Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, April 03, 2019

Answer of New model puzzles to think ( 01 )

ஹாய் பிரெண்ட்ஸ், 

28.03.2019 ல்  ஒரு புதிர்     New model puzzles to think ( 01 ) என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன். நீங்கள் விடை கண்டு பிடிச்சிருப்பீங்கதானே.. இதற்கான விடையை "சுட்டி விகடன்" ஆசிரியர்  கண்டுபிடித்து அப்போதே சொல்லி விட்டார்.  உங்கள் பார்வைக்காக புதிரும் விடையும்.














கீழே உள்ள புதிர் உங்கள் மூளைக்கு வேலை தர பதிவு செய்யப்பட்ட ஒன்று.
நிரப்பப் பட வேண்டிய வார்த்தைக்காக மூன்று கோடிட்ட இடங்கள் உள்ளன.
அந்த மூன்று இடத்திலும் 4 எழுத்துக்களைக் கொண்ட ஒரே ஒரு வார்த்தைதான் 
மூன்று விதமாக அர்த்தம் தரும் வகையில் உள்ளது.
அது என்ன வார்த்தை என்று கண்டுபிடியுங்களேன். 
புதிர் எண் - 01
நண்பனைப் பார்க்க வந்த ராமு, நண்பனைத் தேடி வீட்டிற்குள் நுழைந்தவன், சாப்பாட்டு மேஜை அருகில் நண்பனைக் கண்டதும் "- - - -" என்று சொல்லியபடி ஒரு கிண்ணத்தைத் திறந்து அதிலுள்ள சாப்பாட்டை ஒரு பிடி அள்ளி வாயில் போட்டவன்  "-   - - -" என்று சொல்லிவிட்டு தண்ணீர் குடிக்க  ஃ ப்ரிஜ்ஜைத் திறந்தவன் அங்கிருந்த பாட்டில்களின் அணிவகுப்பைக் கண்டு  "- -   - -" என்று சொல்லி ஒரு பாட்டிலை கையில் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.

விடை  எண் - 01
நண்பனைப் பார்க்க வந்த ராமு, நண்பனைத் தேடி வீட்டிற்குள் நுழைந்தவன், சாப்பாட்டு மேஜை அருகில் நண்பனைக் கண்டதும் "ஆகாரம்" என்று சொல்லியபடி ஒரு கிண்ணத்தைத் திறந்து அதிலுள்ள சாப்பாட்டை ஒரு பிடி அள்ளி வாயில் போட்டவன்    "ஆ  காரம்"   என்று சொல்லிவிட்டு தண்ணீர் குடிக்க  ஃப்ரிஜ்ஜைத் திறந்தவன் அங்கிருந்த பாட்டில்களின் அணிவகுப்பைக் கண்டு  "ஆகா  ரம்" என்று சொல்லி ஒரு பாட்டிலை கையில் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.

No comments:

Post a Comment