Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 19, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 26

                                       
   அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணியை அழைத்துக் கொண்டு கமிஷனர்  ஆபீசுக்கு வந்தார்கள் காவலர்கள் இருவரும். சீருடைக் காவலர்கள் அங்கும் இங்குமாக பரபரப்பாக சுற்றிக் கொண்டிரு ந்ததைக் கண்டதும் தான் வந்திருக்கும்  இடம் எது என்பது அப்புமணிக்குப் புரிந்து விட்டது. 
"என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தீங்க ?" என்று கேட்டான் அப்புமணி அப்பாவித் தனமாக.
"உனக்கு வேலை வாங்கித் தரலாம்னுதான் " என்று கிண்டலான பதில் வந்தது எதிர்த் தரப்பிலிருந்து.
"ஹையா ... ஜாலி ....ஒரு அண்ணா எனக்கு கலெகடர் வேலை வாங்கித் தர்றேன்னு சொல்றாரு. நீங்க என்ன வேலை வாங்கித் தருவீங்க? உங்களைப் போல போலீஸ் வேலையா?"
"போலீஸ் வேலை எப்படின்னு  நீ இப்போ பார்க்கத்தானே போறே. போதும் போதும்னு நீ சொல்ற நாங்க அளவுக்குத் தருவோம்தானே " என்று கான்ஸ்டபில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த இன்ஸ் பெக்டர்  ஒருவர், "யாருப்பா இந்தப் பையன் ?" என்று கேட்டார்.
அவருக்கு விறைப்பாக  நின்று சல்யூட் செய்த காவலர்கள், "காசி மேடு குண்டு வெடிப்பில் நாம தேடிட்டு இருக்கிறோமே பிரவீன், அவனுக்கு ஒரு சகா உண்டு. பேர் சேகர். அவனோட இவன் பீச்சில் விளையாடிட்டு இருந்தான். எங்களைக் கண்டதும் அவன் தப்பிட்டான். அவனைப் பத்தி விசாரிக்கதான் இவனை அழைச்சிட்டு வந்தோம். அசிஸ்டன்ட் கமிஷனர்   கூட சேர்ந்து கமிஷனர் ஏதோ ஒரு  முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறா ராம். முக்கியமான ரெண்டு பேருக்காக அவர் வெயிட் பண்றாராம்.அதான்  நாங்க இங்கே வெயிட் பண்றோம்" என்றனர்.
"கொம்பை விட்டுட்டுத் வாலைப் பிடிக்கிறதே உங்களுக்குப் பொழைப்பாப் போச்சு" என்று சொல்லி தலையில் அடித்தபடி அங்கிருந்து நகர்ந்தார் இன்ஸ்பெக்டர் . 
அப்போதுதான் அப்புமணிக்கு சேகரும் அவனது நண்பர்களும் போலீஸால் தேடப்படும் விஷயம் புரிகிறது.அந்தப் பிரவீன்அண்ணா குண்டு வைக்கிற வரா ? பார்த்தால் அப்படித் தெரியலையே.அவர் நல்லவரோ இல்லையோ .. எனக்கு அவர் எந்தக் கஷ்டமும் தரலையே.அம்மா அடிக்கடி சொல்வாங் களே, உலகத்தில் எந்தவொரு மனுஷனும் எப்பவும் எல்லாருக்கும் நல்ல வங்களா இருக்க முடியாது. அவனவன் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கபடி நல்லவனாவும் கெட்டவனாவும் மாறுவான். மத்தவங்களுக்கு ஒருத்தன் கெட்டவனா இருந்தாக்கூட அவனாலே நமக்கு எந்த கஷ்டமும் வராத வரை, அவனை நாம கெட்டவன்னு முடிவு கட்ட வேண்டாம்னு சொல்வா ங்களே. அண்ணாவைப் பத்தி யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாதுனு தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான். மாரியம்மை கையிலே இருந்த காசைப் பத்தி அவளோட குடிகாரபுருஷன் கிட்டே உண்மையை சொல்லப் போய்த்தானே, அவன் அவ கையிலிருந்த காசைப் பிடுங்கிட்டு ஓடினான். அப்பவே அம்மா சொன்னாங்களே, நாம உண்மை பேசினால் அதனாலே மத்தவங்களுக்குக் கஷ்டம் வரும்னு தெரிஞ்சா, எதுவுமே பேசாமே இருந்திடணும்னு. நாம அப்படியே இருந்திடுவோம்னு தீர்மானம் எடுத்துக் கொண்டான். 
