Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, October 09, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 06)

புதிர் எண் 5 ன்  விடை - கண்டம் 
இனி இந்த  வார புதிருக்குப் போவோமா ?

புதிர் எண் 6
Image result for images of school boys
அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்புத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா மறுநாள் நடக்க இருந்தது. 
அந்த தினத்தில் யார் யார் என்ன / எந்த விதமான உடையில் வரப்  
போகிறார்கள் என்பது பற்றி பேச்சு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு 
உடை பற்றி சொல்ல, ஷங்கர் மட்டும் அமைதியாக இருந்தான். உன் 
டிரஸ் பற்றி நீ எதுவும் சொல்ல வில்லையே என்று கேட்ட மற்ற 
மாணவர்களிடம் " அது சஸ்பென்ஸ் " என்றான் ஷங்கர். மற்றவர்கள் வற்புறுத்திக் கேட்கவே , " சரி , க்ளு கொடுக்கிறேன். முடிந்தால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என்ற ஷங்கர்  " 11 " எழுத்தில்  அமைந்திருக்கும். முதல் எழுத்தும் 8 வது  எழுத்தும் சேர்ந்தால் தந்திரத்துக்குப் பெயர் 
பெற்ற ஒரு விலங்கு. 2 மற்றும் 3 வது எழுத்து " தேன் / போதை பானத்தை
குறிக்கும். 4, 5, 6 வது எழுத்துக்கள் சுமையைக் குறிக்கும். 7 வது 8 வது எழுத்து குதிரையைக் குறிக்கும் . 7 மற்றும் 9 வது எழுத்து  அச்சத்தைக் குறிப்பிடுவது 10 மற்றும் 11 நமது டாபிக் எதைப் பற்றி என்பதைக் குறிக்கும். யாராவது இதைக் கஷ்டமா பீல் பண்ணினால் , 
வரிசையாக 11 கட்டங்களை வரைந்து, குறிப்புக்கு ஏற்றபடி கட்டங் களை நிரப்பலாம்" என்றான் ஷங்கர். ஒரு சில மாணவர்கள் சிறிது தடுமாறினாலும் கட்டங்களுக்குள் எழுத்துக்களை  எழுதி சரியான விடையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.    நீங்க கண்டுபிடிச்ச விடையை 
சொல்லுங்க பார்க்கலாம். சரியாக சொன்னவங்களுக்கு ஒரு " சபாஷ் "

No comments:

Post a Comment