புதிர் - 78 - மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது .
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது .
1
|
3
|
19
|
6
|
21
|
25
| ||||||
20
|
22
|
23
|
24
|
13
|
16
| ||||||
8
|
10
|
15
| |||||||||
2
|
4
|
18
|
7
|
9
|
11
|
17
| |||||
5
|
12
|
14
| |||||||||
மேலிருந்து கீழ்
1 சாப்பிடும் மருந்துக்கேற்றவாறு உணவில் கட்டுப்பாடு (5)
2 கேள்விபதில் - வேறொரு சொல் (4)
3 தீப ஒளித் திருநாளையொட்டி கொண்டாடப்படும் வழிபாடு (5)
4 நூலாம்படை - வேறு சொல் (4)
5 சிறு குழந்தைகளின் குறும்புத்தனம் (3)
6 மரகதம், பவளம் போன்று விலையுயர்ந்த கல் (5)
7 கோட்டை / பேழை (4)
8 என்ன சொன்னாலும் மூளையில் ஏற்ற முடியாதவன் பற்றி சொல்லப்படும் சொல் (5)
9 ஒரு தேசத்தின் பாதுகாப்பு வளையம் (4)
10 இளம் செங்காவி நிறத்திலான தலை முடி (5)
11 வெண்ணிற ஆடை - வேறு பெயர் (4)
12 சிறு குழந்தைகளை குதூகலப்படுத்தும் விளையாட்டு உப்பு - - - தூக்குதல் (3)
13 மன்னன் / தலைவன் (4)
14 காய்ந்த தென்னை ஓலை - வேறு பெயர் (3)
15 நூலால் கைவேலையாக உருவாக்கப்பட்ட உடை (5)
16 வழிபாடு (4)
17 பொழுது போக்காக அரங்கேறும் வெட்டிப்பேச்சு (4)
கீழிருந்து மேல்
1 யாத்திரை / பிரயாணம் (4)
3 லட்சம் - வேறு சொல் (4)
6 மரம் அறுக்கத் தேவை (4)
8 திருமணம் போன்ற விசேஷங்கள் (பொதுவாக) நடக்குமிடம் (5)
9 வேறுபாடு / மாறுபாடு (5)
10 காய்ந்த இலை/ சருகு இவற்றால் ஏற்படும் குப்பை (3)
11 விபூதி - வேறு சொல் (4)
12 (நெருப்பு) பற்ற வைத்தல் (5)
13 முன்பணம் (5)
14 சமயம் சார்ந்த ஒரு மடத்தின் தலைவர் (5)
15 உயிர் / ஜீவன் (4)
16 இறைநம்பிக்கை சார்ந்த கொள்கை (5)
18 சுவாரஸ்யம் என்பதை - - - - - என்றும் சொல்வதுண்டு (5)
19 வயல் சார்ந்த நிலம் (4)
20 சாட்டையால் சொடுக்கி விட்டால் சுழல்வது (5)
21 தலையில் குடம் வைத்து ஆடும் கிராமிய நடனம் (4)
22 மண்ணில் செய்யப்பட்ட பாத்திரம் / பானை (5)
23 எல்லாம் இருந்தும் ஆரவாரமற்று எளிமையாக இருக்கும் தன்மை (5)
24 யானை / இளமை - வேறு சொல் (5)
25 அனைத்தும் - வேறு சொல் (4)
No comments:
Post a Comment