Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 28, 2012

சின்ன சின்ன செய்திதான் ! சிந்திக்க நிறையவே விசயம் இருக்கிறது

a
*  சிறு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; கப்பலின் அடித்தளத்தில் விழும் சிறு ஓட்டை, பெரிய கப்பலையே கவிழ்த்து விடும்.


பாறைகள் தடுக்கி மனிதர்கள் கீழே விழுவதில்லை;  நடக்கும் பாதையில் கிடக்கும் சிறு கற்கள்தான் மனிதர்களை நிலை குலைய வைக்கின்றன. 




சிறு குழந்தைகளுக்கு  சில  கெட்ட பழக்கங்களை, வேண்டாத பேச்சுக்களை பயன் படுத்த கற்றுத் தராதீர்கள்; சமயம் கிடைக்கும் போது, அவர்கள் அதனை உங்களிடமே  பிரயோகித்துப் பார்த்து விடுவார்கள். 


*  தவறுகள் சிறியதாக இருக்கும்போதே திருத்திக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.  திருத்தப்படாத தவறுகள், தண்டனையை அனுபவிக்க வழி வகுக்கும்..


*  சிறு குழந்தைதானே என்று அலட்சியப்படுத்தி  விடாதீர்கள். சிறு குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றது!


*சிறு சிறு தோல்விகளிலிருந்து மிகப் பெரிய பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.  ஒரு சிறு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்கு சமம்.


*   இத்தனை சிறிய கையளவு இதயத்துக்குள்தான் எத்தனை எத்தனை கனவுகள், கடலளவு எண்ணங்கள்,  கட்டுக்கடங்கா ஏக்கங்கள் ! 



*  அறிஞர்கள், அலசி ஆராய அச்சப்படும் விஷயங்களில், முட்டாள்கள் முழுமூச்சுடன்  ஈடுபடுவார்கள்.  






*  ஒரு சிறு புன்முறுவல்;  நம்முடைய ஜென்ம விரோதியைக்கூட சற்று யோசிக்க வைக்கும் !



வாழ்க்கையை வளமாக்க விரும்பினால், ஒரு சிறு வினாடியைக்கூட வீணடிக்க கூடாது. 

அப்பப்பா ! ஒரு சிறு விதைக்குள்தான் எத்தனை எத்தனை, துளிர்கள், இலைகள், மொட்டுக்கள், காய்கள், கனிகள்,  மரங்கள் ஒளிந்திருக்கின்றன !      



No comments:

Post a Comment