Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 21, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 75 )

              இந்தப் பெரியவங்களே இப்படித்தான் !

" ச்சே. இப்படிக் காலை வாரி விடுதே. ஸ்லோ பண்ணினா, பிரேக் பிடிச்சா வண்டி ஆப் ஆயிடுது. மெக்கானிக் ஷாப் எங்கிருக்குதோ தெரியலையே. கிப்ட் மட்டும் நம்ம கிட்டே இல்லைனா மெக்கானிக் ஷாப்பைத் தேடிக் கண்டு பிடிச்சு வண்டியை சரி பண்ணிட்டே போகலாம். இது நம்ம கிட்டே மாட்டிட்டு இருக்கு. நாம தெருவிலே நிற்கிற விஷயம் தெரியாமே எல்லாரும் நம்மள சபிச்சுகிட்டு இருப்பாங்க. கிப்ட் இல்லாமே  கல்யாண வீட்டுக்குள் எப்படிப் போறதுன்னு நினைச்சுகிட்டு தெருவோரம் நின்னுட்டு இருப்பாங்களே, இப்போ என்ன செய்றது ? தெரியாத ஏரியா. இன்று ஹாலிடேங்கிறதாலே  ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லே. என்ன ப்ராப்ளம்னு யாரையும் கேட்கக் கூட வழியில்லையே " என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான் கோகுல் .
அந்த வழியாக வந்த கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் " என்ன சார். என்ன ப்ராப்ளம் ? " என்றார் 
" தெரியலையேப்பா. ஸ்லோ பண்ணினா வண்டி ஆப் ஆயிடுது " என்றான் கோகுல் பரிதாபமாக 
"ஸார், இன்னிக்கு சண்டே. மெக்கானிக் ஷாப் எதுவும் சீக்கிரம் திறக்க மாட்டாங்க. நீங்க எங்கே ஸார் போகணும் ? "
" கோடம்பாக்கம். ஒரு கல்யாணத்துக்குப்  போகணும்ப்பா "
" ஸார், அதோ ஒரு சந்து தெரியுது பாருங்க. இப்படியே பொடிநடையா  அந்த சந்து வழியா போனீங்கன்னா வேளாச்சேரி ஸ்டேசன் வரும். வண்டியை ஷெட்டில் விட்டுட்டு ட்ரைன் பிடிச்சு ஈசியா கோடம்பாக்கம் போயிடலாமே ஸார் " என்றார் ஆட்டோ டிரைவர். 
"ரொம்ப தேங்க்ஸ்ப்பா . இதுவரை எனக்கு இந்த யோசனை தோணவே யில்லை. தேங்க்ஸ்ப்பா " என்று சொல்லிவிட்டு வண்டியை தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் கோகுல். 
கோடம்பாக்கம் ஸ்டேசனை விட்டு கோகுல் வெளியில் வரும்போது மணி 10.30 ஆகியிருந்தது. இனி மண்டபத்தைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்ற பரபரப்புடன் கோகுல் நடக்க ஆரம்பித்த போது " கோகுல் " என்ற குரல் அவனைப் பிடித்து நிறுத்தியது . ராஜேஷ் குரல் மாதிரி இருக்கே என்று நினைத்தபடியே குரல் வந்த திசையைப் பார்த்தான். " இங்கே வா " என்று பல குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலித்தது.
" அடடா, என்னப்பா, ஸ்டாப்ங்க எல்லோரும் இங்கேதான் இருக்கீங்களா ?
கிப்ட் இல்லாமே எப்படிப் போறதுன்னு நிக்கிறீங்களா? ஆமாம், கல்யாண மண்டபம் எங்கே இருக்கு ? ஏன் இங்கே நிக்கிறீங்க ? ஸாரி. டூ வீலர் காலை வாரி விட்டு விட்டது . வண்டியை வேளச்சேரி ஷெட்டில் கொண்டு போய் விட்டுட்டு ட்ரைன் பிடிச்சு வர்றேன். ஸாரி .. கோவிச்சுக்காதீங்க. ஏதாவது பேசுங்கடா " என்று கெஞ்சினான் கோகுல்.
யாரும் பேசுவதாக இல்லை. அங்கு மயான அமைதி நிலவியது. " டேய், என்னைத் திட்டவாவது செய்யுங்க. இப்படி பேசாமே இருக்காதீங்க. நான் என்ன வேணும்னா லேட்டா வந்தேன். நடந்தது எதுவும் என் கண்ட்ரோலில் இல்லை. நிலைமை என் கையை மீறிப் போயிட்டுதுடா. ட்ரைன்ல் போகிற யோசனையை ஒரு ஆட்டோ டிரைவர் சொன்னார் . இல்லாட்டா நான் இன்னும் அங்கேதான் நின்னுட்டுருப்பேன்.ஸாரிடா. வாங்க மண்டபத்துக்குப் போகலாம் " என்றான் கோகுல்.
