Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 17, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 150 )

                              நிரந்தரம் - மாற்றம் மட்டுமே !
"ஸாரிடீ. மம்மி வெளியில் போயிட்டாங்க. தெரிஞ்சவங்க வீட்டிலே ஏதோ டெத்னு சொல்லி காலையிலேயே கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க வர ஈவெனிங்க் இல்லாட்டா நைட் ஆயிடும். என்னை இட்லிக்கு மாவு அரைக்க சொல்லி ஆர்டர் போட்டுட்டு போயிருக்காங்க. அவங்க வர முன்னாடி அதை முடிக்கலேன்னா டென்ஷன் ஆயிடுவாங்க. எங்க ஏரியாவில் இப்போ பவர் கட். எப்போ கரெண்ட் வந்து எப்போ அரைச்சு முடிக்கிறது. எனக்கு அந்த டென்சனில் மத்த எதுவுமே முக்கியமா தோணலே.இந்த  தடவை என்னை விட்டுடுங்கடி.நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா  வந்து பிராக்டிஸில் ஜாயின் பண்ணுவேன். மேம் கிட்டேயும் சொல்லிடுடி " என்று கெஞ்சலான குரலில் மது சொல்வது ஹாலில் ஈஸி சேரில் சாய்ந்திருந்த ரங்கநாதன் காதில் விழுந்தது.   
போன் தொடர்பு கட் ஆனது தெரிந்து, "மதும்மா " என்று குரல் கொடுத்தார் .
"என்ன தாத்தா ?"
"இன்னிக்கு முக்கியமான ப்ரோக்ராம் ஏதாச்சும் இருக்குதா ?"
"ஒரு காம்பெடிஷனுக்கு ப்ராக்டிஸ் பண்ணனும்"
"நீ வேணும்னா போயிட்டு வாயேன் கண்ணு "
"பரவாயில்லே தாத்தா. இப்போ மாவு அரைக்கணும். அதுதான் என்னோட பிரச்சினை "
"கிரைண்டரில்தானே மாவு அரைக்கப் போறே. கல்லுரலில் ஆட்டப் போறதில்லையே "
"என்ன தாத்தா சொல்றீங்க."
"அரிசி பருப்பை கிரைண்டரில் போட்டு ஸ்விட்சை அழுத்தினா மெஷின் மாவாக்கிக் கொடுத்துடப் போறது.கிரைண்டரைக் கழுவி சுத்தம் பண்ணி அரிசி பருப்பை போடறதும், அறைச்சப்பறம் எடுத்துட்டு கிரைண்டரை கழுவறதும் மட்டுந்தான் உன்னோட வேலை. அதுக்கே இப்படி பீல் பண்றே ?"
"போர் பிடிச்ச வேலை தாத்தா "
இதைக் கேட்டு சத்தமாக சிரித்தார் ரங்கநாதன் 
"ஏன் தாத்தா சிரிக்கிறீங்க ?"
"மாற்றங்களை நினைச்சு சிரிச்சேன்."
"அட ... அதை எனக்கும் சொல்லுங்க "
"சொல்றேண்டி என்னோட கொள்ளுப் பேத்தி. உனக்கு சொல்லாமே வேறே யாருக்கு சொல்லப் போறேன். ..இப்போ எல்லா வீடுகளிலுமே அதிக பட்சம் நாலு பேர்தான் இருக்கிறாங்க. நான் சின்னப் பையனா இருக்கிறப்போ எங்க வீட்டில் இருபத்தொரு பேர் இருந்தோம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பத்துக் குழந்தைங்களுக்கு மேலே இருக்கிறது ரொம்ப சாதாரண விஷயம். தாத்தா பாட்டி மாமா அத்தை அவங்க குழந்தைங்கன்னு வீடு எப்பவும் "ஜே ஜே"னு  இருக்கும். அத்தனை உருப்படிக்கும் தினமும் மாவு ஆட்டியாகணும். ஒரு படி, ரெண்டு படினு போட்டு அரைப்பாங்க "
"அதென்ன தாத்தா "படி" ?"
