Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, June 13, 2013

DEAR VIEWERS,


பார்வையாளர் ஒருவர் www.chennai.1colony.com ல் உள்ள கோலங்கள் எத்தனை புள்ளியில் அமைந்தது என்பது  சரிவரத் தெரியவில்லை. போட்டுப் பழகுவதற்கும் சிரமமாக உள்ளது என்று லெட்டெர் எழுதி இருந்தார் 

1. அதில் மொத்தம் 1008 கோலங்கள் உள்ளன 
2. அத்தனையும் 15 - 8 ஊடு புள்ளியில் உள்ளன 
3. அனைத்தும் எனது கற்பனையில் உருவானது 
4. அதனை  " PAINT SOFTWARE " ல் வடிவமைத்திருந்தேன் 
5. 2008 ம் ஆண்டுவரை அதை நெட்டில் எப்படி UP LOAD செய்வதென்பது      
   எனக்குத் தெரியாது 
6. என்னுடன் வேலை பார்த்த சக நண்பர், தனக்குத் தெரிந்த வகையில்     
  அதை     UP - LOAD செய்திருந்தார். ORIGINAL ல் பார்க்கும்போது கோடுகள் 
  தெளிவாகத்   தெரியும். திரும்ப அதை எப்படி ORIGINAL SIZE  க்கு கொண்டு 
  வருவது என்பது  எனக்குத் தெரியாது.

குறிப்பிட்ட பார்வையாளருக்கு  ஏற்பட்ட அதே சிரமம் உங்களுக்கும் இருக்குமாயின் கீழ்க் கண்டபடி முயற்சி செய்து பார்க்கவும் 

GOOGLE ல் ARUNASSHANMUGAM.BLOGSPOT.COM என்பதில் கிளிக் செய்யவும் 
( ARUNA SHANMUGAM  - இரண்டுக்கும் நடுவில் ஒரு S சேர்க்கவேண்டும். அதை மறந்து விடாதீர்கள் 

என்னோட ப்ளாக் ஓபன் ஆனதும் TOP ல் உள்ள MENU BAR ல்
( உதாரணமாக ART WEAVEN , DEEPAM AND LIGHT EFFECTS என்ற வரிசை வரும் அதில் நீங்கள் எதில் கிளிக் செய்தாலும் அந்தக் கோலங்களை தெளிவாகப் பார்க்க முடியும். older post ல் கிளிக் செய்து அடுத்த பக்கங்களுக்குப் போக முடியும். 
கோலம் போடும் விதம் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆரம்பத்திலேயே பலர் என்னிடம் சொல் லியிருந்ததால்  www.chennai.1colony.com ல் உள்ள எல்லாக் கோலங்களையும் நான் GIMP ல் வடிவமைத்துள்ளேன் 

இப்போது என்னிடமே எந்தக் கோலங்களும் இல்லை. ஒருமுறை UPS ல் எலி புகுந்து விளையாடி கேபிள்களை நாசம் செய்துவிட்டது. இரண்டாம் முறை UPS   மின்கசிவு  காரணமாக நாசம் . இப்படியே 4 UPS வீணாகப் போய் நான் இப்போது இரவல்  சிஸ்டத்தில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 4 UPS ம் தற்போது என் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது  . அது ஒப்பேறுமா, எனது டாகுமென்ட்ஸ் திரும்பக் கிடைக்குமா என்பதும் எனக்குத்  தெரியாது . இந்தப் பிரச்சினை யால்தான் குறுக்கெழுத்துப் புதிர் PUBLISH செய்வதிலும் சில சிக்கல் உள்ளது .
முடிந்தவரை சரி செய்ய முயற்சி செய்கிறேன். ARUNASSHANMUGAM.BLOGSPOT.COM ல் கோலங்கள் டிஸ்ப்ளே ஆக சிறிது தாமதமாகும். அந்த BLOG ல் உள்ள DISPLAY BOARD ல் தெரியும் http://picasaweb.google.com/arunasshanmugam என்பதில் கிளிக் செய்தால்  அத்தனை கோலங்களையும் தெளிவாகப் பார்க்க முடியும். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலங்கள் உள்ளன. ரொம்பவும் ஸ்லோவாகத் தான் ஓபன் ஆகும் . பொறுமை காக்கவும்.
( அத்தனை கோலங்களும் எனது கற்பனையில் உருவானவை ). அனைத்துக் கோலங்களையும் பார்த்துவிட்டு உங்கள் அனுபவங்களைத் தெரிவிக்கவும் 

No comments:

Post a Comment