சட்டம் போட்டுத் திருத்தணும் !!
வெறுப்பின் உச்சத்தில் இருந்தார் ராமாமிர்தம். ச்சே ... என்ன உலகம் ... என்ன மனிதர்கள். யாருக்கும் துளிக்கூட பொறுப்பில்லை. உலகத்தில் ... நாட்டில் ... ஊரில் .. எந்த மூலையில் எது நடந்தாலும் அதை வேடிக்கை பார்க்கிற விவஸ்தை கெட்ட மனிதர்கள் ... எல்லாமே வேடிக்கைதான் .. எதுவுமே நமக்கு நடக்காதவரை என்ற எண்ணத்தில் உறுதியாக நிற்கிறவங்க..வீட்டிலும் வெளியிலும் யாருக்கும் பொறுப்புமில்லை பாதுகாப்புமில்லை. எது நடந்தாலும் அது செய்தி என்கிற அளவுக்கு மட்டுமே அக்கறை காட்டும் " திருவாளர் பொதுஜனங்கள் ". இவர்களுக் கெல்லாம் என்றைக்குதான் பொறுப்பு வரப் போகிறதோ தெரியவில்லை.
செல் போன் சிணுங்கியது. "ஹலோ யாரு ?" என்றார் வெறுப்புடன்.
"ஏம்ப்பா, உன்னோட போன் புக்கில் என்னோட பேர் இல்லியா என்ன ! என்னோட ரிங் வந்ததுமே உன்னோட போனில் என்னோட பேர் டிஸ்ப்ளே ஆகியிருக்குமே "
" ஓ குமரேசனா ! ஸாரிப்பா "
"ரொம்பவும் மூட் அவுட் ஆகி இருக்கிறாப்லே தெரியுது !"
"என் முகம் உன் செல்லில் தெரியுதா என்ன ?"
"இந்தக் கேள்வி நீ மூட் அவுட் என்கிறதை ப்ரூப் பண்ணுது. என்ன ராமா, என்ன ப்ராப்ளெம் ஹெல்த் கண்டிஷன் நார்மலா இல்லையா ?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கலாம்னு டீவீ முன்னாலே உட்கார்ந்தாலும் சரி, நியூஸ் பேப்பரைக் கையில் எடுத்தாலும் சரி, பீபி எகிறிடும் போலிருக்கு "
"அப்படின்னா ரெண்டையும் விட்டுட்டு வேறே வேலையைப் பாரு "
"நம்மளைப் போல ரிடயர் ஆன கேசுகளுக்கு அது ரெண்டும்தானே புகலிடம். அதுவும் இல்லாட்டா பைத்தியம் பிடிச்சுடும் "
"கோயில் குளம்னு போயிட்டு வா "
"அதெல்லாம் என்ன இருபத்து நாலு மணி நேரமும் திறந்தா இருக்குது ?"
"அதுதான் உன் பிரச்சினையா ?"
"அட நீ ஒண்ணுப்பா ! ரொம்ப நாளைக்கப்புறம் நீ எனக்குக் கால் பண்றே . என்ன விஷயம்ப்பா ?"
"அதான் சொல்றியே.. நான் கால் பண்ணி ரொம்ப நாளாச்சுன்னு. அதுக்குத் தான் போன் பண்ணினேன். நீ ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறே ?"
"நாட்டில் யாருக்கும் பொறுப்புங்கிறதே துளிக் கூட இல்லை. நாம ஒரு கணக்குப் போட்டு வெளியில் போயிட்டு வரலாம்னு பார்த்தா, கணக்குப் போட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் போய்வர முடியலே. எங்கே எப்போ சாலை மறியல் நடக்கும்னு தெரியலே.ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கிற ஒரு சிலரோட பிரச்சினைக்கு ரோட்டில் போகிற வருகிற அத்தனை பேரும் தண்டனை அனுபவிச்சே ஆகணும்கிறது எழுதப் படாத சட்டமா ஆகிப் போச்சு. தங்களுக்கு நியாயப்படி நடக்க வேண்டியது நடக்கலேன்னு தானே அவங்க கொதிச்சு எழும்புறாங்க! அந்த நிலைக்கு யார் காரணம்?யார் பொறுப்பு? பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற ஜென்மங் களை நிக்க வச்சு சுடணும். இந்த ஜனங்களுக்கும் என்னிக்குத் தான் புத்தி வரப் போகுதோ தெரியலே. தேர்தல் சமயத்தில் கட்சிகள் அறிவித்த இலவசப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கலைன்னு சொல்லி சாலை மறியல் செய்கிற இந்த ஜனங்க எல்லாருக்கும் சாப்பிட சோறு, குடிக்க தண்ணீ, சுத்தமான சுகாதாரமான சூழ்நிலை வேணும்னு என்றைக் குத்தான் நினைச்சுப் பார்க்கப் போறாங்களோ தெரியலை.அதிக பட்சம் ஆறு மாசமே உபயோகப்படக் கூடிய ஒரு பொருள் கிடைக்கலைன்னு வருந்தறவங்க, விவசாயத்துக்குத் தண்ணீ இல்லேன்னு விவசாயிங்க அலறித் துடிக்கிறப்பல்லாம் அது, அவங்க சொந்தப் பிரச்சனைங்கிற மாதிரி நினைச்சு டீவீயிலே வேடிக்கை பார்க்கிறாங்களே தவிர அவங்க ளோட தவிப்பைப் புரிஞ்சுக்கிட மாட்டேங்கிறாங்களே. இப்பவே அரிசி இந்த விலை விக்குது. மழை தண்ணீ இல்லாமே வானம் பொய்ச்சுப் போயி விவசாயம் பண்ண முடியாமே போனா விளைநிலத்தை அடிமாட்டு விலைக்கு வித்துட்டுப் பட்டணத்தைப் பார்க்கப் போயிடுதான் விவசாயி. கிடைச்சவரை லாபம்னு அந்த நிலத்தை வாங்கினவன் பிளாட் போட்டு வித்துடுதான். எனக்கு ஒரே ஒரு எலும்புத் துண்டைத்தூக்கி வீசிட்டு நீ என்ன 'கோல்மால்' வேணும்னாலும் பண்ணுனு சொல்லிட்டு கையைக் கட்டிக்கிட்டு ஒதுங்கி நிக்கிறானுக தட்டிக் கேட்க வேண்டியவனுக. ஒரு சிலரோட பேராசைலே சுத்தி இருக்கிறவங்களுக்கு எவ்வளவு நஷ்டம் ? என்னென்ன கஷ்டம்! அதை யாராவது நினைச்சுப் பார்க்கிறாங்களா? இல்லையே !" என்று கோபமாகக் கேட்டார் ராமாமிர்தம்.
"வாஸ்தவம்தான் " என்றார் குமரேசன்.

"ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் போதும், உடனே ஒரு நிவாரணம். எவனோ ஒரு தனிப்பட்ட மனுஷன் பண்ணுகிற தப்புக்கு மக்களோட வரிப் பணத்திலிருந்து நிவாரணம் ! கடவுளே .. இது எங்கே போய் முடியுமோ தெரியலையே. உலகம் போகிற போக்கைப்பார்த்தால் வருங்கால சந்ததிக்கு 'இதுதான் அரிசி'னு அரிசியை, அருங் காட்சியகத்தில் வைத்துதான் காட்டணும் போலிருக்கு. இந்த விஷயத்தில் வசதியான வங்க கூட ' எது நடந்தால் எனக்கு என்ன'னு இருக்க முடியாதே ! கஷ்டப் பட்டுதானே ஆகணும். ஐயா .. கையில் பணம் இருந்து என்ன புண்ணியம், கடையில் அரிசி இல்லேங்கிறப்போ ? இதை யாரும் நினைக்கிற தில்லையே! அதை நினைச்சா கவலையா இருக்குப்பா !"
"உன் கவலை நியாயமானதுதான்"
"உன் கவலை நியாயமானதுதான்"
"உலகத்தில் நடக்கிற எல்லா தப்புக்குமே வறுமைதான் காரணம்னு சொல்றாங்க. தண்ணீ இல்லே ... விவசாயம் இல்லே ... அரிசி இல்லே .. உணவு இல்லே .. பட்டினிங்கிற நிலை வர்றப்போ அவனவன் அடாவடித் தனம் பண்ணி வயித்தை நிரப்பப் பார்ப்பானே தவிர தர்ம நியாயத்தைப் பத்தி யோசிக்கவா போறான் ? நல்லா இருக்கிற ஒருத்தனை நாச வேலை பார்க்கிற குழியில் தள்ளிட்டு பிறகு நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு மேடை போட்டு முழங்கி என்ன பிரயோசனம்?" என்று கோபக் குரலில் ராமாமிர்தம் கேட்க, "யோசிக்க வேண்டிய விஷயந்தான் !" என்றார் குமரேசன்
"மழை வெள்ளத்தாலே ஒரு பகுதி அழியுது .. மழையில்லாமே இன்னொரு பகுதி அழியுது. ரெண்டையும் சேர்த்து விட்டுட்டா அதுக்குப் பிறகு ரெண்டு பக்கமும் பாதிப்பு இருக்காதே. கிடைக்கிற மழைத் தண்ணீயை சேர்த்து வைக்கத் துப்பில்லாமே கடலில் கொண்டு போய் சேர்த்திடறோம். இந்த நிலை எப்போ மாறும் ? இதிலே எதைப் பத்தியும் கவலைப் படாமே எப்பப் பார்த்தாலும் வலையில் மேயவே இப்போ உள்ள பசங்களுக்கு நேரம் காண மாட்டேங்குதே.. இவங்களுக்கு பொறுப்பு எப்போ வரும் ? வலை ... வலை.. வலியப் போய் இந்த வலையில் மாட்டிகிட்டு சிக்கி சீரழிகிறது களே .. இதுகளைத் தடுக்கணும்கிற நினைப்பு கூட யாருக்கும் வரலியா ! இல்லாட்டா, என்ன சொன்னாலும் இதுக கேட்காதுகனு எல்லாரும் கையைக் கழுவிட்டாங்களா ? பேஸ் புக்கில் எதை எதைத்தான் பதிவு பண்ணுவதுங்கிற விவஸ்தையே இல்லாமே அந்தரங்க விஷயங்களைக் கூட அரங்கேற்றுதுகளே, இது, அவங்களோட அறியாமையா இல்லே அகங்காரமா ? கடவுளே .. எந்தத் துறையில் போனாலும் ஊழல் .. எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே ஒரு அடாவடிக் கும்பல்.. இந்த உலகம் எங்கே போகுது ? இந்த பூமி எந்த அழிவை எதிர்பார்த்து சுத்துது. இது எல்லாத்தையும் மாத்தி அமைக்க இன்னொரு இயேசு புத்தன் அல்லா கிருஷ்ணா எல்லாரும் வந்துதான் ஆகணுமா ? " என்று கவலை தேய்ந்த குரலில் ராமாமிர்தம் கேட்க, மறுமுனையில் சிந்தனையில் ஆழ்ந்திருந் தார் குமரேசன்.
"நாட்டில், உலகத்தில் நடக்கிற எல்லா விஷயமுமே "கீரை விதைச்ச கதை" மாதிரி தானே இருக்குது "
"அது என்னப்பா கீரை விதைச்ச கதை ?"
" ஒரு நிலத்தை செப்பனிட்டு சீர் செஞ்சு தண்ணீ ஊத்தி கீரை விதை விதைக்கலாம்னு ஒருத்தர் இன்னொருத்தரைக் கூப்பிடறப்போ, நிலத்தை சீர் பண்ண , தண்ணீ ஊத்த, கீரை விதைக்க, நிலத்தில் பாடு பட யாரும் தயாரா இல்லே. யாருக்கும் அக்கறையும் இல்லே . ஆனா யாரோ ஒருத்தன் முயற்சியில் கீரை, பயிராகி , அதைக் கறி சமைச்சா கீரை சாப்பிட எல்லோரும் ரெடி! எல்லாருக்கும் பல்லக்கில் ஏறி பயணம் பண்ணுகிற வெறி இருக்குது. பல்லக்கைத் தூக்கிச் செல்ல யாரும் தயாரில்லை. இந்த மனநிலை எப்போ மாறும். வலுத்தவன் கையில் வையம் என்கிற நிலை வரும் முன்னாலே .... வரும் முன்னாலே என்ன? இப்பவே பாதி வந்தாச்சு. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்னு நிலைமை முழுசும் மாறுறதுக்கு முன்னாலே எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்குது. உரிமை கேட்கிற எல்லாருக்கும் எல்லாப் பொறுப்பும் இருக்குதுங்கிறதை யார் புரிய வைக்கிறது .. கடவுளே ... நீ படைச்ச பூமி உன் கையை விட்டுப் போய் வெகுகாலம் ஆச்சுனு நினைச்சுதான் நீ எதையும் கண்டுக்காமே கண் மூடி இருக்கிறியான்னு கேட்டு புலம்பத் தானே நம்மாலே முடியுது "
"விடுப்பா. உன்னோட பொறுப்புணர்ச்சியை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குது .. அப்புறமா நேரில் மீட் பண்றேன் " என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தார் குமரேசன்.

"என்னங்க ... யார்கிட்டே இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தீங்க . என்ன யோசனையில் இருக்கீங்க ? நம்ம குழாயில் தண்ணீர் சரியா வரலே.. சொட்டு சொட்டா ஒழுகுதுன்னு நேத்தே சொன்னேனே. எனக்கு என்ன சந்தேகம்னா நாம ஏத்துற தண்ணீர் இன்னும் மேல் தொட்டிக்கு போய்ச் சேர்ந்திருக்காதோனுதான்" என்று சொல்லி ராமாமிர்தத்தின் சிந்தனை யைக் கலைத்தாள் அவர் மனைவி யோகவல்லி.
"அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரிச்சியா ? அவங்க வீட்டில் எப்படி வருதாம் ?"
"எல்லா வீட்டிலும் அதே கதைதான் .. அது தெரிஞ்ச பிறகுதான் அடைப்பு பொதுக் குழாயில் இருக்கலாம்னு எனக்கு டௌட் வந்துது "
"உன் டௌட்டை யாரிட்டயும் சொல்லலே தானே ?"
"சொல்லலே ..ஏன் கேட்கறீங்க ?"
"மத்தவங்க மாதிரி நீயும் கம்முனு இரு.. பன்னிரண்டு வீடு இருக்கிற இடத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை நமக்கு மட்டும் எதுக்கு ?"
"அப்படின்னா இப்போ தண்ணிக்கு என்ன செய்றது ?"
"உங்க அண்ணன் வீட்டுக்குப் போகணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தியே .. வா நாம அங்கே போயிட்டு நாளைக்கு சாயங்காலம் இங்கே திரும்பிடலாம்.. அதுக்குள்ளே பிளாட்டில் இருக்கிற யாருக்கு தண்ணீ ரொம்ப அவசரமோ அவசியமோ அவங்க யாராவது இதை சரி பண்ணட்டும் "
"என்னங்க இது ! ரிப்பேரை சரிபண்ணிட்டு செலவை எல்லாரும் பகிர்ந்துக்கப் போறோம். இதுக்குப்போய் எதுக்கு தலைமறைவா ஊரை விட்டு ஓடற மாதிரி ஓடணும் ?"
"அடி அசடே .. பன்னிரண்டு வீட்டில் ஒன்றிரண்டு வீட்டில்தான் பகல் நேரத்துலே வீட்டில் ஆட்கள் இருக்கிறோம். மத்த எல்லாரும் காலையில் போனா ராத்திரியிலும் நடுசாமத்திலும் வர்ற ஆளுங்க. அவங்க வர்ற வரை ரிபேர் பண்ணினவன் காத்துகிட்டு நிற்பானா? நம்ம கைக்காசை அவன் கிட்டே கொடுத்துட்டு ஒவ்வொருத்தர் வீட்டுக் கதவையும் தட்டி மொத்தம் இவ்வளவு ஆச்சு .. நீங்க இவ்வளவு தரணும்னு சொல்லணும். ஒண்ணுரெண்டு வீட்டிலே உடனே அவங்க ஷேரை கொடுப்பாங்க. மத்தவங்க நாம சொல்றதைக் கேட்டுட்டு தலையை மட்டும் அசைச்சிட்டுப் போயிடுவாங்க. அவனுக்கா எப்போ நினைவு வருதோ அப்போ கொண்டு வந்து கொடுப்பான் .. நமக்கு எதுக்கு இந்த வேண்டாத தலை வலியெல்லாம். ரெண்டு குடம் தண்ணியை ஸ்டாக்கில் வச்சிட்டு கதவை இழுத்து மூடிட்டு கிளம்பு" என்று அவசரப்படுத்தினார் ராமா மிர்தம்
No comments:
Post a Comment