Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, January 06, 2020

மார்கழித் திங்கள் - 22


திருப்பாவை - 22


அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 02


அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் 
அகன்றது; உதயம் நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் 
கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் 
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! 
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!

No comments:

Post a Comment