" இங்கேயும் நிலைமை யார் கண்ட்ரோலிலும்  இல்லை. "
" என்ன சொல்றீங்க ? "
" பிரகாஷ் இறந்துட்டாண்டா "
" என்னடா ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டான் கோகுல் 
"தாலி கட்டி முடிந்ததும் பொண்ணும் மாப்பிளையும், அவங்க குல தெய்வத்தைக் கும்பிட்டுட்டு, பால்பழம் சாப்பிட்டுட்டு வர பொண்ணு வீட்டுக்குப் போயிருக்காங்க. கூடவே பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க ரெண்டுரெண்டு பேர் போயிருக்காங்க. வீட்டுக்குப் போயிட்டுத் திரும்பும்போது வேன் கண்ட்ரோல் இல்லாமேப் போய் கவிழ்ந்திருக்கு. வேன் டோர் எப்படியோ  திறந்துக்க  பிரகாஷ் மட்டும் வெளியில் வந்து விழுந்திருக்கிறான். வேன்  பின்னால் வந்த லாரி இவன் மீது ஏறி ஆள் ஸ்பாட்டிலேயே அவுட். மத்தவங்க யாருக்கும் சின்ன காயம் கூட கிடையாது. இதை என்னன்னு சொல்றது. மண்டபத்தை விட்டுக் கிளம்பிப் போகும்போது ' இப்போ வந்துடுவேன்'ங்கிற மாதிரி எங்களுக்கு  சைகை காட்டிட்டுப் போனான். பாடி ஜீ ஹெச்சுக்குப் போயிருக்குது . நம்ம ஆளுங்க கொஞ்ச பேர் அங்கே போயிருக்காங்க.ரெண்டு வீட்டு உறவுக் காரங்களும் இருக்கிறதாலே   பாடி இங்கே வந்துடும்னு பேசிக்கிறாங்க. இதுவரை ஒரு தகவலும் தெரியலே . அதான் இங்கே நிற்கிறோம் ? என்று விளக்கினான் விஸ்வம்.
" கல்யாணப் பெண்ணை நினைச்சாதான் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. வாழ்க்கை தொடங்கும் போதே,ஒரு முடிவும் வந்துட்டதே" என்று கண்ணீருடன் கூறினான் லாரன்ஸ் 
" நான் போய் பார்த்துட்டு வந்திடவா ? " என்று கேட்டான் கோகுல் 
" உம் "
தயங்கித் தயங்கி மண்டபத்துக்குள் நுழைந்தான் கோகுல். அத்தனை பேர் முகமும் இருண்டு கிடந்தது. கல்யாணக் கோலத்தில், நடுத்தர வயதுப் பெண்ணின் மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் மணப்பெண். அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்பது தெரியாமல் பெருங் குரலில் அழுது கொண்டிருந்தாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.
ஒரு சிறு பையன். அதிக பட்சம் ஐந்து  அல்லது ஆறு  வயது இருக்கும் . அங்கு இருந்த ஒவ்வொருவர் அருகிலும் போய் ஏதோ சொல்ல, சொல்லி வைத்தது போல அத்தனை பேரும்  அவனை " போடா " என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் என்ன சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய கோகுல்,அந்த சிறுவன், தான் இருந்த  பக்கம் யதேச்சையாக திரும்பியபோது " இங்கு வா " என்று கை காட்டி அழைக்க சற்றும் தயங்காமல் " என்ன அங்கிள் ? " என்று கேட்டபடி கோகுல் அருகில் வந்தான் சிறுவன்.
அவனை வெளியில் அழைத்து வந்த கோகுல், தனது  நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றான். மண்டபத்துக்குள் போன கோகுல் அதற்குள் அங்குள்ள பையனை ப்ரண்ட் பிடிச்சிட்டானா என்று  நண்பர்கள் வியப்புடன் பார்க்க, கல்யாண மண்டபத்தில் நடந்ததை விளக்கி சொன்னான் கோகுல் 
"என்னப்பா தம்பி, உன் பேர் என்ன ? நீ இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கியா ? " என்று மெதுவாக கொக்கி போட்டான் ராஜேஷ்
"என் பேர் சரண். எங்க அத்தைக்குதான்  கல்யாணம். நாங்க எங்கிருந்து வந்துருக்கோம் தெரியுமா ? "   
" தெரியாதுப்பா "
" திருச்சியிலிருந்து வந்தோம் "
"ஆமாம். நீ மண்டபத்தில் எல்லார் கிட்டேயும் என்ன சொல்லிட்டுருந்தே ?
ஏன் எல்லோரும்   உன்னைத் திட்டினாங்க. எதுக்காக உன்னை    அடித்துத் துரத்தினாங்க ?"  என்று கேட்டான் கோகுல் 
" ஓ .. அதுவா ? பாட்டி, அத்தை எல்லாரும் அழுதுட்டே இருக்காங்களா அவங்க அழக் கூடாதுங்கிறதுக்காக அவங்க கிட்டே போய்  ' நல்ல வேளை. கழுத்தில் தாலி ஏறினதும் மாப்பிள்ளை செத்துப் போனார். தாலி கட்டும் முன்னாலே இது நடந்திருந்தா எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிருக்கும்'ன்னு சொன்னேன்.  அதுக்குப் போய் என்னை அடிக்க வர்றாங்க அங்கிள் " என்று  சரண் சொல்ல, ஒட்டு மொத்தக் கூட்டமும் அதிர்ந்து போய் நின்றது
" என்ன தம்பி சொல்றே ? "
" அவங்க சொன்னதைத்தான் நான்  சொன்னேன். அதுக்குப்போய் அடிக்க வர்றாங்க "என்றான் சரண் முகத்தில் பரிதாபம் வழிந்தோட.
" அவங்க சொன்னாங்களா ? எப்போ ? ஏன் ? "
" இது என்ன மந்த் அங்கிள் ? "
" செப்டெம்பர் "
" மே மந்தில் எங்க ரோகிணி சித்தி கல்யாணம் நடந்துச்சுதானே. அதுக்கு நீங்க வந்தீங்களா ? " 
" வரலே ."
" ஏன் ? "
" இறந்துபோன பிரகாஷ்தான் எங்க  பிரண்ட் . உங்க ரோகிணி சித்தியை எங்க யாருக்குமே தெரியாதே . அதனாலே வரலே "
" அப்படியா ? எங்க ரோகிணி சித்திக்கும் ராஜு சித்தப்பாக்கும்  கல்யாணம் நடந்தப்போ, ராஜு சித்தப்பா வீட்டிலே ஒரு  தாத்தா இறந்து போயிட்டார். அந்த தாத்தாக்கு என்ன ஏஜ் தெரியுமா ? "
" தெரியாது "
" நைன்ட்டி ஏய்ட் இயர்ஸ் "
" உனக்கு எப்படி தெரியும் அவருக்கு  நைன்ட்டி ஏய்ட் இயர்ஸ்ன்னு "
"ராஜு சித்தப்பாதான்  சொன்னார், இன்னும் ரெண்டு வருஷம்  தாத்தா உயிரோட இருந்திருந்தா ஹண்ட்ரட்த்  ஏஜ் பெர்த் டேயை கிராண்டா நாம செலிபிரட் பண்ணியிருக்கலாம்னு. அப்போ எல்லாருமே ' நல்லவேளை,
தாலி கழுத்தில் ஏறி கல்யாணம் முடிஞ்சதும் அவர் இறந்து போனார். ஒரு நாள் முன்னாடி இறந்திருந்தா எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிருக்கும் . இப்போ கல்யாணம் முடிஞ்சதும்  செத்துப் போயிருக்கார். கடவுளுக்கு நன்றின்னு சொன்னாங்க. இப்போ எங்க விமலா அத்தைக்கும் பிரகாஷ் அங்கிள்க்கும் கல்யாணம் முடிஞ்சபிறகுதானே அங்கிள் செத்துப் போயிருக்கிறார்.இங்கே எல்லாரும் அழறாங்க.அவங்க அழாமே இருக்கத் தான் நான் அப்படி சொன்னேன். அதுக்குப்போய் அடிக்க வர்றாங்க " என்றான் சரண்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர் அத்தனைபேரும்.
"தம்பி, நீ என்ன சொல்றேங்கிறதை புரிஞ்சுதான் சொல்றியா? நீ சொல்றது தப்புன்னு உனக்குத் தெரியலையா ? தாத்தா வயசானவர் " என்று ராஜேஷ் சொல்லி முடிக்கும் முன்பாகவே " அப்போ வயசானவங்க செத்துப் போனா பரவாயில்லையா ?   போங்க அங்கிள். நீங்களும் அவங்க மாதிரியே பேசறீங்க. இந்தப் பெரியவங்களே இப்படித்தான் . அவங்க ஒண்ணு சொல்வாங்க. அதையே நாம அப்பிடியே  திருப்பிச் சொன்னா அடிக்க வருவாங்க.  இந்தப் பெரியவங்க எப்பவுமே இப்படித்தான் " என்று அழும் குரலில் சொல்ல , நடந்து முடிந்து விட்ட இந்த விபரீதத்தை இந்தப் பையனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது தெரியாமல் திகைத்து நின்றது நண்பர்கள் குழாம். 


No comments:

Post a Comment