Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 29, 2012

விடுகதைக்கு விடை என்ன ? (Puzzle No.12 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
                                 
         விடுகதைக்கு விடை தெரிந்தால் புதிர் எளிதாகிவிடும்
 

       (இந்த புதிர் 01 .05 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
    01
 





    02



  
 


   12
    03

 
    

 
   19 
  

   
    04
   

     
  
 
  
  
  

 
 17
 
   18
  

 
 
 

  
 
 
  
 

 
   13
 

  

    

 
  
   05




 
  

 

  



 


   
   06
 

  

 


  
  21
  

 



 
   07
   

   

 

 

  
   14
  

   
  
 

    

 
   08
   

 

   



  
   20
      

   

 

  

 
   09
   

   



 

 

    

    


  



    

 

   

  
  15  
 
  


  
 
   10


   
    11

   
  
   


  
 16  
  

இடமிருந்து வலம்

1  பள்ளத்தை கண்டால் பாய்ந்தோடும்                                             ( 4 )
2  காவலுக்கு கெட்டிக்காரன்                                                                 ( 3 )
3  அண்ணனுக்கு எட்டாது. தம்பிக்கு  எட்டும்                                  ( 3 )
4   நிலையில்லாமல் தாவுவதால் நானும் மனசும் ஒன்று        ( 4 )
5  அடிப்பாரும் பிடிப்பாருமின்றி  அந்தரத்தில் ஆடுகிறது அழகான பாம்பு   (4 )
6  வேரில்லா மரத்தில் ஐந்து கிளைகள்                                             (4 )
7  அப்பன் சொரியன், அம்மை சடைச்சி, பிள்ளைசக்கரைக்கட்டி   ( 2 )
8  பச்சை புல்லில் படுத்திருப்பவன் பகலவனை கண்டதும்  மறைவான்       ( 5 )
9  வெள்ளை நிறத்து குடை,வீதியில் நிற்கும் குடை, மழைக்கு உதவா குடை ( 5 )
10  ஒரு புட்டியில் இரண்டு தைலம்                                                               ( 3 )
11 எனக்குள் இருப்பவர்கள் நாலு பேர். என்னை இழந்தால்தான் மற்றவரை
    அடையலாம்.                                                                                                            ( 2 )                                                                                                        
வலமிருந்து இடம்  

12   உலகுக்கெல்லாம் ஒரே போர்வை                                                        (3 )
13  என் பெயரில் உண்டு விளக்கு. என்னை தொட்ட கையால் விளக்கை தொட
       மாட்டார்கள்                                                                                                ( 6 )
14  சுயமாக செய்ய தெரியாது. நாம் செய்வதை திருப்பி செய்வான்   ( 4 )
15   நானொரு பழம். எனக்குள் உண்டு பெண்ணின் இதயம்                   ( 7  ) 
16   மூன்று கண்ணுண்டு; சிவனல்ல. முடிந்து வைத்த கொண்டையுண்டு;
     பெண்ணல்ல                                                                                                             ( 4 )

மேலிருந்து கீழ் 

  2  சத்தமின்றி பதுங்கி பாயும் மீசைக்கார திருடன், எலிகளுக்கு எமன்    ( 2 )
 3   வெள்ளை  மாடு கூட கருப்பு மாடும் குளிக்க போச்சு. வெள்ளை மாடு
      வீட்டுக்கு வந்துச்சு. கருப்பு மாடு தண்ணீரில் போச்சு                                  ( 9 )
12  எட்டா உயரத்தில் காயுது ஏழு வண்ண புடவை                                             (4 )
17  அரசன் ஆண்டி என்ற பேதமின்றி அனைவருக்கும் வருவது                (7 )
18  கண்டு பூ பூக்கும். காணாது காய் காய்க்கும்                                                  ( 6 )
19  உலகுக்கெல்லாம் ஒரு விளக்கு. எவருமே ஏற்றி வைக்கா விளக்கு ( 4 )
20  பச்சை பெட்டியில் வெள்ளை முத்துக்கள்                                                      ( 3 )
21  நீருக்குள் கிடக்குது வெள்ளி தட்டு. எடுக்க கையை விட்டால் இருக்கும்
     இடம் தெரிவதில்லை                                                                                    ( 2 )
  
கீழிருந்து மேல்
14   காட்டை விட யானைக்கு மவுசு அதிகம். வீட்டை விட எனக்கு
      மவுசு அதிகம்                                                                                                            ( 3 )
16  ஆயிரம் தச்சர் சேர்ந்து கட்டியதாம்  அழகான மண்டபம். ஒருவன் கல் பட்டு
       உடைந்ததாம் மண்டபம்                                                                                       (4 )

No comments:

Post a Comment