Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 23, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 17

       

               கத்தியின்றி ரத்தமின்றி ஒரு கொலை !?

" ப்ளீஸ் டாடி, ஒன் மோர் டைம் ரீ கன்சிடர் மை கேஸ் ஆன் சிம்பதிடிக் க்ரவுண்ட். தந்தையே, தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை என்னுடைய  வழக்கை கருணையின் அடிப்படையில் மறு பரிசீலனை பண்ணுங்களேன் " என்று கொஞ்சலான குரலில் கெஞ்சினாள் நிவேதிதா.
 " நோ. நிவேது, நோ சான்ஸ். நீ இங்கிலிசில் கேட்டாலும் சரி; தமிழில் கேட்டாலும் சரி; அல்லது உனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளில் கேட்டாலும் சரி;  என்னுடைய முடிவில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. நான் முடிவு பண்ணினது பண்ணினதுதான். வருகிற ஞாயிற்றுக் கிழமை நீ உன் மாமா வீட்டுக்கு டில்லிக்குப் போகிறே. நான் ஏற்கனவே ராஜேந்திரன் அங்கிளுக்கு  மெசேஜ் அனுப்பியாச்சு. உனக்கு ப்ளைக்ட் டிக்கெட் ஏற்பாடு பண்ணியாச்சு. அதனாலே இந்த ப்ரோக்ராமில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. இன்னும் மூணு நாள் டைம் இருக்கு. அதுக்குள்ளே உன் பிரண்ட்ஸ் யார் யாருக்கெல்லாம் சொல்லணுமோ, சொல்லிட்டு கிளம்பற வழியைப் பாரு." என்றார் ராமகிருஷ்ணன் கண்டிப்பான குரலில்.
"மம்மி, நீயாவது சொல்லேன் மம்மி"
" என்னங்க, நமக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு, அவளையும் கண்காணாத தூரத்துக்கு அனுப்பணுமா? அவளை அனுப்பிட்டு,இவ்வளவு பெரிய வீட்டில் நானும் நீங்களும் ஓடிப் பிடிச்சா விளையாட முடியும்?" என்று மகளுக்காக பரிந்துரை செய்தாள் லட்சுமி.
" அப்படியொரு ஆசை, அதுதான், ஓடிப் பிடிச்சு விளையாடணுங்கிற  ஆசை உனக்கு இருந்தால் அதில் எனக்கு எந்த அப்ஜக்சனும் கிடையாது. ஓட நான் ரெடி"
"ஆமாம். இத்தனை வயசுக்கு மேலேதானே அந்த ஆசை வரப் போகுது.  இப்போ ஒரு தரம் பட்டுட்டா இல்லையா, இனிமே  எச்சரிக்கையா  இருப்பா. விளையாட்டுத் தனத்தை விட்டுட்டு நல்லா படிச்சு பாஸ் ஆயிடுவா.குழந்தை வேணும்னா ஒரு சப்ஜெக்டில் கோட்டை விட்டா? என்னவோ அவ கெட்ட நேரம். இப்படி ஆயிடுச்சு. இதுக்கு போய் குழந்தையை டில்லிக்கு அனுப்பணுமா? அதுவும் என் அண்ணன் வீட்டுக்கு. ரிடையர்ட் மிலிடரி ஆபீசர். டிசிப்ளின், டிசிப்ளின்னு சொல்லியே குழந்தையை வறுத்து எடுத்துடுவார். வீட்டை ஆர்மி கேம்ப் மாதிரி வச்சிருப்பார். நம்ம  வீட்டில் செல்லமா வளர்ந்த பொண்ணு,., அந்த கெடு பிடியை நம்ம குழந்தை தாங்க மாட்டா. கஷ்டப் படுவா. அவளை அனுப்ப வேண்டாம்"
" கஷ்டப்படணும். கஷ்டப் பட்டாதான் உலகம்னா என்னனு தெரியும். அவளை  அங்கே அனுப்பறதே அதுக்காகத்தான். நம்ம வீட்டு வாட்ச்மன் பையன். எந்தவொரு வசதியும் இல்லாத சூழ்நிலையில், நம்ம வீட்டு அவுட் ஹௌசில் இருந்து படிச்சு, இன்னிக்கு ஸ்டேட் பர்ஸ்ட் வந்திருக்கிறான், அந்த வீட்டில் நல்ல சாப்பாடு கிடையாது;  பஸ்சுக்கு காசில்லாமல் பாதி நாள் நடந்து ஸ்கூலுக்கு போகிறான்.  இவளுக்கு படிக்க ஏ சி ரூம், வெளியே போய்வர  ஏ சி கார்னு எல்லா வசதியும் செய்ஞ்சு கொடுத்ததில் திமிர்தான் ஏறி இருக்கு; படிப்பு ஏறலே;  ஸ்கூல் பர்ஸ்ட் வர வேண்டாம்;அட்லீஸ்ட் பாசாகியாவது தொலைத்திருக்கலாம். அவளுக்கு எந்த கவலையும் இல்லே; எனக்குதான் வெளியில் தலை காட்ட முடியலே. படிப்பு ஏறாத ஒரு ஜென்மத்துக்கு தண்ட செலவு செய்றதைவிட நல்லா படிக்கிற பையனை மேலே மேலே படிக்க வைக்கலாம்.எனக்கே இப்போதான் அந்த ஞானோதயம் வந்திருக்கிறது. அவனை எந்த அளவுக்கு உயர்த்தி காட்டறேன்னு பாரு. இவ டில்லிக்கு போய் கஷ்டப் படட்டும்" என்றார் ராமகிருஷ்ணன் கோபமாக.
"டாடி, போயும் போயும் ஒரு வாட்ச்மன் பையனுடன், நம்ம கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கிற வேலைக்காரன் பையனுடன் கம்பேர் பண்ணி பேசறீங்க.நானும் அவனும் ஒண்ணா?" என்று இரைந்தாள் நிவேதிதா.
" ஷட் அப். கம்பேர் பண்ணி பேசக் கூட லாயக்கில்லாத பொண்ணா நீ இருக்கிறியே?"
" அப்ப நான் எப்பதான் சென்னை வர்றதாம்?"
"எக்ஸாம் டைம் வரும் போது நான் சொல்றேன். அப்ப நீ வந்தா போதும், எக்ஸாம் முடிஞ்சதும் பழையபடி டில்லி போறே, அங்கே மேற்படிப்பை கண்டினியு  பண்றே?"
" அதைவிட நான் செத்து தொலையலாம்!" என்று இரைந்தாள் நிவேதிதா.
" அது உன் இஷ்டம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ராமகிருஷ்ணன்.
அவர் தலை இங்கிருந்து மறைந்ததும், "சாகிறதுக்கு நான் என்ன பைத்தியமா? இன்னும் நான் அனுபவிக்க வேண்டியது இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கு. அதை மிஸ் பண்ணிடுவேனா என்ன?"  என்று சொல்லி லட்சுமியின் கன்னத்தில் செல்லமாக கைகளால் தட்டி விட்டு ரூமுக்குள் சென்றாள் நிவேதிதா.
வெளியில் வீராப்பாக பேசிவிட்டு வந்தாலும்,  மனதுக்குள் அழுகையும் ஆத்திரமும் ; போட்டி போட்டுக் கொண்டு வந்தது.
ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த அன்றே பத்திரிக்கை காரர்களும் மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்ததென்ன? அவர்கள் முன்னிலையில் அப்பா அவன் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததென்ன?  பர்சைத் திறந்து, கையில் என்ன வருகிறது ஏது வருகிறது என்பதைக்கூட பார்க்காமல் பாலுவின் கையில் திணித்ததென்ன? ஒரே நாளில், ஒரு செல்லாக்காசு ஹீரோ ஆகிவிட்டதையும், தான் ஒரு செல்லாக்காசு ஆகிவிட்டதையும் நினைத்து எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கையில், எரிகிற நெருப்பில் எண்ணை வார்ப்பது போல, அவள் செல்ல டாடி, அவளை, மாமா என்ற ஒரு உறவு முறையில் இருக்கிற ஒரு ராட்ஷசன் வீட்டுக்கு அனுப்புவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரூமுக்குள் அடைபட்டுக் கிடப்பது பிடிக்கவில்லை.
"மம்மி, என்னோட பிரண்ட்சுக்கு நான் டில்லி போற விசயத்தை சொல்லிட்டு வர்றேன் " என்று சொல்லிக் கிளம்பினாள்.
அவளைப் பார்த்ததுமே "டீ, நிவேது, உன்னைப் பார்த்தால் பாவமா இருக்குடி " என்றது பிரண்ட்ஸ் சர்கிள்.
"ஒரு சின்ன கரெக்சன். பாவமா இருக்குன்னு சொல்லாதீங்க, பொறாமையா இருக்குனு சொல்லுங்க. நான் ப்ளைட்டில் டில்லிக்கு பறக்கப் போறேன் " என்றாள் நிவேதிதா.
"போடி கழுதை, சும்மா ரீல் விடாதே; எங்களுக்கு எல்லா விசயமும் தெரியும்" என்று மட்டந் தட்டிய தோழியரிடம் " எல்லாமே தெரியுமா?" என்று பரிதாபமாக கேட்டாள் நிவேதிதா.
