இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த தளத்தில் பதிவாகி இருந்த MY BITTER EXPERIENCE WITH TATA SKY நீக்கப் பட்டு விட்டது. எனவே அதை தேடுவதில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம்.
அதற்கான பின்னணி விவரம் :
இன்று காலையில் ஆபீஸ் செல்ல எலெக்ட்ரிக் ட்ரைனில் நான் பயணித்துக் கொண்டிருந்த போது மொபைலில் அழைப்பு மணி அடித்தது.
அட்டென்ட் பண்ணினேன். ட்ரெயின் இரைச்சலில் எதுவும் காதில் விழவில்லை. அழைத்தது யார் என்பதும் தெரியவில்லை.
"நான் ட்ரைனில் போய்க்கொண்டிருக்கிறேன். ஆபீஸ் போனதும் நானே பேசுகிறேன் " என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டேன்.
(நான் இப்போ மல்லிகை மகள் பத்திரிகையில் Sub - Editor ஆக இருக்கிறேன்.
After retirement from Central Government Service பொழுது போக்காக இங்கு வேலையில் சேர்ந்தேன். வீட்டிலுள்ள பிரச்னைகள் காரணமாக ஆபீஸ்போய் வருவதை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தபடியே பத்திரிக்கை வேலையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் மறைவுக்குப் பின் வீடு மிகவும் போரடிப்பதால் டைம் பாஸ் பண்ண திரும்பவும் ஆபீஸ் போக ஆரம்பித்து விட்டேன். அதனால்தான் என்னுடைய பிளாக்கில் புதிதாக புதிர்களோ கதைகளோ எழுத முடிவதில்லை. ஆனால் கோகுலம் பத்திரிக்கையில் என்னுடைய படைப்புகள் ரெகுலராக வந்து கொண்டிருக்கிறது.
உங்கள் வீட்டில் மல்லிகை மகள் வாங்குகிறீர்களா? ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறேன் என்றால் எங்கள் அலுவலக வெளியீடில் தரமான / பயனுள்ள விஷயங்கள் உள்ளன.
வெளி நாட்டினர் சந்தா கட்டினால் வீடு தேடி பத்திரிக்கை வந்துவிடும்.) இதை ஏன் சொல்கிறேனென்றால் என்னுடைய blog viewers list ல் U.S.A viewers எண்ணிக்கைதான் அதிகம். இன்றைய தினத்தில் கீழே உள்ளதுதான் பட்டியல்
Thanks to all
இனிமே நம்ம மேட்டருக்கு வருவோம்.
ஆபீஸ் போனதும் அந்த நம்பரை தொடர்பு கொண்டேன். net work busy என்று message வந்தது. அதை வைத்தே அழைப்பு டாடா ஸ்கையிலிருந்து என்று புரிந்து கொண்டேன்.
customer care க்கு போன் பண்ணி எதற்கு call பண்ணினார்கள் என்று கேட்டேன்.
போன் அட்டென்ட் பண்ணினவர் "என்ன ? ஏது?" என்று விசாரித்தார்.
நான் கேட்ட கேள்விக்கு பதிலே வரலே. இப்போ நான் சொன்னா மட்டும் புதுசா என்ன சொல்ல போறீங்க என்றேன். போனில் என்னை அழைத்தது யார் என்பது அவருக்கு தெரியவில்லை. வழக்கமான வாக்கு வாதத்துக்குப் பின் technical error காரணமாக "nil balance " என்று message வந்திருக்கலாம் என்றார்
(எங்கள் குடும்பத்தில் மொத்தம் 5 engineers இருக்கிறாங்க. IBM, CTS, TCS நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஒரு network engineer நாலு software engineerஸ் இருக்கிறாங்க. எனக்கும் computer டெக்னாலஜி விஷயத்தில் துளியூண்டு மூளை உண்டு. )
அதனால் technical error என்று சொல்வதை நான் நம்ப தயார் இல்லை என்று நிரூபித்தேன். technical error ஆக இருந்தால் primary line ல் "nil balance " என்ற message ம் secondary line ல் picture ம் வருமா என்ன ?"
உடனேயே அந்த பையன் "தெரியாமல் ஏதாவது தப்பு நடந்திருக்கும். மன்னிச்சுக்கோங்க " என்றது.
"10 நாளைக்கும் மேலான போராட்டத்துக்கு பிறகு நீ சொல்ற இந்த வார்த்தையை முதல் முறையாக போன் பண்ணி நான் கேட்டபோது சொல்லி இருந்தால், சரினு சொல்லி அந்த விஷயத்தை அப்பவே நான் ignore பண்ணி இருப்பேன். 30க்கு மேலே போன் . 16 sms. எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று sms க்கு டைப் பண்ணுவது. ஆனால் அதையும் நான் செஞ்சேன். sms அனுப்ப தேவை இல்லாத பண செலவு. என்னோட call ஐ reject பண்ணி என்னென்ன கேம் ஆடுனீங்க."என்று கேட்டேன்.
"மன்னிச்சிடுங்க. இனிமே இப்படி நடக்கவே நடக்காது. நடந்தால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க " என்றான் அந்தப் பையன்.
"அப்படி ஒன்று இனி நடந்தால் உனக்கு போன் பண்ணவே மாட்டேன். நேராக உங்க H.O.D வீட்டு முன்னால நின்று தர்ணா பண்ணுவேன் " என்றேன்.
