கழுதை, மீண்டும் கழுதையானது !
" பாட்டி அன்னிக்கி ஒரு கழுதை கதை சொன்னியே, கழுதை மேல் போன கதைன்னு
அது மாதிரி வேறே ஏதாவது கழுதை கதை இருந்தா சொல்லு பாட்டி " என்றாள்
மனோ.
பாட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போதே , " அண்ணா கதை " என்று மனோ சைகை காட்ட , ஓடி வந்து பாட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு " என்ன ? ஞாபகம் வந்துட்டதா ? " என்றான் பிரபு
" அது எப்படி வராமல் போகும் ? " என்று பாட்டி சொல்ல " நீ தான் ஸ்டோரி
பேங்க் ஆச்சே ! " என்றாள் மனோ.
பேங்க் ஆச்சே ! " என்றாள் மனோ.
" ஐஸாடீ ? " என்று பாட்டி கேட்க, " இல்லே, சேர்டிபிகட் " என்றான் பிரபு .
பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள் :
" ஒரு ஊரில் ஒரு குரு இருந்தார். அவரிடம் படிக்க வந்திருந்த குழந்தைகள், அன்று ரொம்பவும் துஷ்டத்தனம் செஞ்சிட்டு இருந்தாங்க. குரு அவங்களை
அதட்டிப் பார்த்தார். ஆனால் அவங்க அடங்குவதாக இல்லை. ஏன்னா, எல்லோருமே சின்ன குழந்தைங்க. அவங்க அன்னிக்குத்தான் முதல்முறையா
குருகுலம் வந்திருக்காங்க. அவங்களுக்கு, தாங்கள் இருப்பது குருகுலம் என்றோ, குரு சொன்னால் கேட்டு நடக்கவேண்டும் என்பதோ கொஞ்சமும்

தெரிந்திருக்க வில்லை.
கோபமடைந்த குரு, " கழுதைங்களா ? விஷமத்தனமா பண்றீங்க ? இங்கே
வந்த எத்தனை கழுதைகளை நான் மனுஷனாக்கி இருக்கிறேன். சீக்கிரம்
உங்க எல்லோரையும் மனுஷங்களா மாத்திடறேன் " என்றார்.
இது இந்த வழியாக, கழுதையை ஓட்டிக்கொண்டு ஆற்றுக்கு துணி துவைக்க
போயிட்டிருந்த ஓரு சலவைத் தொழிலாளி காதில் விழுந்தது. அதைக் கேட்டு கொண்டே அவன் ஆற்றுக்குப் போயிட்டான். வீட்டுக்குத் திரும்பினதும் அவன்
மனைவியைக் கூப்பிட்டு, " அடியே, பாக்கியவதி, உனக்கு விஷயம் தெரியுமா ?
நம்ம ஊரில் இருக்கிற குருசாமி, கழுதைகளை மனுஷனா மாத்திடுவாராம் " என்று சொல்ல, அவள் " அது எப்படிங்க கழுதைங்களை மனுஷனா மாத்த
முடியும் ?" என்றாள்.
" முடியுமாம். தான் நிறைய கழுதைகளை மனுஷனா மாத்தி இருக்கிறதா
குருசாமி சொன்னதை, நானே என் ரெண்டு காதாலே கேட்டேன். அதனாலே
நம்ம கழுதையையும் நாம மனுஷனா மாத்திடலாம். மனுஷனா மாறிட்டா
அது நமக்கு கூடமாட வேலை செய்யும். நமக்கு குழந்தை இல்லையே என்ற
குறையும் தீரும்" என்றான்.
" அப்படின்னா, நாளைக்கே போய் நம்ம கழுதையை மனுஷனா மாத்திடுங்க.
எவ்வளவு செலவானாலும் சரி " என்றாள் அவன் மனைவி .
மறுநாள் பொழுது விடிந்ததும், தனது கழுதையை அழைத்துக்கொண்டு குருகுலம் போனான் அவன். குருகுலத்துக்குள் கழுதை வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் குரு .
மறுநாள் பொழுது விடிந்ததும், தனது கழுதையை அழைத்துக்கொண்டு குருகுலம் போனான் அவன். குருகுலத்துக்குள் கழுதை வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் குரு .
" என்னப்பா இது ? குழந்தைங்க இருக்கிற இடத்துக்கு கழுதையோடு வந்து
நிற்கிறே ? " என்று கோபமாகக் கேட்டார்.
