திருப்பாவை - 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
-
- போற்றி அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல்லா வுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
-
- போற்றியெல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல்லா வுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
-
- போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
-
- போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment