யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!
DEAR VIEWERS,
சிலவருடங்களுக்கு முன்பு நெருங்கிய தோழியுடன் பேசிக் கொண்டிருந்த போது குழந்தைகள் பற்றிய செய்தியும் எங்கள் பேச்சில் இடம் பிடித்தது. அப்போது எனது தோழி "முன்னெல்லாம் ஸ்கூலில் நல்ல பாட்டுக்களாக சொல்லித் தருவாங்க. வீட்டுக்கு வந்து நாம அதைப் பாடிண்டே இருப்போம். நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்தாலோ இல்லாட்டி நாம யார் வீட்டுக்காவது போனாலோ அங்குள்ள குழந்தைகளை பாட சொல்வோம் . அதைக் கேட்டு ரசிப்போம். இப்போ எந்தக் குழந்தையையும் பாட சொல்லவே பயமா இருக்குது. டபிள் மீனிங் உள்ள சினிமா பாட்டை அதன் அர்த்தம் தெரியாமலே பாடறாங்க. பாட சொல்லி கேட்கிறவங் களுக்கு தர்ம சங்கடமாயிடுது" என்று சொன்னார்.
அந்த தினத்திலிருந்தே எனக்குள் ஒரு எண்ணம். சிறு வயதில் நாம் படித்த பாடல்களை, கதைப் பாடல்களை இந்த தலைமுறைக்கும் சொல்லித் தர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதை எப்படி செய்வது என்பது தெரியா மலிருந்தேன். இதை பேச்சுவாக்கில் எங்கள் வீட்டுப் பையனிடம் சொன்ன போது, "உனக்கு தெரிஞ்ச பாட்டை மொபைலில் ரெக்கார்ட் பண்ணு. YOU TUBE ல் PUBLISH பண்ணு " என்றான். இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற முடிவுடன் 4 பாடல்களை பதிவு செய்து ஒரே ஒரு பாடலை YOU TUBE ல் PUBLISH பண்ணி இருக்கிறேன். குழந்தைகளுக்கான rhymes CD நிறைய வெளி வருகிறது. ஆர்வமுள்ளவர் கள் இந்தப் பாடல்களை rhymes CD போல வெளியிட முயற்சி செய்யலாமே. திரும்பவும் ஒரு முறை சொல்கிறேன். இந்தப் பாடல்கள் நான் பள்ளி சிறுமியாக இருந்தபோது பாடி மகிழ்ந்தவை . இந்தப் பாடல்களை எழுதியது, இசையமைத்தது யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. கர்ண பரம்பரைக் கதைகள் என்பார்களே அதுபோல இதையும் கர்ண பரம்பரை பாடல்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். சில சீரியலில் குழந்தை நட்சத்திரங்கள் வருகிறார்கள். நன்கு பாடத் தெரிந்தவர்களைக் கொண்டு பாட வைத்து குழந்தைகள் பாடுவது போல சீரியலில் நுழைத்தால் அது சற்று வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்பது எனது எண்ணம். விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்யலாமே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !! ஒரு சிறிய குருவி நல்ல சந்தோஷத்துடன்
ஒரு சிறிய முட்செடியில் வசித்து வந்தது
ஒருநாள் அதன் சிறகு ஒன்று ஒடிந்து போகவே
சிறிய குருவி முட்செடியில் வசிக்க முடியலே
சிறகொடிந்த குருவி நான் க்யா க்யா க்யா
சிறகொடிந்த குருவி நான் க்யா க்யா க்யா
பனைமரமே பனைமரமே சிறிய குருவி நான்
மழைகாலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா
சிறகொடிந்த குருவி உனக்கு இடம் தரமாட்டேன்
சிறகொடிந்த குருவி உனக்கு இடம் தரமாட்டேன்
தென்னை மரமே தென்னை மரமே சிறிய குருவி நான்
மழைகாலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா
சிறகொடிந்த குருவி உனக்கு இடம் தரமாட்டேன்
சிறகொடிந்த குருவி உனக்கு இடம் தரமாட்டேன்
மா மரமே மா மரமே சிறிய குருவி நான்
மழைகாலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா
சிறகொடிந்த குருவி உனக்கு இடம் தரமாட்டேன்
சிறகொடிந்த குருவி உனக்கு இடம் தரமாட்டேன்
ஆல மரமே ஆல மரமே சிறிய குருவி நான்
மழைகாலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா
நான் தருவேன் நான் தருவேன் சிறிய குருவியே
சீக்கிரமாய் கூடு கட்டி சுகமாய் வாழ்வாயே !
சிறிய குருவி கூடு கட்டி வாழ்ந்திருக்கையில்
பெரிய மழையும் இடியும் காற்றும் சேர்ந்து வந்தது
பனைமரத்தில் இடி விழுந்து பட்டுப் போயிற்று
தென்னை மரம் இரண்டாக ஒடிந்து விழுந்தது
மாமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது
ஆலமரம் செழிப்பாக வளர்ந்து நின்றது
கஷ்டப்படுவோர்க்குதவி செய்தால் கடவுள் காப்பாரே
இந்தக் கருத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
பின் குறிப்பு : உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். அதன்பிறகே மற்ற கதைப் பாடல்கள் பதிவு செய்யப் படும்
No comments:
Post a Comment