FACE BOOK ல் படித்த "ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது" என்கிற வரிகள் எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் அந்த நட்பின் எண்ணமும் எனது சுபாவமும் மிகவும் ஒத்துப் போகிறது.
அவதூறு, பழிச்சொல் இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவே மாட்டேன். ஆனால் அந்த மாதிரி நபர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பேன். கேவலம் - ஒரு சிறு விஷயத்துக்காக எதையும் செய்யத் துணிந்த இப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர்களை இப்போதாவது அடையாளம் தெரிந்ததே என்று நினைத்துக் கொள்வேன். அடையாளம் காட்டிய கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
ஒரு சிலர், வேறு யாரையாவது பற்றி என்னிடம் அவதூறாகப் பேசினால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
ஒரு பெண்ணைப் பற்றி ஒருவன் தூற்றினால் அதற்காக அந்தப்பெண் தப்பானவள் என்று முடிவுகட்ட நான் ஒன்றும் முட்டாள் அல்ல. பழி சொல்லும் அந்த நபர் அந்தப் பெண்ணிடம் அடிபட்ட ஆளாகக் கூட இருக்கலாம்.
திராட்சைப் பழம் கிடைக்காத நரி, "ச்சீ ச்சீ பழம் புளிக்கும் " என்று பழத்தின் மீதுதான் குறை சொன்னது.
ஒருமுறை ரயில் பயணத்தின் போது, உடன் பயணித்த ஒருவர் அவரது உறவுக்காரப் பெண்ணைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசிக்கொண்டு வந்தார், கேட்பவர்கள் காது புளித்துப்போகும் அளவுக்கு. "ச்சே .. என்ன ஜென்மம் இவன் " என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
ஜன்னலோரமாக உட்கார்ந்து வெற்றிலையை குதப்பிக் கொண்டிருந்த, பார்வைக்கு நாட்டுப்புறத்தான் மாதிரி இருந்த பயணி ஒருவர், "அடடா.. அப்படிப்பட்ட பொம்பளை கூட உன்னை தூக்கி எறிஞ்சிட்டாளா ? இந்தக் கொடுமையை யார்கிட்டே சொல்லி தீர்த்துக்க முடியும். இப்படி பேசித்தான் தீர்த்துக்க முடியும்!" என்று ரொம்பவும் கேஷுவலாக சொல்ல அதன்பிறகு அந்த ஆசாமி வாயைத் திறக்கவே இல்லை.
ஒருசில ஜென்மங்கள் அடுத்தவங்க மேலே சேற்றை வாரி இறைக்கிறதாக கற்பனை செய்துகொண்டு தங்கள் மீது தாங்களே ஊற்றிக் கொள்கிறார்கள். தங்களது சுய ரூபம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறார்கள். Thank god.
இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் மிகவும் துணிச்சலாக இருக்கிறார்கள். தைரியமாக எதையும் வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் ரயில் பயணத்தில் நான் கேட்ட / ரசித்த ஒரு உரையாடல். எனது அருகில் இருந்த ஒரு பெண் - பார்ப்பதற்கு எதோ காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருந்தாள். யாருடனோ போனில் பேசிக் கொண்டு வந்தாள். அவளுக்கு என்ன பிரச்னை என்பதை ஓரளவு யூகித்துக் கொண்டேன். அவள் சொல்லிய வார்த்தைகள் : "என்னது! வீட்டில் வந்து சொல்லுவியா ? வா.. சொல்லு. நான் மீடியா ஆட்களை வர சொல்றேன். நீ சொல்றதை ரெக்கார்ட் பண்ணி எடுத்துக்கிட்டு கமிஷனர் ஆபீஸுக்குப் போவோம். அங்கே போனதும் உன் வீட்டு ஆட்களையும் வரவழைச்சு ரெகார்ட் பண்ணினதை போட்டுக் காட்டுவோம். வர்றியா ?" என்றாள்.
நான் ஆச்சரியமாக அந்தப் பெண்ணைப் பார்த்தபடி பயணித்தேன்.

No comments:
Post a Comment