" சாமி , என்னோட கழுதையை மனுஷனா மாற்றணும் " என்றான் அவன்.
வியந்துபோன குரு " அது எப்படிப்பா முடியும் ?" ன்னு கேட்டார்.
"இல்லே , உங்களாலே முடியும். எத்தனையோ கழுதைகளை நீங்க மனுஷனா
மாத்தி இருக்கிறதா நீங்க உங்க வாயாலேயே சொன்னதை, நாம் என்னோட
ரெண்டு காதாலும் கேட்டேன். என் கழுதையை மனுஷனாக்கியே தீரணும் "
என்று அவன் அடம் பிடித்தான்.
" இறைவன் படைப்பை மாற்ற முடியுமா? நான் இங்குள்ள குழந்தைகளைத்தான்
"கழுதைகளா" என்று கோபத்தில் திட்டினேன் என்றார்.
ஆனால் அவனோ அதைக் கேட்பதாக இல்லை.
'என்னடா இது, இவன் இவ்வளவு மடையனா இருக்கிறானே. இவனுக்கு ஒரு
சரியான பாடம் சொல்லிக் குடுக்கணும். புத்தி வரும்படி செய்யணும் 'னு
மனசுக்குள் நினைத்துக் கொண்ட குரு , " மனுஷனா மாத்திடலாம். ஆனால்
அதுக்கு ஒரு ஐநூறு ரூபாய் செலவாகுமே " என்றார்.
" பரவா இல்லை சாமி. நான் எப்பிடியும் நாளைக்கு ஐந்நூறு ரூபாய் கொண்டு
வந்து தந்திடறேன் " னு சொல்ல, " அப்படின்னா, நாளைக்கு ஐந்நூறு ரூபாய்
எடுத்துக் கொண்டு வா, உன் கழுதையும் அழைச்சிட்டு வா "ன்னு சொன்னார்.
இவனுக்கு ஐந்நூறு ரூபாங்கிறது பெரிய தொகைதான். இருந்தாலும் கழுதை
மனுஷனா மாறப் போகுதே. அதை நினைச்சதுமே குஷி கிளம்பிட்டுது.
அக்கம் பக்கத்தினரிடம் பணம் கடன் வாங்கினான். வீட்டிலிருந்து சில
பொருளை விற்றான். ஐந்நூறு ரூபாய் சேர்ந்ததும், அதை எடுத்துக்கொண்டு
கழுதையையும் அழைத்துக்கொண்டு குருகுலம் சென்றான்.
பணத்தை குருவின் கையில் கொடுத்து விட்டு " என்னோட கழுதை எப்போ
பணத்தை குருவின் கையில் கொடுத்து விட்டு " என்னோட கழுதை எப்போ
மனுஷனா மாறும் ?" ன்னு கேட்டான்.
இவனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட குரு " ஒரு மாசம் கழித்து இங்கு வா.
வந்து தெரிஞ்சுக்கோ " என்றார்.
எப்போதடா ஒரு மாசம் முடியும் என்று காத்திருந்த சலவைத் தொழிலாளி, ஒரு மாதம் முடிந்ததும், குருகுலம் சென்று " என்ன சாமீ, கழுதை மனுஷனா
மாறிட்டுதா ? ன்னு கேட்டான். அதற்கு அவர் " ஓ, மாறிட்டுதே. மனுஷனா
மாறி , நீதிபதியாகி, காசியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் எல்லோருக்கும்
தீர்ப்பு சொல்லிக்கிட்டு இருக்குது " என்றார்.
இவனுக்கு சந்தோசம் பிடிபடலே. வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்லிவிட்டு
காசிக்கு ஓடினான் . போகும்போது, கையோடு கழுதைக்கு " தீனி " வாங்கி
வைக்கும் பையையும் எடுத்திட்டுப் போனான். நீதி மன்றத்துக்குள்ளேயும்
நுழைஞ்சிட்டான். அந்நேரம் நீதி மன்றத்தில் ஒரு பரபரப்பான வழக்கு
விசாரணை நடந்து கொண்டிருந்தது. இவன் நீதிபதி கண்களில் படும்படி ஒரு
இடத்தில் உட்கார்ந்து கொண்டு, அவரை சைகையில் அழைத்துக் கொண்டு
இருந்தான்.
அதைக் கவனித்த நீதிபதி இவனை, கைகளால் எச்சரித்தார். இவனோ, அவன்
விசாரணை நடந்து கொண்டிருந்தது. இவன் நீதிபதி கண்களில் படும்படி ஒரு
இடத்தில் உட்கார்ந்து கொண்டு, அவரை சைகையில் அழைத்துக் கொண்டு
இருந்தான்.
அதைக் கவனித்த நீதிபதி இவனை, கைகளால் எச்சரித்தார். இவனோ, அவன்
கையிலிருந்த பையை, கழுதைக்கு தினமும் தீனி வாங்கி வைக்கும் பையை
எடுத்திக்காட்டி, அவர் முகத்துக்கு நேராக ஆட்டினான். அதைக் கண்ட நீதிபதி
எடுத்திக்காட்டி, அவர் முகத்துக்கு நேராக ஆட்டினான். அதைக் கண்ட நீதிபதி
எரிச்சலானார். இவனோ, நாம இவ்வளவு தூரம் சொல்லியும் இந்த கழுதைக்கு
இன்னும் நம்ம ஞாபகம் வரலே போலிருக்கே.வேறே என்ன பண்ணினா ஞாபகம்
வரும்ன்னு நினைச்சிகிட்டு ' உஸ், ஸ்ஸ்"என்று குரல் கொடுத்தான், அதைக் கண்டு எரிச்சலடைந்த நீதிபதி, காவலர்களை அழைத்து அவனை விரட்டி
அடிக்கச் சொன்னார். இவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.
வரும்ன்னு நினைச்சிகிட்டு ' உஸ், ஸ்ஸ்"என்று குரல் கொடுத்தான், அதைக் கண்டு எரிச்சலடைந்த நீதிபதி, காவலர்களை அழைத்து அவனை விரட்டி
அடிக்கச் சொன்னார். இவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.
நேராக குருகுலம் போனனான். குருவிடம் ரொம்பவும் கோபமாக " சாமீ, நான்
எவ்வளவு செலவு பண்ணி என் கழுதையை மனுஷனா மாத்தி இருக்கிறேன்.
அதுக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை. அதனால் மறுபடி அதை
கழுதையா மாத்தனும் "ன்னு சொன்னான்.
அதுக்கு இன்னும் ஒரு ஐநூறு ரூபாய் செலவாகுமேனு குரு சொன்னார்.
"எவ்வளவு செலவானாலும் பரவா இல்லை. நன்றி விசுவாசம் இல்லாத அது
மனுசனாவே இருக்கக்கூடாது. நாளைக்கே நான் ஐநூறு ரூபாயோடு
வர்றேன்"ன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனான்.
திரும்பவும் கடனை வாங்கி பணத்தோடு குருகுலம் வந்தான். அவன்கிட்டே பணத்தை வாங்கிக்கொண்ட குரு " அதோ பார், கழுதையா மாறிப் போன நீதிபதி அதோ அந்த மரத்தடியில் நிற்கிறதைப் பார் " என்று கை காட்ட, இவன் ஓடிச்சென்று மரநிழலில் மேய்ந்து கொண்டிருந்த கழுதையை

கயிற்றால் கட்டிக்கொண்டு , " நீ உன்னைப் பத்தி பெரிசா நினைச்சிட்டு
இருந்தியே. நான் திரும்பவும் உன்னை கழுதையா மாத்திட்டேனா இல்லையா "
என்று கேட்டபடி கழுதையை தன்னோட வீட்டுக்கு அவன் ஓட்டிட்டுப்
போனான்.
போனான்.
அதைக்கண்ட குரு , " ஒண்ணு மனுஷனுக்கு சுயபுத்தி இருக்கணும். இல்லே,
மற்றவங்க சொல்றதைக் கேட்கிற அளவுக்கு பக்குவம் இருக்கணும். ரெண்டுமே
இல்லாத உனக்கு, இந்த ஆயிரம் ரூபாய் இழப்பு சரியான தண்டனைதான். இந்த
அபராதம் உனக்கு வேண்டிய ஒண்ணுதான் !" என்று தனக்குள் சொல்லிக்
கொண்டார்ன்னு, கதையை முடித்த பாட்டி, " என்ன கழுதைகளா .... தப்பு, தப்பு..
குழந்தைகளா, கதை எப்படி ? " என்று பிரபு மனோவிடம் கேட்க, " ரொம்பவும்
தூள் குருவே ! " என்று இருவரும் சேர்ந்து சொன்னார்கள்.
.
No comments:
Post a Comment