அந்த பையனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டேன்.
அந்த பையனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து என்றால்.. "இனி பிரச்னை வராது" என்று நம்பிகையினால் அல்ல. தெரியாமல் ஏதாவது தப்பு நடந்திருக்கும். மன்னிச்சுக்கோங்க" என்ற வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து.
அவர்களிடம் இருந்து பெனால்டி வாங்காமல் விடக்கூடாது என்ற முடிவுடன் போராட ஆரம்பித்தேன்.
பெனால்டி தொகை எவ்வளவு என்பது பிரச்னை இல்லை. அது ஒரு ரூபாயாக இருக்கட்டும் அல்லது ஆயிரம் பத்தாயிரமாக இருக்கட்டும். அத்தனை நோட்டிலும் "திரு. முருகன் குடும்பத்துடன் எங்களது நிறுவன ஊழியர்கள் நடத்திய திருவிளையாடலுக்காக டாடா ஸ்கை அளிக்கும் பெனால்டி தொகை இது" என்று எழுதி கையெழுத்திட்டு அதை பிரேம் பண்ணி தரும் வரை விடக்கூடாது. மோதிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இருந்தேன்.
(அதை வச்சு என்ன செய்யப் போறேனு கேட்கிறீங்களா ? அவங்க சர்வீஸ் பத்தி மார் தட்டி விழா கொண்டாடும்போது இதை நான் அவங்க கிட்டே காட்டுவேன்)
இதேபோல ஒரு பிரச்னை ஒரு இடத்தில் வந்தபோது, வேறே organisation க்கு மாறலாமா என்று என் friend கேட்டபோது நல்லா சர்வீஸ் பண்ற இடமா பார்த்து சேரணும் என்றேன்.
அப்படின்னா நல்லா சர்வீஸ் பண்றது எதுன்னு என் friend கேட்டபோது, customer care என்று ஒன்று இருந்து complaint book பண்ண தனி நம்பர் இருந்து, அந்த நம்பருக்கு அழைப்பே வராமல், அல்லது குறைவான அளவில் அழைப்பு வந்தால் அவங்க சர்வீஸ் better ஆக இருக்கும்னு நாம முடிவு பண்ணிக்கலாம் என்றேன்.
உடனே, "இவன்கிட்டே complaint book பண்றதை விட ஒரு எருமை மாட்டிடம் சொல்வது பெட்டர்னு நினைச்சு சிலர் complaint book பண்ணாமே இருக்கலாம்தானே. எல்லா இடமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கும்" என்று தோழி சொன்னாள். அதுகூட சரியான ஸ்டேட்மெண்ட் ஆக எனக்கு தெரிந்தது.
இந்த பிரச்னையை இப்படியே விட வேண்டாம் என்று குடும்ப நண்பர் சொன்னார். (இந்த விஷயம் காம்ப்ரமைஸ் ஆனதால் மீடியாக்களுக்கு கிடைக்க வேண்டிய பரபரப்பு செய்தி கிடைக்காமல் போய்விட்டது. டோன்ட் வொரி. இன்னொரு சான்ஸ் தராமல் இருந்துவிடப் போகிறார்களா என்ன?!)
32 வருட மத்திய அரசுப் பணியில் 15 வருட காலம் administration section ல் இருந்திருக்கிறேன்.
ஒருசில விஷயங்களுக்காக ஒரு சிலரை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். என்னோட லெவலில் கண்டித்து அனுப்பி விடுவேன். அதை மேலிடத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல மாட்டேன்.
அது பற்றி என்னுடைய சக ஊழியர்களே வாக்கு வாதம் செய்வார்கள்.
அவர்களிடம், "எல்லோரும் வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு ஓடி வர்றோம். ஏதோ தப்பு நடந்துடுது. கூப்பிட்டு திட்டும்போது, அவங்க தலை குனிஞ்சு நிக்கும்போது, 'நம்ம வீட்டுப் பிள்ளைகளும் இப்படித் தானே எதையாவது செஞ்சிட்டு தலை குனிஞ்சு நிக்கும்" என்ற நினைப்பு வருது.. பாவம்னு தோணுது. இதுங்க பண்ணினது ஊழல் இல்லே. தப்புதானே செஞ்சிருக்காங்க. அதான் கண்டிச்சு அனுப்பினேன் " என்பேன்.
என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர் ஒருவர் . அவரிடமிருந்து ஒரு விஷயத்தை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
"கீழே வர்றீங்களா?" என்று இண்டர்காமில் நான் சொல்லும் தொனியை வைத்தே கையில் ஸ்கேலோடு வருவார். அதை என் கையில் கொடுத்து, முதுகைக் காட்டி திரும்பி நின்று "ப்ளீஸ் அருணா.. திட்ட மட்டும் செய்யாதீங்க. அதுக்குப் பதிலா ரெண்டு அடி குடுத்திடுங்க " என்பார்.
"ஏன் ?" என்பேன்.
"நீங்க கேட்கிற கேள்வி என்னை டார்ச்சர் பண்ணும். அதே மூடில் வீட்டுக்குப் போவேன். வொய்ப் கிட்டே என் பொண்ணுகிட்ட அந்த கோபத்தை காட்டுவேன். அடிச்சிட்டா அதை இங்கேயே மறந்துடுவேன்" என்பார்.
இப்படியும் சில நபர்கள்.. நண்பர்கள். ஹூம்....
No comments:
Post a Comment