"டேய் ... உன் கூட இருந்தானே, அவன் இருக்கிற இடத்தைக் காட்டுடா " என்றார் கான்ஸ்டபில் ஒருவர் 
"என் கூட யார் இருந்தாங்க ? பீச்சில் யார் யாரோ இருந்தாங்க . நீங்க யாரைக் கேக்கறீங்க ?"
"உனக்கு சுண்டல் வாங்கிக் குடுத்தானே அவன் !"
"அவர் யாரோ ? யாருக்குத் தெரியும். ஊரை விட்டு ஓடி வந்திட்டேன். பசிக் குதுன்னுசொன்னேன்.சுண்டல் வாங்கித் தந்தார். அவ்ளோதான் " என்று சிரிக்காமல் பதில் சொன்னான் அப்புமணி, வந்த சிரிப்பை அடக்கிய படி.
"ரெண்டு போட்டேன்னா தெரியும் " என்று ஒருவர் கையை ஓங்க, அவரது விலாவில் இடித்து "ஏ.சி வர்றார் " என்று சைகை செய்த இன்னொரு கான்ஸ்டபில், அப்புமணியின் பக்கம் திரும்பி, "பெரிய போலீஸ் வர்றார். கம்முனு இருக்கணும்" என்றார். அவர் வரவைக் கண்டு அலுவலகம் பரபரப்பானது. அவர் காட்டிய திசையைப் பார்த்த அப்புமணி, "ஐயோ ... கருமம் ... இவரா பெரிய போலீஸ்.. இவர் சின்ன போலீஸ். ஐந்நூத்து ஒண்ணுதான் பெரிய போலீஸ். அவருக்குதான் பெரிய தொப்பை" என்று சத்தமாகக் கூற, அதைக் கேட்டு அந்த ஹாலே அதிர்ந்து போனது. அப்புமணி சொன்னது ஆபிசரின் காதிலும் விழுந்தது. இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்ற நினைப்பில் குரல் வந்த திசையைக் கூர்ந்து பார்த்தார்.  
"ஹே... நீ  தத்துப்பித்துதானே ! இங்கே என்ன செய்றே?" என்று சந்தோஷக் குரலில் கேட்டார். 
"என் பேரைக் கூட உங்களுக்கு சரியா சொல்லத் தெரியலே. நான் அச்சுப்பிச்சு அப்புமணி " என்றான் அப்புமணி 
"ஆமாம் தத்துப்பித்து ... மறந்துட்டேன் ... நீ ... யாரோட ...?" என்று கேட்கும் போதே, "நான் பீச்சில் சுண்டல் தின்னுட்டு விளையாட்டிட்டு இருந்தேனா .. அப்போ இவங்க என்னைப்பிடிச்சிட்டு வந்துட்டாங்க"என்றான் அப்பு மணி. 
"ஏன்ய்யா.. சுண்டல் தின்றதும் பீச்சில் விளையாடறதும் அவ்வளவு பெரிய தப்பா?" என்று சிரித்துக்கொண்டே மற்ற இருவரையும் கேட்டார் ஆபீசர்.  
கான்ஸ்டபில்ஸ் ஏதோ சொல்ல வாயெடுக்க, "பையன் எனக்குத் தெரிஞ்ச பையன்தான். இங்கே இருக்கட்டும். குடிக்க ஏதாவது வாங்கிக் குடுங்க . பத்திரமா பார்த்துக்கோங்க . நான் மீட்டிங்கை முடிச்சிட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு அலுவலகத்துக்குள் விரைய, 'பிள்ளையார்னு பிடிக்கப் போய் அது குரங்கா போச்சே" என்று தலையில் அடித்துக் கொண்ட கான்ஸ்டபில், "என்ன அப்புமணி ஸார்! என்ன சாப்பிடறீங்க ? கூல் ட்ரிங் அல்லது ஹாட் .. எது வேணும் ?" என்று கேட்க, "அந்த பயம் .... அது.. அது ...எப்பவும் இருக்கட்டும் " என்று சொல்லி கலகலவென்று சிரித்தான் அப்புமணி . 
---------------------------------------------------- தொடரும் ------------------------------------------------

No comments:

Post a Comment