Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, August 24, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 83 )

                                                 விதை 

"மேம், அடுத்த வார மீட்டிங்கில் சப்மிட் பண்ண ஒரு அஜந்தா தயார் பண்ண சொல்லி " பாஸ் " சொல்லியிருந்தார். அது கம்ப்ளீட் ஆகலே. ஆபீஸ் அவர்ஸ் முடியற நேரமாச்சு. நாளைக்கு வந்து முடிச்சுத்   தர்றேன்னு மானேஜர் கிட்டே சொன்னேன் .' இல்லே. நீ  இன்றைக்கே முடிச்சுட்டுப் போ'ன்னு மேனேஜர் சொல்றார். மேம், எனக்காக வந்து நீங்க அவர்கிட்டே பேச முடியுமா ? என்று  வார்த்தைகளை மென்று முழுங்கிய படி கேட்டாள் உஷா.
" நோ. உஷா. இந்தப் பழக்கத்தை விட்டுடு . வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகலே . அதற்குள் 'அதை செய்ய மாட்டேன் , இதை செய்ய மாட்டேன்'னு நீ சொல்றது தப்பு. அதை விட தப்பு, உன்னோட இயலாமைக்கு ரெகமெண்ட் பண்ண நீ  என்னைக் கூப்பிடுவது " என்று சொன்னாள்  பத்மினி 
"மேம், அவுட் ஆப் ஆபீஸ் அவர்ஸ் வேலை செய்ய  முடியாதுன்னு நான் சொல்லலே. அந்த வொர்க் முடிய குறைஞ்சது மூன்று மணி நேரம் ஆகும். இப்பவே மணி 6.30. நீங்க எல்லாரும் கிளம்பி போயிடுவீங்க. நான் மட்டும் தனியா ...எப்படி மேம் ?"
"உனக்கு அந்த கவலையே வேண்டாம். நம்ம ஆபீஸ்  ஸ்டாப், அதுவும் ஜென்ட்சில் யாராவது ஒருத்தர் உன் கூடவே இருந்து உன்னைக் கவனிச்சுகுவாங்க. நீ வொர்க்கை முடிச்சுக் கொடுத்துட்டுப் போ . எனக்கு அவசர வேலை ஒன்னு இருக்கு. பெர்மிசனில் போக நினைச்சேன். இன்னிக்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லைன்னு பெர்மிசன் கேட்கலே. நீ வொர்க்கை முடிச்சுட்டுப் போ. நான் இப்ப கிளம்பறேன் " என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் பத்மினி.
" ராட்சஷி " என்று அவளை மனதுக்குள் திட்டியபடியே திரும்பவும் தனது இடத்துக்கு வந்து கம்ப்யூட்டரை ஓபன் பண்ணினாள் உஷா. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளையும் ராகவனையும் தவிர மற்ற எல்லாருமே அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்  
வேலைப்பளுவில் வீடு மறந்து போயிருந்தாலும் அவ்வப்போது ஒரு பய உணர்வு அவளிடம் 'நீ தனியா இருக்கிறே . துணைக்கு ஒருத்தன் இருக்கிறான் . அவன் என்ன மாதிரி ஆளுன்னு உனக்குத் தெரியாது. நீ ஜாக்கிரதையா இரு ' என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கு ஒருமுறை அவளிருக்கும் இடத்துக்கு வந்து எட்டிப் பார்ப்பதும் திரும்ப தன்னுடைய இடத்துக்குப் போவதுமாக இருந்த ராகவனைப் பார்த்து பயம் இன்னும் அதிகரித்தது .
அடுத்த முறை அவன் எட்டிப் பார்த்தபோது " என்ன ஸார் வேணும் ? "ன்னு  எரிச்சலுடன் கேட்டாள் உஷா 
" ஒண்ணுமில்லே . தனியா இருக்கிறதை நினைச்சு நீங்க பீல் பண்ணக் கூடாதேன்னுதான் நான் வந்து வந்து பார்த்துட்டுப் போறேன் " என்று ராகவன் சொன்னதைக் கேட்டு " ச்சே " என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் உஷா 
பாஸ் கேட்ட விவரங்களைத் தயார் செய்து விட்டு அந்த பைலை அவர் மேஜை மீது வைக்கும்போது மணி 10.20. இந்நேரம் பஸ் கிடைக்காது. தனியாக ஆட்டோவில் வருவதை அப்பா விரும்ப மாட்டார். என்ன செய்வது என்ற பயம் பிடித்துக் கொண்டது . இருந்தும் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ராகவனிடம் " நான் கிளம்பறேன் ஸார் " என்றாள்.
" இதோ ஒரு நிமிஷம், நானும் வந்துட்டேன் " என்றபடி கிளம்பி ஓடி வந்தான் ராகவன்.
" ஸார், ஏற்கனவே லேட் . நான் மெயின் ரோட் போய் அங்கிருந்து பஸ் பிடிச்சு அங்கிருந்து வீட்டுக்குப் போயாகணும்  " என்று சலிப்புடன் கூறினாள் உஷா  
" பஸ்ஸா ? நைட் அவர்ஸில் உங்களுக்கு அந்த பிரச்சினை வரக்கூடாது ன்னு  தானே என்னை உங்களுக்கு துணையா வச்சிட்டு மற்ற எல்லாரும் கிளம்பிப் போயிருக்காங்க, வாங்க. டூ வீலரில் உட்கார்ந்து வந்து பழக்கம் உண்டா ? உட்காருங்க. உங்க வீட்டில் கொண்டுபோய் பத்திரமா சேர்த்து விடுவேன் "
வேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும், ' இது பெட்டர் ' என்று மனம் சொல்லியதால் ஏறி உட்கார்ந்தாள். அவளை வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டு , அவள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தபின்புதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்  ராகவன்.
மறுநாள் ஆபீசுக்குள் நுழைந்ததுமே ராகவன் இருக்குமிடத்துக்குச் சென்ற உஷா " ரொம்ப தேங்க்ஸ் ஸார். நேத்து எனக்கிருந்த டென்சனில் உங்களை வீட்டுக்குள் கூப்பிடக்கூடத் தோணலே  " என்றாள்.
" இதெல்லாம் ஒரு மேட்டரா ? " என்று சர்வ சாதாரணமாக் கூறினான் ராகவன்.
வேலையில் மூழ்கியிருந்த உஷாவின் தோளைத் தொட்டு " அப்பப்போ அக்கம்பக்கம் என்ன நடக்குன்னு பார்க்கணும். நான் இங்கே வந்து நின்னு சரியாக மூணு நிமிஷம் ஓடிப் போச்சு. பக்கத்தில் ஆள் நிற்பதுகூடத் தெரியாமல் அப்படி என்னம்மா வேலை? நேற்று வொர்க் முடிஞ்சுது தானே?   " என்றாள் பத்மினி 
" ஸாரி மேடம். நீங்க வந்ததை நான் கவனிக்கலே. நேற்று வொர்க்கை முடிச்சு பேப்பர்ஸ் எல்லாத்தையும் பாஸ் ரூமில் வச்சிட்டுதான் நான் கிளம்பிப் போனேன். வீடு போய்ச் சேரும் வரை எனக்கு உயிர் கையில் இல்லை "
" ஏன் ? "
" இதுக்கு முன்னே ஒரு கம்பெனியில் வொர்க் பண்ணினேன் . கரெக்டா ஒரேஒரு வாரம்தான் அங்கே  வொர்க் பண்ணினேன் . அதற்கான சம்பளம் கூட வாங்கலே. அங்கிருந்த மேனேஜர் சரியான தெருப் பொறுக்கி. அவனைப் பத்தி சரியாக சொல்லணும்னா, அவன் " மகளிர் மட்டும் " சினிமாவில் வர்ற நாசர் மாதியான ஆளு . அவன் இளிப்பு பிடிக்காமே வேலையை ரிஸைன் பண்ணினேன். காண்ட்ராக்ட் அதுஇதுன்னு பயம் காட்டினான் . " நீ வாயைத் திறந்தால் நான் போலீசுக்குப் போவேன்டா ராஸ்கல்"ன்னு பயம் காட்டினேன் . அதன் பிறகுதான் அங்கிருந்து என்னை ரெலீவ் பண்ணினான். இங்கே வந்து இன்னும் பத்துநாள் கூட ஆகலே. அதற்குள் தனியாக லேட் அவர்ஸ் வொர்க் பண்றது பத்தி பயந்து போயிட்டேன் " என்று படபடப்பாக சொன்னாள் உஷா 
இதைக் கேட்டு வாய் விட்டு சத்தமாக சிரித்தாள் பத்மினி 
" என் வேதனை உங்களுக்கு சிரிப்பா இருக்குதா மேம் ? "
" உன் பயம் நியாயமானது. ஆனால் இந்த ஆபீஸைப் பொறுத்தவரை அந்த பயம் அர்த்தமில்லாதது   "
" என்ன மேம் சொல்றீங்க ? எனக்குப் புரியலே ? "
" இந்த ஆபீசில் நான் வேலைக்கு ஜாயின் பண்ணின புதிதில் இதே மாதிரி வொர்க் பண்ண வேண்டிய சூழ்நிலை நிறைய முறை வந்திருக்குது. நான் பயந்துகிட்டேதான் வேலையை முடிச்சு கொடுத்துட்டுப் போவேன். இதை பத்தி ஒரு தடவை என்னோட சீனியர் கிட்டே சொன்னப்போ  அவர் சொன்ன விஷயம் என்னை ஆச்சரியப்பட வச்சுது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இங்கு நடக்கும் சம்பவங்களை கவனித்துப் பார்க்கும் போது தான் அவர் சொன்னது ரொம்ப சரின்னு தோணுச்சுது "
"அது என்ன மேம் ? " 
" இந்த ஆபீஸ் பார்ம் ஆகி 49 வருஷம் ஆறது. அடுத்த வருஷம் நாம 50-ம் ஆண்டு விழா கொண்டாடப் போறோம். இந்த ஆபீஸ் தொடங்கி முதல் பத்து வருஷங்கள் இங்கே ஜென்ட்ஸ் மட்டும்தான் வொர்க் பண்ணிட்டு இருந்திருக்கிறாங்க. முதல் முறையா ஒரு லேடியை அப்பாயிண்ட் பண்ணுவது பற்றி பேச்சு வந்திருக்குது. அதைக் கேட்டு அப்போ இருந்தவங்க ரொம்ப சந்தோசப் பட்டாங்களாம் . அப்போ இருந்த பாஸ் ஒரு மீட்டிங் போட்டு '"நம்ம ஆபீசில் புதுசா ஒரு லேடியை அப்பாயிண்ட் பண்ணப் போறோம். அது சரிப்பட்டு வந்தால்  மேற்கொண்டு நிறைய பேரை வேலைக்கு சேர்க்கும் எண்ணம் இருக்கிறது. புதுசா ஒரு பொண்ணு வர்றதால் உங்க எண்ணம் எப்படி எப்படியோ போகும் . நீங்க அவங்களோட பேசலாம் பழகலாம். அதுக்கு உங்களுக்கு  எந்தவிதத்  தடையும் கிடையாது.  சில விசயங்களை வெறும்  சட்டத்தினாலோ தண்டனையினாலோ சரி பண்ண முடியாது. மனம் ... மனக் கட்டுப்பாடு ... மனப் பக்குவத்தினால் மட்டுமே சீர்படுத்த முடியும். வரப் போகிற பெண்ணிடம் விஷமத்தனம் சில்மிஷம் பண்ணனும்னு உங்களுக்குத் தோணுச்சுன்னா ஒரேஒரு நிமிஷம் உங்களை நீங்களே கேட்டுப் பாருங்க, இந்த மாதிரி சம்பவம் நம்ம வீட்டுப் பெண்ணுக்கு நடந்தால் அதைத் தாங்கும் சக்தி நமக்கு உண்டான்னு.' சக்தி உண்டு , நாம செய்யறது சரின்னு உங்க மனச்சாட்சி சொன்னால் அதன் பிறகு நீங்கள் அந்தப் பெண்ணிடம்  எப்படி வேணும்னா நடந்துக்கலாம். வேலைக்கு வர்ற லேடீஸ், சோசியல் சர்வீஸ் பண்ணவோ டைம் பாஸுக்கு வர்றதில்லே. அவங்கவங்க குடும்ப சூழ்நிலை , வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு வர்றாங்க.சமுதாயத்தில் கௌரவமாக வாழணும்னு நினைச்சுதான் வீட்டை விட்டு வெளியில் வேலைக்குன்னு வர்றாங்க.  அதைப் புரிஞ்சு கிட்டு அவங்களை கௌரவமா நடத்தப் பழகிக்கோங்க"ன்னு சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கிறார். அவர் விதைச்ச விதை எல்லார் மனசிலும் நல்லதொரு மரமா வளர்ந்துட்டுது.  இவர்களுக்குப் பின்னாலே வந்தவங்களுக்கு 'நீங்க இப்படி இப்படி இருக்கணும்'னு யாரும் அட்வைஸ் பண்ணலே.  தன்னோட சீனியர்ஸ், மத்தவங்ககிட்டே நடந்துக்கறதைப் பார்த்து புதுசா வந்தவங்களும் நடக்கக் கத்துக் கிட்டாங்க. இங்கே லேடீஸ்சை ஜென்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. நம்ம எல்லாருக்கும் ஒரு பட்டப்பேர் வச்சிருப்பாங்க. நாங்களும் அவங்களை கிண்டல் பண்ணுவோம்.  இங்கே சில லவ் மேரஜ்  ஜோடிகூட உண்டு . அது அவங்க பெர்சனல் மேட்டர் . இங்கே உள்ள  ஜென்ட்சை நம்பி வெளியூருக்கு அபீசியல் டூர் கூட போவோம். அது எங்க எல்லார் வீட்டுக்கும் தெரிஞ்ச விஷயந்தான். இங்கே  'சம்திங் ' வாங்கிறவங்க உண்டு. அடாவடிப் பேர்வழி உண்டு. வெளியில் யார்யார் எப்படியோ. அதெல்லாம் எனக்குத் தெரியாது .ஆனா இந்த ஆபீசில் பெண்களை கீழ்த்தரமா நடத்தறவங்க யாரும் கிடையாது. லேட் அவர்ஸில் வொர்க் பண்ற சந்தர்ப்பம் வந்தால் நமக்குத் துணையா ஒரு ஜென்ட்ஸ் இருப்பார் . நம்மள கொண்டுபோய் நம்ம வீட்டில் விட்டுவிட்டுத்தான் ,அவர் தன்னோட வீட்டுக்குப் போவார். நீ தனியாக இருக்கப்  பயந்ததை நேற்றே நான் புரிஞ்சுகிட்டேன். இந்த விஷயங்களை நேற்றே சொல்லும் அளவுக்கு எனக்கு நேரமில்லாதபடி எனக்கொரு அவசர வேலை. விட்டாப் போதும்னு ஓடிட்டேன் . அதான் இன்றைக்கு வந்ததுமே முதல் வேலையா இதை சொல்றேன் . இனிமேல் பயப்படாமல் வேலையைப்  பாரு " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனாள் பத்மினி 
" நன்றி " என்று மானசீகமாக நன்றி சொன்னாள் உஷா, முகந் தெரியாத  " அந்த " யாரோவொரு பாஸுக்கு.

No comments:

Post a Comment