயற்சி பண்ணியிருக்கலாம்.  நூறு வார்த்தைகளையும் சொல்லி,  கேள்வி கேட்டவர்களை அசத்த வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கும் தானே ?

 கவலையே படாதீங்க. கொஞ்சம் " எண்ணிப் பார்த்தால் " அது ரொம்பவுமே சுலபம்.  நீங்க யோசனை பண்ணி பதிலை ரெடி பண்ணி வையுங்க. நம்ம ரெண்டு பேர் விடையும் ஒத்து வருதான்னு அடுத்த வாரம் தெரிஞ்சுக்கலாம்.
 அது வரை GOOD - BYE குட்டீஸ் !

No comments:

Post a Comment