Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 29, 2021

அட கடவுளே இதை யாரிடம் சொல்வது?



நாடு போகிற போக்கைப் பார்த்தால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை விட, பட்டினி சாவு அதிகமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

என்னோட கவலை எல்லாம், அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டுமே என்பதுதான்.

மே 31ல் ஊரடங்கு முடிந்துவிடும். மறுநாள் கடைக்குப் போய் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். மேலும் ஊரடங்கு ஒரு வார காலத்துக்கு என்றால் சமாளிக்கவே முடியாது.

கொரோனாவால் வேலை இல்லை. கையில் பணம் இல்லை. ஏதோ இருக்கிறதை, கிடைக்கிறதை வைத்து காலத்தை ஓட்டுகிறோம் என்கிற நிலையில் பலர் இருக்கின்றனர்.

கடவுள் அருளால், பொருளை வாங்க கையில் பணமிருக்கிறது. ஆனால் பொருளை வாங்க முடியாத நிலை என்றால் என்னதான் செய்வது. ரேஷன் கார்டு என்பது என்னைப் பொறுத்தவரை வெறும் அட்டை. அதற்கு எந்த பொருளும் கிடையாது. அதைப் பற்றி இந்த நிமிடம் வரை யோசித்ததும் இல்லை.

என்னுடைய கவலை எல்லாம் அடுத்த வார சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்பதுதான். அதுவும் எங்கள் வீட்டில் பச்சரிசி மட்டுமே சமைப்போம். 

அரிசி, மளிகை பொருட்கள் விற்கும் கடைகள், ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது திறக்க வழி செய்தால் நன்றாக இருக்கும்.

சம்பந்தப்பட்ட, தலைமைப் பொறுப்பினர் ஏதாவது செய்யுங்கள். கையில் காசு இருந்தும் பொருள் வாங்க வகையின்றி பட்டினி கிடக்கப் போகும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

பாரத சமுதாயம் வாழ்கவே.. 

வாழ்க.. வாழ்க..

பாரத சமுதாயம் வாழ்கவே!

No comments:

Post a Comment