குல்லா வியாபாரியும் குரங்குகளும் !
குல்லா வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தானாம்
குல்லாக்களை விற்றிடவே நடந்து சென்றானாம்
நடந்து சென்றதால் களைப்பு மீறிட
மரத்தின் நிழலடியில் தங்கினான்
குல்லாக்கள் மூட்டையை பக்கத்தில் வைத்துமே
குல்லாக்கள் மூட்டையை பக்கத்தில் வைத்துமே
கண்களை மூடி உறங்க சென்றானாம்
லாலலல்லலா லாலலல்லலா
மரத்தின் மீதுள்ள குரங்குக் கூட்டமே குதித்து கீழே இறங்கின
மூட்டையை அவிழ்த்தன குல்லாக்களை எடுத்தன
எடுத்துத் தலையில் அணிந்து கொண்டு ஆடிப் பாடின
லாலலல்லலா லாலலல்லலா
வியாபாரி எழுந்தான் மூட்டையைப் பார்த்தான்
குல்லாக்களைக் காணாமல் தேடினான்
குரங்குகள் தலையிலே குல்லாக்களைக் கண்டான்
குரங்குகள் தலையிலே குல்லாக்களைக் கண்டான்
குல்லாக்களை வாங்கிட ஓர் தந்திரம் செய்தான்
லாலலல்லலா லாலலல்லலா
தனது குல்லாவை தரையில் வீசினான்
குரங்குகளும் அவ்விதமே வீசின
ஓடோடி சென்று அவன் குல்லாக்களை எடுத்திட்டான்
உல்லாசமாய் ஓடோடி ஊர் வழி நடந்தான்
No comments:
Post a Comment