Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 26, 2015

Scanning of inner - heart (Scan Report Number - 149)

                                        மங்களம் சுப மங்களம் !
"என்ன ரமேஷ், முடிஞ்சுதா ?" என்று விக்ரம் கேட்க , "இதோடா ... பைனல் ஸ்டேஜ்  ..  விக்ரம் அங்கே எப்படி ?" என்றான் ரமேஷ் .
"பினிஷ்டு .. விவரம் நேரில் சொல்றேன். ரூம்க்கு வந்திடறியா ?" 
"வேண்டாம் பனகல் பார்க் வந்துடேன் " 
"என்னடா இது ! முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க ரூம் போட்டு யோசிக்கிறதா சொல்வாங்க .. நாம இருக்கிறதே ரூமில்தான் ... நீ என்னடான்னா பார்க் பக்கம் வர சொல்றே !" 
"சும்மா ஒரு ரிலாக்ஸ்செஷனுக்கு தான் "
"இன்னும் ஆப் அன் ஹவரில் அங்கே இருப்பேன். நீ முன்னாடி வந்துட்டா வெயிட் பண்ணு. பழைய ப்ரெண்ட் ஒருத்தன் கண்ணில் பட்டான். அவன் பின்னால் போனேன்னு  கதை சொல்லாதே. அப்புறம் நான் கடுப்பாயிடு வேன்"
அடுத்த அரைமணி நேரத்தில் பார்க்கில் மீட் பண்ணினார்கள் இருவரும்.
"இந்த பீல்ட்க்கு நாம ரெண்டு பேருமே புதுசு. அப்ரெண்டிஸ். இது நாம முதல் முதலா சப்மிட் பண்ணப் போற ஆர்ட்டிகிள். எது எதை எப்படி மெர்ஜ் பண்ணலாம்.என்ன கன்க்ளூசன் குடுக்கலாம்னு டிசைட் பண்ணிடு வோம் "   
"ஓகே "
"மறக்க முடியாத அனுபவம் " 
"எனக்கும்தான் "
"என்னடா சொல்றே ?"
"முதலில் நீ சொல்லி முடி "
"நம்ம எடிட்டர் "கனவு வீடு"ங்கிற தலைப்பில் கட்டுரை ரெடி பண்ண சொல்லிட்டார். அது ரொம்பவும் வித்தியாசமா லோயர் மிடில் கிளாஸ் அண்ட் அப்பர் ஹை கிளாஸ் பீப்பிளை லிங்க் பண்ணி இருக்கணும்னு வேறு சொல்லிட்டார். இவ்வளவு நாளும் நான் லோயர் மிடில் கிளாஸ் பீப்பிள்னு சொன்னா கஷ்டத்திலும் சோகத்திலும், நாளைக்கு என்ன செய்யலாங்கிற கவலையிலும் இருப்பாங்கனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் அங்கே சந்தோசத்துக்கு பஞ்சமில்லே. நான் போனப்போ அந்த வீட்டில் யாருமில்லே. என்னடா இது. நாம வர போறதை  ஆல் ரெடி இன்பார்ம் பண்ணியும்  வீட்டில் யாரும் இல்லையேன்னு நினைச்சேன். பக்கத்து வீட்டிலிருந்து ஒருத்தர் ஓடி வந்தார்.'தம்பி நீங்கதான் ராகவன் சொன்ன பத்திரிக்கைக்கார தம்பியா. எதிர்பாராத ஒரு அவசர வேலை. வர கொஞ்சம் லேட் ஆகும். வர்ற தம்பியை வீட்டில் உட்கார சொல்லி காப்பி இல்லே கூல் ட்ரிங்க்  குடுத்து கவனிச்சுக்கோங்கனு ராகவன் போன் பண்ணினார்'னு சொல்லிட்டு  எனக்கு  என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டு ஒரே ராஜ உபசாரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். கொஞ்ச நேரத்திலேயே ராகவன், அவர் வொய்ப் குழந்தைங்க எல்லாரும் வந்துட்டாங்க. அந்த வீட்டுக் குழந்தைங்க கூட நம்ம கூட ரொம்ப நாள் பழகினவங்க மாதிரி அவ்வளவு பிரியமா மரியாதையா பேசினாங்க.. கடமை உணர்வோடு நான் பேட்டியை ஆரம்பிச்சேன். 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டில் இருக்கிற நீங்கள் மாடி வீட்டுக்காரங்களைப் பார்த்து என்றாவது ஏக்கப் பெருமூச்சு விட்டதுண்டா ? அதுக்காக நீங்க செய்த முயற்சி என்ன'னு  கேட்டதுதான் தாமதம், உடனே 'இங்கே உள்ள அன்னியோன்யம் அங்கே கொஞ்சமும் இருக்காது. வீடு பெரிதாக விரிய விரிய  மனிதர்கள் தனித்தனி அறைகளில் தஞ்சமாயிடுவாங்க. வீட்டில் உள்ள மனுஷன்களைக் கூட யாரோ ஒரு மூணாவது மனுஷனைப் பார்க்கிற மாதிரி பார்ப்பாங்க. இன்னும் சொல்லப் போனால் ஒரு குடும்பத்தில் உள்ளவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்ப்பதே அபூர்வமான விஷயமாகிடும்.