Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, May 27, 2019

Meaningful Two words in one word puzzles (01 - 05)

Dear viewers, 
உங்கள் பார்வைக்காக புதிய வடிவிலான சில புதிர்கள். ஏற்கனவே "ஆகாரம்" புதிர் நீங்கள் அறிந்த ஒன்றுதான். 
(ஆகாரம்..... ஆ  காரம் ... ஆகா ரம் ).
கீழே உள்ள புதிர்,  இருவிதமாக பொருள் தரக்கூடிய ஒரே ஒரு வார்த்தையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டவை.
நிறைய புதிர்களை சால்வ் பண்ணி இருக்கிற உங்களுக்கு இவை சாதாரண விஷயந்தான். ஆனால்  டைம் பாஸ் பண்ண ரொம்ப சுவாரஸ்யமான புதிர்கள் இவை. ரெடி? ஜூட் !


புதிர் எண் 01

ஒருவர்: அய்யோ டாக்டர் காயம் பட்ட இடத்தில் வலி  தாங்க முடியலே.. நடக்க முடியலே . நான்  டூர் போக பேர் கொடுத்திருக்கிறேன். சீக்கிரம் சரியாகிடுமா?
டாக்டர் :  இன்றையமருத்துவ  உலகில் இந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப - - - - - . இது அப்படியொண்ணும் பெரிசில்லே.  - -  - - -  தான்.

புதிர் எண் 02

சமையலறையில் வேலையாக இருந்த அம்மா, ஹாலில் ஒரே கூச்சலும் அழுகுரலும் கேட்க, ஹாலுக்கு விரைந்து வந்தாள்  ஜூஸ் பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு ஹாலைச் சுற்றி ரமேஷ் ஓட, சுதாவும் ராதாவும் அவனைத் துரத்தி சண்டை போட்டுக்  கொண்டிருந்ததை கண்டாள். அம்மாவை கண்டதும் "ரமேஷ் அவனுக்கு நிறைய ஜூஸ் எடுத்துட்டு எங்களுக்கு கொஞ்சூண்டுதான் தருவான். அவங்கிட்டே  இருந்து பாட்டிலை வாங்கும்மா" என்றனர் சுதாவும் ராதாவும். அவனிடமிருந்து பாட்டிலை வாங்கிய அம்மா அதை மூன்று டம்ளர்களில் ஒரே அளவாக ஊற்றி மூவர் கையிலும் கொடுத்து "    இப்போ உங்க சண்டை முடிந்ததுதானே? உங்களுக்குள் " - - - - -"  தானே ? உங்கள் கையிலும்  " - -   - - - " தானே?" என்று கேட்க, "அம்மா, அவங்க ஒரு தமிழ் டீச்சர்ங்கிறதை ப்ரூப் பண்ணுறாங்க " என்று ரமேஷ் சொல்ல மற்ற இருவரும் அதை  கை தட்டி   ஆமோதித்தனர்  

புதிர் எண் 03


"என்னங்க.. உங்கள் நண்பர் வருகிறார். அவருக்கு பொழுது போகாட்டா பழைய ஜோக்ஸ் எல்லாம் சொல்லி நம்மள சாகடிச்சிடுவார். நீங்க பொறுமையா கேட்டுட்டு இருங்க. நான் கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" என்றாள் மனைவி.
அவனைப் பொறுத்தவரை அவன் சொல்றதெல்லாம் " - - - - -  " . காசா பணமா ? அவன் சந்தோஷத்துக்காக நீ சும்மான்னாலும் " - - - -   -  " என்றார் கணவர் . 


புதிர் எண் 04

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வீட்டுக்குள் ஓடி வந்த சோமு மேஜைமீது இருந்த பாட்டில் தண்ணீரை மடமட என்று குடித்து முடித்தான்,
"என்னடா இப்படி ?" என்று பாட்டி கேட்க, "நானும் ராஜுவும் பார்க்கில் பயங்கரமா "- - - -    - - - " போட்டோம். தொண்டை வலிச்சுது. அதான் தண்ணீர் குடிக்க ஓடி வந்தேன் " என்றான் சோமு.
"இந்த வயசிலேயே ஆயுதத்தை கையில் எடுக்கிறியா? படவா ராஸ்கல். ' - - - - - - - " போட்டியா ?" என்று கேட்டாள் பாட்டி.
இதைக் கேட்டு "ஹா ஹா" என்று சிரித்தான் சோமு.
சோமு என்ன சொன்னான் .. பாட்டி எப்படி புரிந்து கொண்டாள் என்பது உங்களுக்கு புரிகிறதா?

புதிர் எண் 05 
ஒரு வீட்டு வாசலில் "வீடு வாடகைக்கு " போர்டு தொங்குவதைக் கண்ட ஒரு கிராமத்து ஆசாமி, வீட்டு சொந்தக்காரரிடம் " நான் கிராமத்து ஆளு. ஒரு கேஸ் விஷயமா சென்னை வந்தேன். ஒரு மாசம் இங்கே தங்க வேண்டி இருக்கும். எனக்கு "- - -   - -" வேண்டும்  என்று அப்பாவித்  தனமாகக் கேட்டார் 
"ஆமாம்.. மண்ணும் சிமெண்டும் செங்கலும் விக்கிற விலையில் மண் வீடு கட்டவே யோசிக்க வேண்டிருக்கு.. ஸாருக்கு  " - - - - -" வேணுமாம்" என்று சொல்லிச் சிரித்தார் வீட்டு சொந்தக்காரர், சும்மா தமாஷுக்காக.
நான் என்ன சொல்லிட்டேன்னு இவர் இப்படி சிரிக்கிறார் என்று யோசிக்க ஆரம்பித்தார் நம்ம ஆளு. ஆனால் ரொம்ப யோசிக்காமே அவரோட கிண்டலை நீங்கள் புரிஞ்சுப்பீங்க தானே?

(குறிப்பு : விடையை கண்டுபிடித்தவர்கள் "அட .. கண்டு பிடிச்சிட்டேனே" என்று ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளலாம்.
சரியான விடையை தெரிந்து கொள்ள ஒரு வாரம் காத்திருக்கவும்.)




No comments:

Post a Comment