Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 24, 2021

Dear viewers,



தமிழ் மொழியில் உள்ள ஒரு சொல்லில் உள்ள சந்தேகம் குறித்து இந்த பதிவை உங்கள் முன்பாக வைக்கிறேன். 

பொதிகை தொலைக்காட்சியின் இந்தவார  "தமிழோடு விளையாடு" பார்த்தேன். அந்த நிகழ்ச்சியை அப்போதுதான் நான் முதல்முறையாகப் பார்த்தேன்.

அதில் ஒரு கேள்வியாக "மழை கா பயிர் போல்"   என்றொரு சொல் இடம் பெற்றது.

என்னுடைய பள்ளி நாட்களில் "மழைமுகம்  காணாப் பயிர்போல" என்றொரு வார்த்தை படித்ததாக ஞாபகம். அது யார் எழுதிய / எந்த செய்யுள் / பாட்டில்  இடம் பெற்றது என்பது நினைவில் இல்லை. அதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கு மற்ற வேலைகளில் கவனம் செல்லாது. ஏனென்றால் இதே வார்த்தையைச் சொல்லிச் சொல்லி  நட்பு வட்டங்களை கலாய்த்திருக்கிறோம்.

உங்களில் யாருக்காவது இது குறித்த விவரம் தெரிந்தால் அதை "comment" ல் பதிவு செய்யுங்களேன்.

அது யார் கையாண்ட வார்த்தை? மழை காமழைமுகம்  காணா - இந்த இரண்டில் எது சரியான வார்த்தை என்பதை தெரிவியுங்கள்.

நன்றி.

No comments:

Post a Comment