சமீபத்தில் முகநூலில் பார்த்த கமென்ட் இது:
இதை பார்த்ததும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று மனதில் பட்டது.
தான் விரும்பும் நபர் தன்னை நினைத்தாவது பார்க்கிறார்களா என்பது கூட தெரியாமல் "காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்" என்று புலம்பும் ஜென்மங்கள் எத்தனை!
போன வாரம் எனது காதில் விழுந்த ஒரு டயலாக்: ஒருவர் மற்றவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
"அவளை நான் கரெக்ட் பண்ணி வச்சிருக்கிறேன். எப்போ வரணும்னு தோணுதோ அப்போ வரட்டும்"
இந்த டயலாக்கை வச்சே இவர்தான் யாரையோ கரெக்ட் பண்ணப் பார்க்கிறார். எதிர் சைட் இவரை நினைச்சு கூட பார்க்கிறதில்லேன்னு நல்லாவே தெரியுது.
டயலாக் சொன்னது இளவட்டம் என்றால் ரசிக்கவாவது செய்யலாம். சொன்னது ஒரு சீனியர் சிட்டிஸன். இத்தனை வயது வரை இந்த ஜென்மத்தை கரெக்ட் பண்ண (சரியான பாதையில் கொண்டு செல்ல ) அது வீட்டில் உள்ளவங்க நேரம் எடுத்துக்கவே இல்லை போலிருக்குது.
வெறும் பணம் பதவியைப் பார்த்து வருவதில்லை காதல். அடிக்கிற காற்றில் தூசி ஒரு கோபுரத்தில் ஒட்டிக்கொண்டாலும் தூசி, தூசிதான்னு அதனுடைய செய்கையே காட்டிவிடும்.
ஒருவனுடைய பழக்கவழக்கம், செயல், பேச்சுவார்த்தை அவன் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்னு எடுத்து சொல்லணும்.
அவனுடைய நடவடிக்கை அவன் செய்கிற தொழிலில் ரொம்பவும் நேர்மையானவன்னு எடுத்துக் கட்டணும்.
எல்லா வகையிலும் தான் ஒரு பூஜ்ஜியம் என்பதை இவனோட செய்கை யாலேயே படம் பிடித்துக் காட்டிவிட்டு "காதல்,கத்திரிக்காய்" என்று சோக கீதம் பாடினால் எப்படி? மற்றவர்களை முட்டாளாக்க இந்த மாதிரி ஜென்மங்கள் முயற்சி பண்ணலாம். அவ்வளவு முட்டாள் ஜனங்களா நாட்டில் இருக்கிறார்கள்? பரிதாபமே.
இந்த மாதிரி ஜென்மங்களுக்கு தூது செல்ல சில "எடுபிடி" இருக்கும். அதுங்க எண்ணம் "ஆஹா எப்பேர்ப்பட்ட மனுஷன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைச்சிருக்கான்"னு விழுந்து விழுந்து வேலை பார்க்கும்.

பிரச்னைனு வரும்போது முதல் பலிகடா இதுதான்.
One side காதலால் ஏற்பட்ட பிரச்னைகளை செய்தியாகப் படிக்கிறோம்.
நேற்று ட்ரெயினில் இரண்டு லேடீஸ் பேசிக்கொண்டு வந்தார்கள். ஒரு லேடி சொன்னது : "நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். கூட வேலை பார்க்கிற பொண்ணையே கூட்டிக் கொடுக்க அலைகிறான்னா இவன் எப்படிப் பட்ட ஆளுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா ? தறுதலைக்கு வேறே வேலை வெட்டி இல்லாட்டா எந்த பேங்கில் யார் எவ்வளவு பணம் வச்சிருக்காங்க? யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்தாங்கனு கணக்கு எடுத்துக்கிட்டு அலையட்டும். அது ஒண்ணும் ராணுவ ரகசியம் இல்லே. அதை தெரிஞ்சு இந்த நாய் என்ன பண்ண போகுது ? வேலை வெட்டி இல்லாத அம்பட்டன் பண்ணின வேலையை இவன் பண்ணட்டும் . இவனை யாரும் தடுக்கப் போறதில்லே."
இதற்குள் நான் இறங்கும் இடம் வந்து விட்டது. ஆனால் அவர்கள் சொல்வதை என்னால் யூகிக்க முடிந்தது.
இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஆட்களுக்கு கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?
மாமாவேலை பார்க்க ஆரம்பிக்கும்போதே "நீ அந்த பொண்ணை எத்தனை முறை பார்த்து பேசி இருக்கிறே? என்ன விஷயம் பேசினே? எழுதின லவ் லெட்டர்ஸ் இருக்குதா? எடுத்துட்டு வா . போலீஸ் கமிஷனர் ஆபீசில் போய் நியாயம் கேட்கலாம்" என்று எடுத்து சொல்ல வேண்டாமா? அதை விட்டுட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரத் தனத்தை என்னவென்று சொல்வது?
சிலநாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம் ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்த ஒரு பைத்தியம் (பெண்) திடீரென்று எழும்பி நின்று கொண்டு, "இப்படி கூப்பிட்டால் வரமாட்டே . நாலுபேரை வச்சு பஞ்சாயத்து பேசி கூட்டிட்டு போணும் " என்று யாரோ சொல்லிக் கொடுத்த டயலாக்கை ஒப்பித்துக் கொண்டிருந்தது. எல்லாரும் வேடிக்கை பார்த்தோம். அது ஒரு பைத்தியம் என்பதை ப்ரூப் பண்ணினது.
சரி. இதுவும் One side love ஒன்றின் திருவிளையாடல் என்பது புரிந்தது.
நான் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய பக்கத்து வீட்டு அக்கா ஒருத்தங்க காலேஜில் படிச்சிட்டு இருந்தாங்க. (அதன் பிறகு all india radio ல் ஒர்க் பண்ணினாங்க). அவங்க அடிக்கடி எங்க சூர்யா மாதிரி பிரேவ் யாரும் இருக்க முடியாதுனு சொல்வாங்க.
அதற்கான காரணத்தைக் கேட்டபோது அவங்க சொன்ன விஷயம்.
"என் பிரெண்ட் சூர்யா. அவளை ஒரு பையன் லவ் பண்ணினான். இவ போற இடத்துக்கெல்லாம் பின்னாலேயே வருவான். அது எங்க பிரெண்ட்ஸ் சர்க்கிளுக்கு நல்லாவே தெரியும். இவ அவனை சல்லிக் காசுக்குக் கூட மதிக்க மாட்டா. ஒருநாள் அவன் "எவனாவது பணக்காரன், காசு பணம் கிடைக்கும்னா பல் இளிச்சிட்டு போவேதானே ?'னு சொன்னான். இவ கொஞ்சம்கூட தயங்காமே, "இந்த விஷயத்தில் நானும் உங்க அம்மா, அக்கா தங்கச்சி மாதிரிதான் இருப்பேன். உன் வீட்டு பொம்பளைங்க பண்ணலாம். நான் பண்ணக்கூடாதா?"னு கேட்டுட்டா. அவன் போய்ட்டான். "என்னடி இப்படி பேசிட்டே?"னு நாங்கள் கேட்டோம்.
"பின்னே என்னடி! அவன் என் முகத்தில் கரி பூச வந்தான். அவன் கொண்டு வந்த கரியை அவன் உடம்பு முழுக்க பூசி அனுப்பினேன். ஒழுக்கமுள்ள பொம்பளைக்கு பிறந்தவனா இருந்தால் இனி இந்த பக்கம் வரமாட்டான். சாக்காட்டைனா திரும்பவும் வருவான். தெரு சாக்கடைக்கு பயந்தால் முடியுமா? இந்த மாதிரி விஷயங்களில் தயவு தாட்சண்யம் பார்க்க முடியாது "னு சொன்னாள். இந்த விஷயம் காலேஜ் பிரின்சிபால் வரை போய், அவங்க சூர்யா வீட்டுக்கு இன்பார்ம் பண்ணினாங்க. விஷயம் அந்த பையன் வீட்டுக்கும் தெரிஞ்சு அவனை வெளியூருக்கு பார்சல் பண்ணி அனுப்பினாங்க. மற்றவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அசிங்கப்பட்ட ஜென்மம்" என்று விவரம் சொன்னாள் அக்கா.
ஒரு சில ஜென்மங்கள் யார் பின்னாலாவது திரிந்து கரெக்ட் பண்ணப் பார்க்கும். பாச்சா பலிக்காட்டா,"நாயே"னு திட்டிட்டு போகும். கண்ணாடி முன்னாலே நின்று சொல்லவேண்டிய வசனத்தை தெருவில் நின்று மற்றவர்களைப் பார்த்து சொல்லும்.
ஆக மொத்தத்தில் தன்னைத் தானே ஹீரோ மாதிரி நினைச்சுகிட்டு, தன்னை நினைச்சு யாரோ தவம் இருக்கிற மாதிரி கற்பனை பண்ணி கிட்டு கற்பனைக் கதைகளை சொல்லிக் கொண்டு திரியும் ஜென்மங்கள் எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.
காதல் என்கிற பேரில் எதையாவது எதிர்பார்த்து அலைய வேண்டியது. நினைத்தது நடக்காவிடில் "ச்சீ .. ச்சீ .. இந்த பழம் புளிக்கும்"னு நரி சொன்ன டயலாக்கை சொல்ல வேண்டியது.
அப்போது கூட நரி, பழத்தின் மீதுதான் சேற்றை இறைத்து விட்டுப் போனது. மனிதர்களிலும் நரிகள் நிறையவே உண்டு.

No comments:
Post a Comment