" ஆமாம்" என்ற குரல் கோரசாக வந்தது.
" சரி வாங்கடி,ரெஸ்டாரென்ட் போகலாம்" என்று அனைவரையும் வெளியில் அழைத்து வந்த நிவேதிதா, எதிர் திசையில் பாலு போவது தெரிந்ததும், ட்ராபிக்கைக் கூட பொருட் படுத்தாமல், " பாலு" என்று குரல் கொடுத்தபடி ஓடினாள்
"ஏம்மா இப்படி ஓடி வர்றீங்க? அங்கிருந்து குரல் கொடுத்தா நான் வந்திருப்பேனே?" என்றான் பாலு பணிவாக.
"நான் டில்லி போறேன்"
"தெரியும்"
அதற்குள் அவுட் ஹவுஸ் வரை விஷயம் போயிட்டுதா என்று மனசுக்குள் கறுவிக்   கொண்டாள்.
"உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"
"சொல்லுங்கம்மா"
" என்ன இது அம்மா சும்மான்னு? செல்லமா "நிவி" என்று நீ கூப்பிடணும். அதுதான் எனக்கு பிடிக்கும். நான் இவ்வளவு நாளும் உன்னோட பேசினது கிடையாது, பழகினது கிடையாது;  ஆனால் என் வீட்டு ஜன்னல் வழியா நான் உன்னைத்தான் தினமும் பார்த்திட்டுருப்பேன்.  ஆனால் நீ என்னை ஏறேடுத்து கூட பார்த்தது இல்லை. இப்போ நான் டில்லி போறேன். இப்போ கூட என் மனசில் உள்ளதை உன்கிட்டே நான் சொல்லாட்டா, நீ என்னை புரிஞ்சுக்காமலே போயிடுவே. அதான் சொல்றேன். 'பாலு, ஐ லவ்  யூ பாலு. என் மனசு முழுக்க நீதான் இருக்கிறே. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஒன்னோட மட்டுந்தான்" என்று சொல்லி நிவேதிதா நிறுத்த அதிர்ந்து போனான் பாலு.
"என்னங்க சொல்றீங்க? எங்க அப்பா உங்க வீட்டு வேலைக்காரன் !"
" சோ வாட் ?"
" என் மனசில் அப்படி ஒரு எண்ணம் இல்லை. ஏழை தன்னுடைய தலையில் குல்லா வைக்க ஆசைப் படலாம். கீரீடத்துக்கு ஆசைப்படக்கூடாது."
"இந்த  மாதிரி பேசினா அப்புறம் நான் செத்துப் போயிடுவேன்"
" நான் "எஸ்" சொன்னா, அது   உங்க அப்பாவுக்கு செய்கிற துரோகம்"
" இதோ பாரு, என்னோட ஆப்சென்சிலாவது என்னோட அன்பைப் புரிஞ்சுக்கோ. எனக்கு ரொம்பவும் பிடிச்ச நம்பர் பதினெட்டு. படிக்கிறதுக்காக நீ புக்கை திறக்கிறப்போ உனக்கு  "பதினெட்டு" ஞாபகம் வரணும். கூடவே என்னோட ஞாபகமும் வரணும். இப்போ நான் வர்றேன், பை " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பவும் தோழியர் நிற்கும் இடத்துக்கு ஓடி வந்தாள் நிவேதிதா.
"அந்த பாலுகூட உனக்கு அப்படி என்னடி பேச்சு?. சண்டை போடுவே, திட்டிட்டு வருவே அப்படின்னு நினைச்சு நாங்க வேடிக்கை பார்க்க தயாரா இருந்தோம் . நீ போய் குழைஞ்சிட்டு வர்றே?"
"அவன்கிட்டே போய் "ஐ லவ்" சொல்லிட்டு வந்தேன்"
" உனக்கென்னடி பைத்தியமா?"
"பைத்தியம் எனக்கில்லே. இனி பைத்தியம் ஆகப் போறது அவன்தான். இனிமே அவன் புக்கைத் திறந்தா, அதிலுள்ள எழுத்து அவன் கண்ணில் தெரியாது. கலர், கலர் உடையில், வண்ணத்து பூச்சி மாதிரி நான்தான் பறந்து பறந்து வருவேன். இனிமே அவனாவது உருப்படியா படிச்சு பாஸ் ஆகிறதாவது. இவன் பேரை சொல்லிதானே எங்க டாடி என்னை மட்டம் தட்டினார். எங்க டாடி மனசிலிருந்து இவனை தூக்கி எறியறேன். வாங்கடி...அந்த குப்பையைப் பத்தி ஏன் பேசணும். இந்த சந்தோசத்தை ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்" என்று தோழியர் புடை சூழ ஐஸ் க்ரீம் பாருக்குள் நுழைந்தாள் நிவேதிதா.

No comments:

Post a Comment