Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, August 28, 2016

புதிர் எண் -08க்கான விடை - 
மொத்த மாடு - 26
கோமனுக்கு கொடுத்தது - 9
மீதமுள்ளது  - 17
ளைப்பசுவின் கன்றைக் கோமனிடம் கொடுத்து விட்டு ஒரு மாட்டை வாங்கினால், இவர்கள் இருவரின்  கணக்கில் சேரும் மாடுகளின் எண்ணிக்கை  மொத்தம் 18. அதை சரி சமமாகப் பிரித்தால் இருவருக்கும் தலா 9  மாடுகள்  கிடைக்கும். பாரபட்சம் இல்லாமல் மூன்று பேருக்கும் சம அளவு கிடைத்தது.
 இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள் 

புதிர் எண் - 09
Image result for images of village boys

"என்னடா ஒரு ஆள் குறையற மாதிரி இருக்கே " என்று  கேட்டார் தாத்தா.
"எப்படி தாத்தா எண்ணிப் பார்க்காமலே, எங்களை பார்த்ததுமே சொல்றீங்க ?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள் குழந்தைகள்.
"கண் சொல்லாததை கை சொல்லிடுமா என்ன ?" என்று எதிர் கேள்வி கேட்டார் தாத்தா.
"சுரேஷ் வரலே ...நாங்க இன்னிக்கு சுரேஷைக் கூப்பிடவே இல்லை"
"ஏன்டா ?"
"அவனுக்கு ரொம்ப தலைக்கனம் ... அவன் இங்கிலீஷில் நிறைய மார்க் வாங்கிட்டதாலே.. நாங்க பெயில் தாத்தா.. இங்கிலீஷ் தெரியலையேன்னு அவமானமா இருக்குது  "
"அட...போங்கடா...இங்கிலீஷ் தெரியலைன்னா   இங்கிலீஷ்காரன் வெட்கப்படணும். அது அவனுக்குத் தாய்மொழி. அவன்  வெட்கப் பட்டா   அதில்  ஒரு  நியாயம் இருக்குது. தமிழில் நிறைய விஷயம் உங்களுக்குத் தெரியாது. அதை நினைச்சு வெட்கப் பட்டால் அதில் அர்த்தம்இருக்குது. இங்கிலீஷ் தெரியாட்டா படிச்சு தெரிஞ்சுக் கோங்க "
"போங்க தாத்தா... எங்களை சமாதனப்படுத்த இப்படிப் பேசறீங்க. படிக்கிற நாங்க அந்த பாடத்தில் பெயில் ஆனா  அது ஷேம் தானே தாத்தா ! என்ன தாத்தா அதுக்கு மட்டும் அப்படியொரு பெருமை ?"
"புள்ளைங்களா ...உலகத்தில் எத்தனையோ நாடுங்க இருக்கு. அந்தந்த  நாட்டுமொழி தெரியாட்டா கூட இங்கிலிஷ் தெரிஞ்சா எங்கே போனாலும் சமாளிச்சிடலாம். ஏன்னா ஒரு காலத்திலே வெள்ளைக்காரங்க உலகம் முழுக்க ஆண்டாங்க. வச்சுக்கிட்டு வஞ்சனை பண்ணாமே எல்லா இடத்திலேயும் அதை பரவலா தூவி விட்டுட்டுப் போயிட்டாங்க. அது முளைச்சு வந்து அவங்க பெருமையை சொல்லுது. "
"அப்படி என்ன தாத்தா பெருமை ?"
"டேய் புள்ளைங்களா ... ஒருத்தனை "நீ "னு ஒருமைலே சொன்னா அவன் கிரீடம் விழுந்துட்ட மாதிரி கோபப்படுவான். அதையே "யூ"னு சொல்லு....பேசாமே இருப்பான். ஒருத்தனை "போ"னு   சொன்னா கோபப்படுவான். "கோ"னு சொல்லு. வாயைத் திறக்காமே போவான். "மூளை இருக்கா"னு ஒருத்தனைப் பார்த்துக் கேட்கிறப்ப அவனுக்கு வர்ற கோபம் அவனை "சென்ஸ்லெஸ்"னு சொல்றப்ப வராது. "உதவாக்கரை"னு சொன்னா  உடனே அங்கே  பிரளயம் வெடிக்கும். "யூஸ்லெஸ்"னு சொன்னா மண்ணு மாதிரி இருப்பான்  
"அப்படின்னா அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியலைனு அர்த்தமா ?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்கள் குழந்தைகள்.
"ஏதோ ஒண்ணு ... இங்கிலீஷ்  தெரியும்னு சுரேஷ் தலைக்கனம் பிடிச்சு அலையறான்னு சொல்றீங்களே..அவன்கிட்டே போய், "நீ உன் அப்பாவுக்கு எத்தனையாவது குழந்தை?'கிறதை இப்போ தமிழில் கேட்கிற மாதிரி இங்கிலீஷில் சொல்ல சொல்லு. அவன் என்ன சொன்னான்னு என்கிட்டே வந்து சொல்லுங்க"என்று தாத்தா சொல்லி முடிக்கும் முன்பே குழந்தைகள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தார்கள் . உங்களுக்கு விடை தெரியுந்தானே ?"

No comments:

Post a Comment