Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 26, 2013

திரை இசைக் கவிஞர்கள் பார்வையில் " உலகம் " !

.


அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் 
பந்தம்  என்பது சிலந்தி வலை 
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில் 
சுற்றம் என்பது மந்தையடி !


 வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கும். இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும். இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா !


உலகத்தில் திருடர்கள் சரி பாதி 
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி 
( என்ன நடந்தாலும் அதைப் பார்க்காததுபோல் 
 மௌனமாக இருப்பவர்களை என்னமாய் சாடுகிறார் ? )



உலகே மாயம் வாழ்வே மாயம் 
நிலையேது நாம் காணும் சுகமே மாயம் 
வாழும் வாழ்வே மாயம்


எளியோரைத் தாழ்த்தி 
வலியோரை வாழ்த்தும் 
உலகே உன் செயல்தான் மாறாதா ? 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே 
உனக்கு நீதான் நீதிபதி  
மனிதன் எதையோ பேசட்டுமே - உன் 
மனசைப் பார்த்துக்கோ நல்லபடி !


ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனதுதானே உலகம் 
அதனால்தானே உலகம் எங்கும் மூண்டு நிற்குது கலகம் !



இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் 
எவ்வளவு இருந்தாலும் 
எப்படித்தான் பார்த்தாலும் இவ்வளவுதான் !




உலகம் - அழகுக் கலைகளின் சுரங்கம் 
பருவ சிலைகளின் அரங்கம் 


அதிகமாகப் படிச்சு படிச்சு மூளை களங்கிப் போச்சு - அணுகுண்டை தான்   வெடிச்சு கிட்டு அழிஞ்சு போகலாச்சு 
அறிவில்லாமே படைச்சதைதான்  மிருகமின்னு  சொன்னோம் -அந்த  மிருகமெல்லாம் நம்மைப் பார்த்து சிரிக்கிதென்ன செய்வோம்?  உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே !
.

No comments:

Post a Comment