Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, August 22, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 09 )

சென்ற வார புதிர் எண் -08 க்கான விடை : அட்டகத்தி ( அட்டை கத்தி )
இனி இந்த வார புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்.

புதிர் எண் -09
Image result for images of two boys with cows

ராமனும் சோமனும் ரொம்பவும் சோகமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ராமுத்தாத்தா "என்னப்பா, நீங்க இன்னும் உங்க தாத்தாவை நினைச்சு தான் வருத்தப்பட்டுகிட்டு இருக்கீங்களா? தொண்ணூறு வயசு வரை அவர் வாழ்ந்ததே பெரிய விஷயம். அதை நினைச்சு சந்தோசப்படனும் " என்று ஆறுதலாக சொன்னார்.
" நாங்க தாத்தாவை நினைச்சு வருத்தப்படலே. அவர் பண்ணிட்டுப் போயிருக்கிற காரியத்தை நினைச்சு வருத்தப்படறோம். என்னோட மூணு பேரக்குழந்தைகளையும் சமமாகத்தான் நினைக்கிறேன்னு பேசும் போதெல்லாம் சொல்லிட்டு, இப்போ எங்க அண்ணன் கோமனுக்கு அதிகம் சொத்து கொடுத்திட்டு எங்களுக்குக்  குறைவாக கொடுத்திட்டார் " என்றார்கள் இருவரும்.
" எந்த சொத்தைக் கொடுத்தார் ?" என்று தாத்தா கேட்க, " உங்களுக்குத் தெரியாதா என்ன, அவர்கிட்டே இருந்த 26 மாடுகளில் அண்ணனுக்கு முதலிலேயே 9 மாட்டைப் பிரிச்சுக் கொடுத்துட்டார். சினையாக இருக்கிற வெள்ளைப் பசு இன்னும் இரண்டு மாசத்தில், கன்று போட்டுடும். அதுக்குப் பிறகு கன்னுக்குட்டியை நாங்க கோமனிடம் குடுத்துட்டு ஒரு  மாட்டை அவனிடமிருந்து வாங்கி மொத்த மாட்டை நாங்க ரெண்டு பேரும் சமமாப் பிரிச்சு எடுத்துக்கணுமாம். எங்க தாத்தா பண்ணினது நியாயமே இல்லை " என்றான் சோமன்.
"அட முட்டாள்களா, நீங்க ரெண்டு பேரும் மழைக்காகக்கூட பள்ளிக் கூடம் பக்கம் போய் ஒதுங்கினது கிடையாது.படிக்க வேண்டிய வயசில் படிச்சிருந்தா உங்க தாத்தா எவ்வளவு நியாயமா செஞ்சுட்டுப் போயிருக் கிறார்னு உங்களுக்குத் தெரியும். எங்கிட்டே சொன்ன மாதிரி உங்க கவலையை மத்தவங்ககிட்டே சொல்லி முட்டாள்பட்டம் வாங்கி கட்டிக் காதீங்க. படிப்பு மண்டையில் ஏறாதவனை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்பார்கள் . முட்டாள்களா , மாடு மேய்க்கவும் படிப்பறிவு கொஞ்சமாவது வேணும். ஒரு வீட்டிலிருந்து எத்தனை மாட்டைக் கொண்டு போகிறோம், எத்தனையை திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கிறோம் என்ற கணக்குப் பார்க்கத் தெரிய வேண்டுமே " என்று சொல்லிவிட்டு தாத்தா அங்கிருந்து போய் விட்டார். அவர்கள் இரண்டு பேரும் இன்னும் குழப்பத்தில் கவலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிய வைக்க உங்களால் முடியுமா ?

No comments:

Post a Comment