புதிர் எண் 21 - 25 வரையிலான விடைகள் வெளியாகி உள்ளது.
என்னுடைய ஸிஸ்டத்தில் சில குளறுபடிகள் உள்ளது என்று நினைக்கிறேன்.
ஒரு புதிரை அமைக்கும்போது ஒவ்வொரு வார்த்தையையும் பலமுறை மாற்றி மாற்றி அமைக்க நேரிடும்.
ஒரு word டைப் பண்ணியபின், அதை மாற்றி அமைக்க முயற்சி செய்யும்போது, டைப் பண்ணும்போது தெரியும் புதிய வார்த்தைகள் save ஆகாமல், ஏற்கனவே டைப் செய்த வார்த்தைகளே பதிவாகிறது.
ஒரு எழுத்தை delete பண்ணும்போது அந்த கணம் அது மறைந்து, பின் பழையபடி அதேஎழுத்து பதிவாகிறது. எதனால் இப்படி என்பது தெரிய வில்லை.
பதிவு செய்த வார்த்தைகளை மாற்றி அமைக்கும்போது ஏற்படும் இந்த கோளாறை கவனக் குறைவாக விட்டுவிட்டால், புதிர் தப்பானதாக தோன்றும்.
அதுவுமில்லாமல், பதிவு செய்தபின் எழுத்து வடிவமே மாறி விடுகிறது.
இது எப்படி ஏற்படுகிறது என்பது தெரியுமளவுக்கு எனக்கு கம்ப்யூட்டர் அறிவு கிடையாது.
அவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு புதிர் அமைத்தபின், அது தப்பும் தவறுமாக உங்கள் கண்ணில் பட்டால் அது கேலிக்கூத்தாகிவிடும்.
கோளாறு எங்கே என்பதைக் கண்டுபிடித்து சரி செய்தபின் புதிய புதிர்கள் வெளியாகும்.
இதுவரை 25 புதிர்களும் அதன் விடையும் வெளியாகி உள்ளது.
அந்தப் பதிவை பார்க்கும்போதே, நான் சொல்லும் பிரச்னைகள் உங்கள் கண்ணிலும் படும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment