Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, August 18, 2012

ஆவதும் பெண்ணாலே ; அழிவதும் பெண்ணாலே; பார்த்து நடந்துக்கங்க !!

   .


மௌனம்தான் பெண்களுக்கு மிகச்சிறந்த அணிகலன். ஆனால் அதை அவள் அணிவதுதான் அபூர்வம்.


ஆணுக்குப்பெண் அடங்கி நடப்பதில் எந்த கேவலமும் இல்லை. அடங்கி நடக்க தெரிந்த வர்களுக்குதான் அடக்கவும் தெரியும். விலை உயர்ந்த தங்கத்தை வலுவான இரும்பு பெட்டிக்குள் வைத்து பூட்டுவதால் தங்கத்தின் தரம் தாழ்ந்து விடாது.


அழகுக்காக மட்டும் ஒரு பெண்ணை மணந்து கொள்பவன், அடித்திருக்கும் பெய்ண்ட்டுக்காக ஒரு வீட்டை  வாங்குபவன் ஆவான். 



ஒரு அழகான பெண் இருக்கும் வீட்டில் ஆபத்து ஜன்னல் வழியாக சிரிக்கிறது.


பெண் என்பவள் என்றென்றும் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். யுகம் யுகமாக பெண்ணுக்கென்று விதிக்கப்பட்ட தர்மமும்  நியாயங்களும் என்றைக்குமே மாறக்கூடாது.

ஒரு ஆணுக்குக் கல்வி அறிவைக் கொடுங்கள். அவன் முன்னேறுவான்.   ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவைக் கொடுங்கள். அவள் ஒரு குடும்பத்தையே முன்னேற்றி விடுவாள்.



அழகிக்கு கணவன் அவள் பிறக்குமுன்பே பிறந்திருப்பான்.!! 




இறைவன் படைப்பில் பெண் என்பவள் ஒரு அற்புதமான சக்தி. தென்றல் புயல், நீர் நெருப்பு, எல்லாம் அவளுக்குள்  மறைந்திருக்கிறது.



சாதாரணப் பெண், சாதனைப் பெண் ஆவது  எப்போது ? துதி பாடுகிறவர்களைப் புறக்கணித்து விட்டு, கடுமையாக விமரிசிப்பவர்களின் வாய்மொழிகளைப் பொய்யாக்க முயற்சி செய்யும்போதுதான் !! 



ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனதுதானே உலகம். அதனால்தானே உலகம் எங்கும் மூண்டு நிற்குது கலகம் !!
-- 

No comments:

Post a Comment