Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, June 20, 2023

Meaningful Two Words in One Word Puzzles ( 31)

புதிர் - 31



வகுப்பில் மாணவர்கள் அனைவருமே "டல் மூடில் " இருப்பது போல டீச்சருக்குத் தோன்றியது.

மாணவர்களின் மனோநிலையை மாற்ற நினைத்த டீச்சர், "ஹாய் ஸ்டூடென்ட்ஸ் எல்லோரும் புக்கை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்து உட்காருங்க. நாம பொதுவான சில விஷயங்களைப் பத்தி பேசலாம் " என்றதுமே மாணவர்களிடம் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

"நீங்கள் ஒவ்வொருவராக எழும்பி நின்று உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி சொல்லணும். முதல் டாபிக், நீங்கள் தினமும் பார்க்க நினைப்பது, பார்த்ததும் உங்களுக்கு சந்தோசம் தரக் கூடியது  பற்றி சொல்லணும்" என்றார்.

"எனக்கு நெட் பார்க்கிறது பிடிக்கும். ஆனால் நான் பார்ப்பதை அப்பா பார்த்துவிட்டால், அவர் திட்டுவார் " என்றான் சேகர் சோகமாக.

"எனக்கு வீடியோ கேம்."

"எனக்கு மேட்ச் "

" எனக்கு "- - - - - - " பார்க்க பிடிக்கும். ஆனா தினமும் பார்க்கிற தென்பது நடக்க முடியாத, இயற்கைக்கு மாறுபட்ட விஷயமாச்சே " என்றான் பிரபு கவலையுடன்.

இதைக் கேட்ட மொத்த மாணவர்களும் "ஹோ. போடா மக்கு " என்று வகுப்பறையே அதிரும் அளவு சிரித்தார்கள்.

"மத்தவங்களை நயாபைசா அளவுக்குக்கூட மதிக்காதவங்க எத்தனை பேர் நம்ம கூடவே இருக்காங்க. " என்ற கோரஸ் குரல் கேட்டது. அவனை டீச்சர் கிண்டல் பண்ணுவார் என்று மாணவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஒரு நிமிடம் முகம்  சுளித்த டீச்சர், "நல்ல ஆசைதான். ஆனால் தினமும் நடக்காது என்பதும் உண்மைதான்!" என்றதும், அதை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள்,"டீச்சர்  அவன் சொல்றது நல்ல விஷயமா? துஷ்டனை பார்க்க யாராவது ஆசைப் படுவாங்களா? அதுவும் தினமும்! " என்று கேட்டார்கள்.

அதைக்கேட்ட டீச்சர், பிரபு சொன்னதை நீங்கள் எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவன்  சொன்னது " - -  - - - - " பற்றி. நீங்கள் நினைக்கிறமாதிரி " - - - - - - " பற்றி இல்லை என்று விளக்கினார். "ஸாரி டீச்சர்.. ஸாரி பிரபு" என்று சொன்ன மாணவர்களுக்கு சிரிப்பையே பதிலாக சொன்னார்கள் இருவரும்..   

(விடை அடுத்த வாரம். அதுவரை நல்லா யோசிச்சு வையுங்க. உங்க விடையோடு சரிபாருங்க.)

No comments:

Post a Comment