"இப்போ கிலோ, லிட்டர்னு சொல்றதை அப்போ படி, மரக்கா, மாகாணினு அளவு கோலா சொல்வாங்க. கிட்டத் தட்ட ஒரு "படி"ங்கிறது ரெண்டு கிலோனு வச்சுக்கோ. அதை வீட்டிலுள்ள பொம்பளைங்க கல்லுரலில் அரைப்பாங்க. அந்த மாதிரி உரலையெல்லாம் நீ பார்த்திருக்கவே மாட்டே அவ்வளவு பெரிசா இருக்கும். காலை டிபனுக்கு தொட்டுக்க சட்னி அரைக்க கொறஞ்சது ரெண்டு தேங்காயாவது துருவி அம்மியில் சட்னி அரைப்பாங்க. தீபாவளிக்கு பலகாரம் செய்ய ஒரு வாரம் முன்னாடியே உரல் உலக்கையை சுத்தம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, மாவு இடிக்கிறது க்காக.."
"நல்ல வேளை  தாத்தா.. நான் அந்தக்  காலத்தில் பிறந்திருக்கலே "
"வேலையை முடிச்சிட்டு 'உடம்பெல்லாம் நோகுது'ன்னு  லேடீஸ் சொல்றப்போ  "சீக்கிரம் மிஷினை கண்டு பிடிச்சிடலாம்'னு என்னோட தாத்தா சொல்வார். 'அது என்ன மிஷின் தாத்தா'னு நாங்க கேட்போம். அதுக்கு அவர்  "இப்போ மாவு அரைக்கும்போது குழவி சுத்தி வருது. இனிமே குழவி இருந்த இடத்தில இருக்கும். உரல் சுத்தி வரும் 'னு ஜோக் அடிப்பார். அதைக் கேட்டு நாங்க சிரிப்போம். அப்போ அவர் சொன்னது ஏதோ தீர்க்க தரிசனமான வார்த்தை மாதிரிதான் தெரியுது. இப்போ கிரைண்டரில் உரல்தானே  சுத்தி வருது  "
"அட ஆமாம் .."
"அப்புறம் மிஷின் வந்தது. அரைக்கிற இடிக்கிற வேலை நின்னு போச்சேன்னு சந்தோசப் படலே.  வீட்டிலே மாங்கு மாங்குன்னு மாவு இடிச்சவங்க, அரைக்க வேண்டிய பொருளை எடுத்துட்டு மாவுமில் வரை போய் வர்றதை  பெரிய பாரமா நினைச்சு வருத்தப் பட்டாங்க .. இப்போ வெளியிடத்துக்குப் போகாமே வீட்டிலேயே எல்லாத்தையும் இடிக்கலாம் பொடிக்கலாம்னு ஆகிப் போச்சு .  ஆனா ஒரு ஸ்விட்சை தட்டி விடறதை பெரிய வேலையா நினைச்சு நீ பீல் பண்றதை நினைச்சு  சிரிச்சேன். ஒரு பழைய தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு வரும். என்.எஸ்.கிருஷ்ணன் பாடுவார்  "ஒரு பட்டனை தட்டி விட்டால் ஒரு தட்டிலே இட்லியும் சட்னியும் நம்ம பக்கத்தில் வந்து நின்னுடணும்"னு. அப்படி ஒரு காலம் வரும்போது அதை பார்க்க நான் இருக்க மாட்டேன்னு நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்குது  "
"த்சொ த்சொ " என்று உச்சு கொட்டிய மதுமதி "வேணும்னா இனிமே தினமும் உங்க முன்னாடி இட்லி சட்னியை நான் தட்டில் வச்சு நீட்டறேன் தாத்தா" என்று சொல்ல  "இல்லேடா கண்ணு .. தட்டில் எடுத்துப் போட்டு சாப்பிடறதை பெரிய வேலையா நினைக்கும் ஒரு தலைமுறையினருக்கு அந்த சங்கடம்கூட  இல்லாதபடி யாரோ ஒருத்தன் எதையோ கண்டு பிடிச்சிட்டானு வச்சுக்கோ, அப்படி ஒரு நிலைமை வரும்போது அன்றைய தினத்தில் இருக்கும் தலைமுறை  வேறு எதை எதிர்பார்த்து ஏங்கும்கிறதை இப்போ தெரிஞ்சுக்க வாய்ப்பில்லையே அதை நினைச்சு வருத்தப் படறேன்" என்று சொல்லி சிரிக்க , அந்த சிரிப்பில் மதுவும் கலந்து கொண்டாள்.
"எஸ் தாத்தா ... பொதுவா எல்லோரும் உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லேன்னு தத்துவம் பேசுவாங்க . உலகத்தில் என்றென்றும் மாறாத ஒரு விஷயம் மாற்றம் மட்டுமே. அதை நாம மனசார ஏத்துக்குவோமே " என்று மதுமதி சொல்ல  , "ஏத்துக்கத்தான் வேணும் ... வேறே வழி ?" என்று கேட்டு பெரிதான குரலில் சிரித்தார் ரங்கநாதன்.  

No comments:

Post a Comment