Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 31, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 72 )

                             பரிதாபம் ! அந்தோ பரிதாபம் !!

"   சக்தி ஸார், ப்ளீஸ், ஒரே ஒரு நிமிஷம் "
" யெஸ், என்ன மேடம் ? என்ன ப்ராப்ளம் ? "
" இதோ பாருங்க ஸார், டிராப்ட் லெட்டெர் ரெடி ஆயிடுச்சு . பிரிண்ட் கமான்ட் குடுத்தாச்சு. ஆனால் பிரிண்ட் வரலே " என்றாள் சித்ரா 
" கொஞ்சம் நகருங்க " என்று சொல்லிவிட்டு சித்ராவின் சீட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் ஒவ்வொரு கமான்ட் ஆக சரி பார்த்துக் கொண்டு வந்த சக்தி, " மேடம் உங்க பிரிண்டர் நம்பர் த்ரீ தானே. நீங்க பிரிண்ட் கமாண்டை  பிரிண்டர் நம்பர் டூக்குக் குடுத்துட்டு, இதில் பிரிண்ட் வரலேன்னு சொன்னா எப்படி மேடம் ? " என்று கேட்க" ஓ, ஸாரி . நான் கவனிக்கலே " என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே " சித்து, சக்தி ஸாரை மானேஜர் வர சொன்னார் " என்று கோபால் குரல் கொடுக்க " இதோ வந்துட்டேன் " என்று மானேஜர் அறைக்குள் ஓடினான் சக்தி. 
" சக்தி. பேங்க் வரை போய் அந்த O.D மேட்டர் என்னனு பார்த்துட்டு வர முடியுமா ? என்னடா இது. கேஷியர் செய்ய வேண்டிய வேலையை உங்க கிட்டே சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்க போன பொறுமையா பேசி வேலையை சக்சஸ் புல்லா முடிச்சிட்டு வருவீங்க. கேஷியர் போனால் "எடுத்தோம் கவுத்தோம் "ன்னு பேசி விஷயத்தை விவகாரமாக்கிட்டு வந்துடுவார்" என்று மானேஜர் சொல்ல, " அதனாலென்ன ஸார், இப்பவே கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தான் சக்தி.
"சக்தி ஸார் " என்ற குரல் கேட்டு ஒரு நொடி தாமதித்தான் சக்தி 
" என்ன மேடம் "
" மத்தியானம் ரெவ்யூ  கமிட்டி மீட்டிங். கமிட்டி மெம்பெர்ஸ்க்கு காப்ஸ் புக் பண்ணணும். வழக்கமா நாகு ஸார் தான் இந்த வேலையை செய்வார். மானேஜர் நாகு சாருக்கு வேறே வேலை குடுத்து வெளியே அனுப்பிட்டார். ட்ராவல்ஸ்க்கு போன் போட்டா அவன் எடுக்கவே மாட்டேங்கிறான். ரிங் மட்டும் போயிட்டே இருக்கு. நீங்க நேரா போயிட்டு வந்தா நல்லா இருக்கும் " என்று சோபியா சொல்ல, " சரிம்மா இப்போ பேங்க் போறேன் . போற வழிதானே . சொல்லிட்டே போயிடறேன்  " என்று சொல்லிவிட்டு விரைந்தான் சக்தி 
சக்தி வெளியேறி ஐந்து நிமிட நேரம் கழிந்திருந்தது 
" சக்தி .. சக்தி .. என்னப்பா பண்றே ? கொஞ்சம் வாப்பா " என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
" அவர் இல்லே சார் .அவரை மானேஜர் வெளி வேலையா அனுப்பி இருக்கிறார் " என்ற குரல் வந்ததும், " ஏம்ப்பா அவரை வெளியே அனுப்பறீங்க மனுஷன் ஒரு நிமிஷம் இல்லாட்டா நமக்கு கையொடிஞ்ச மாதிரி யாகிவிடும்  " என்று சலித்தபடி பைலுக்குள் முகம் புதைத்தார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
" ஸார் ஒரு நிமிஷம் " என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
" என்னப்பா ? "
" இப்படி ஆளாளுக்கு ' சக்தி , சக்தி ' என்று ஏலம் போட்டுட்டு இருக்கிறோம். இன்னும் ஆறு மாசத்தில் அவர் வேறே பிராஞ்சுக்குப் போகப் போறார் . அதுக்குப் பிறகு என்ன செய்யப் போறோம் ? "
" செய்றது என்ன ? இங்குள்ள மக்குகளைக் கட்டி அழ வேண்டியதுதான். இங்கே உள்ள எல்லாமே நோகாமே நோன்பு நூற்க்கிற கூட்டம் . அததுக்கு வேலை தெரிஞ்சா கூட, வேலை  செஞ்சு காட்டிட்டா அந்த வேலையை தனக்குன்னு முத்திரை குத்திடுவாங்க என்கிற உஷார் நினைப்பில் பட்டும் படாமலும்  உட்கார்ந்திட்டுப் போகிற ரகங்கள். இதுவே பிரைவேட் கம்பெனியா இருந்தா அடிச்சு துரத்தி இருப்பான் . கவர்ன்மெண்ட் ஆபீசாப் போச்சு . என்ன செய்றது ? வேலை செய்ய அஞ்சற ஆள் இல்லே சக்தி. அது அவனோட குணம்னு எடுத்துக்கலாம் . ஆனா எல்லா சப்ஜெக்டும் தெரிஞ்சு வச்சிருக்கிறதுதான் ரொம்பவும் ஆச்சரியமான விஷயம் " என்று புகழாரம் சூடினார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
மதிய உணவு இடைவேளை முடிந்து அவரவர் சீட்டில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.   ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் அருகில் வந்த சக்தி " ஸார் மீட்டிங் மூணு மணிக்கு ஆரம்பம். முடியறதுக்கு எப்படியும்  மணி ஆறாகிடும். அதுக்கு முன்னாடியே ஆபீஸ் டைம் முடிஞ்சுடும். M.D ரூம்க்கு போன பைல்ஸ் எதுவும் வெளியே வரலே  அது வந்தால்தான் எனக்கு வேலை. இன்னிக்கு மீட்டிங் முடிச்சிட்டு நாளைக்குதான் M.D பைல்ஸ் பார்ப்பார். எனக்கு சீட்டில் வேலை எதுவும் இல்லே. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பட்டுமா ? " என்று கேட்டான் 
" என்னப்பா நீ, இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்கணுமா ? " போறேன் ஸார் " னு சொல்லிட்டு போயிட்டே இருக்கிறதுதானே " என்று உரிமையுடன் கடிந்து கொண்டார் ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் 
ஹாண்ட் பாக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த சக்தி வண்டியை ஸ்டார்ட் செய்யும் முன்பாக வீட்டுக்கு போன் செய்து  "  வீட்டுக்குத்தான் கிளம்பி வந்துட்டு இருக்கிறேன். வர்ற வழியில் ஏதாவது வாங்கணுமா ? " என்று கேட்டான் 
" ஏங்க, உங்களுக்கு என்ன தெரியும் ? என்ன சமர்த்து இருக்குனு இப்படியொரு கேள்வி கேட்கறீங்க ? " என்ற கிண்டலான குரல் எதிர் முனையில் இருந்து வந்தது 
வண்டியை திரும்பவும் செட்டில் விட்டு விட்டு, சீட்டில் வந்து உட்கார்ந்தான் சக்தி. 

No comments:

Post a Comment