எங்களுக்கும் நிறைய கனவுகள் ஆசைகள் உண்டு. மேலே மேலே பறக்கிற முயற்சியும் உண்டு. ஏதோ ஒரு வழியில் நாளைக்கே நாங்க கோடீஸ்வரங்க ஆனாக்கூட எங்க வீட்டு அளவு இதே லெவெலில் தான் இருக்கும்.  அதை விரிய விடமாட்டோம். நாங்க பிரிய மாட்டோம்னு அவ்வளவு உறுதியா சொல்றாங்க. பணம் என்ன தம்பி பணம் .. வாழ்க்கைக்கு பணம் தேவைதான் ... ஆனா பணம் மட்டுமே வாழ்க்கை ஆயிடாது. எந்தவொரு சந்தோசத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துக்க பக்கத்திலே மனுஷங்க யாருமில்லாமே பணம் மட்டும் இருந்து என்ன தம்பி பிரயோசனம்னு கேட்கிறாங்க. வித்தியாசமான மனிதர்கள்  .. ஆமாம். உன்னோட எக்ஸ்பீரியன்ஸ் எப்படி. ரொம்ப ஹை கிளாஸ் பேமிலி .. உபசரிப்பு எப்படி ? "  என்று கண் சிமிட்டி கிண்டலான குரலில் கேட்டான் விக்ரம்.
"வீடா அது ? சுடுகாடு ... வீட்டில் மனுஷங்க இருக்கிறாங்களா இல்லையா .. அதுவே டௌட்டில் இருந்துச்சு ..சிம்பிளா சொல்லணும்னா உன்னோட அனுபவத்துக்கு நேர் எதிரா இருந்துச்சு நான் போன இடம். ஆனால் பணம் சம்பாதிக்கணும் .. மேலே மேலே பறக்கணுங்கிற  வெறி மட்டும் இருக்குது " 
"சரி இப்போ இரண்டு பேர் ஆர்டிகிளையும்  மெர்ஜ் பண்ணி மெசெஜ் குடுக்கணுமே .. என்ன குடுக்கலாம் ?" 
"லோயர் கிளாஸ் பீபிள் கிட்டே பணம் இல்லே. ஆனால் சந்தோசம் இருக்குது. ஹை கிளாசில் பணத்தை தவிர வேறு எதுவுமே இல்லைன்னு  சொல்லிடலாமா ?" 
"ஊஹூம்.. அப்படியும் சொல்ல முடியாது. பணமும் இல்லாமே சந்தோசமும் இல்லாமே ஏன் பிறந்தோம்ங்கிற நிலைமையிலே எத்தனை பேர் இருக்காங்க. பணம் உறவுகள் கொண்டாட்டங்கள்ங்கிற நிலைமை யில் எத்தனையோ பேர் இருக்காங்க .. நாம மெர்ஜ் பண்ற விஷயம் எடிட்டர் சொன்ன டைட்டிலுக்கு சம்பந்தம் இல்லாமே இருக்கே. வேறே மாதிரி திங்க் பண்ணிப் பார்க்கலாம் " என்றபடி புல்வெளியில் மல்லாக்கப் படுத்தான் 
சிறிது நேரம் பொறுமை காத்த விக்ரம், " ஏய் .. என்னடா தூங்கிட்டியா ?" என்று ரமேஷைத் தொட்டு உலுக்கினான் .
"சிந்திக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதே. ஒரு ப்ரேக் விழுந்தா என்ன திங்க் பண்ணுறோம்ங்கிறதே மறந்துடுது "
"சரி ... சரி .... சீக்கிரம் ஒரு முடிவுக்கு வா " என்று சொல்லிவிட்டு புல்வெளியில் தலை சாய்த்தான் ரமேஷ்.
பொழுது மௌனத்தில் கரைந்து கொண்டு இருந்தது .
"ஸார் .. ஸார் " என்ற குரல் கேட்டு இருவரும் எழுந்து உட்கார்ந்தார்கள் 
"என்னப்பா .. என்ன வேணும் ?"
"எனக்கு எதுவும் வேண்டாம் .. அதோ வெளியில் ஒரு கார் நிற்குதே .. அந்த காரில் உட்கார்ந்திருக்கிற ஸார் உங்களை கூப்பிட சொன்னார் " என்று வெளியில் கைகாட்டினான் இவர்களை அழைத்த சிறுவன் .
"காராவது சாராவது "என்றபடி மெயின் ரோட்டைப் பார்த்த விக்ரம், "ஏய் . நம்ம எடிட்டர் ஸார்டா "என்று சொல்ல, இருவரும் காரை நோக்கி ஓடினார்கள்.
"நான் உங்களை என்ன செய்ய சொன்னேன்.. நீங்க என்ன செய்றீங்க ?" என்று கடுப்பான குரலில் கேட்டார் எடிட்டர். 
"நீங்க சொன்ன வேலையை ரெண்டு பேருமே முடிச்சிட்டோம் "
"முடிச்சாச்சுன்னா ஆபீஸ்க்கு வரணும். அதை விட்டுட்டு பார்க்கில் ஹாயா படுத்துத்  தூங்கி கிட்டு இருக்கீங்க. வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே இப்படி பொறுப்பில்லாமே இருந்தால் உங்களை நம்பி எந்த வேலையைக் குடுக்க முடியும்? ரிப்போர்டர் வேலை உங்களுக்கு சரிப்பட்டு வராது. எங்காவது வாட்ச் மேன் வேலை கிடைக்குமான்னு பாருங்க.. நின்னுகிட்டே தூங்கலாம். உட்கார்ந்து கிட்டு தூங்கலாம். இனிமே ஆபீஸ் பக்கமே வந்துடாதீங்க"என்று சொல்லிவிட்டு கோபமாக காரைக் கிளப்ப, திகைத்துப் போய் நின்றார்கள் இருவரும்.   
      

No comments:

Post a Comment